Header Ads Widget

KEC International Future Growth Analysis 2026 | Power Transmission Boom

நம் இந்தியாவில் நடந்து வரும் மாற்றத்தை நாம் கண்டு வருகிறோம் தொழில்துறையில் குறிப்பாக உற்பத்தி துறை தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருகிறது மேலும் புதிய தொழில் வாய்ப்புகளும் பெருகி வருகிறது.

உதாரணத்திற்கு semicondutors, mobile phones, electronics, Data center என புது வாய்ப்புகள் பெரும் வளர்ச்சியை கண்டும், காணவும் உள்ளது. இத்தகைய மாற்றம் வேறு சில துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பல துறைகள் வளர்ச்சியை காண உள்ளது அப்படி பட்ட துறையை சார்ந்த வெறும் ஒரு sector நிறுவன பங்கை பற்றி தான் நாம் விரிவாக காண உள்ளோம். 

எந்த பங்கு என்ற ஆவல் உங்களிடம் இருக்கும் என்று நம்புகிறேன் மேற்கொண்டு படியுங்கள் பெரும் விளக்கத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக நாம் பார்ப்போம்.

இந்தியாவில் மின்சார தேவை தொடர்ந்து உயர்ந்து வருவதை நாம் காண்கிறோம் இன்றும் கூட வீடுகளில் மின்சார துண்டிப்பு நடப்பதை பார்த்தும் வருகிறோம்.

இந்த மின்சார துறையில் பெரும் முதலீடு தொடர்ந்து பெறும் நிறுவனங்களாலும், அரசாலும் செய்து கொண்டு தான் வருகிறது பல நிறுவனங்கள் solar, wind, Nuclear, coal, gas, biogas, என பல வழிகளில் மின்சார உற்பத்தியை பெருக்கி கொண்டே வருகிறது. 

இது ஒரு புறம் இருக்க இப்படி உருவாக்கப்படும் மின்சாரம் சரியாக பயன்படுத்த படுகிறதா என்று கேட்டால் சந்தேகம் தான் ஏனெனில் பல Power plant மற்றும் solar மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரிய அளவில் வீணாக்கப்பட்டு வருகிறது என்பது தான் உண்மை.

அதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன் இந்தியாவில் grid தட்டுபாடு காரணமாக கடந்த 2025 அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 12% சூரிய மின் உற்பத்தி வீணாகி வருகிறது இது ஏப்ரல் மாதம் 2025 இல் 25GWH ஆக உள்ளது. 

நம் அனைவருக்கும் நன்றாக தெரியும் ஏப்ரல் மாதத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் மின்சார உற்பத்தி உச்சத்தில் இருக்கும். மேலும் 2026 முதல் காலாண்டில் மட்டும் 30gwh மின்சாரம் போதிய மின்சார கடத்தி இல்லாமல் வீணாக்கப்பட்டுள்ளது.

இப்படி உற்பத்தியில் நம் நாடு பெரிய அளவில் கவனம் செலுத்தி உயர்த்தினாலும் மற்றொன்றை செய்ய தவறி பெரும் தவறை செய்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். 

அது தான் grid மின்சாரம் உற்பத்தி செய்ய கூடிய இடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல transmission செய்ய வசதி போதிய அளவில் இல்லை இது ஒரு பெரிய கவலையாக இருந்தாலும் தற்போது நம் நாடு இதில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டது மகிழ்ச்சியான விஷயம் தான்.

தொடரும் மின்சார தேவை இத்தகைய துறையில் பெரும் முதலீடு செய்ய நம் நாடு தயாராக உள்ளது. சுமார் ஒன்பது டிரில்லியன் ரூபாய் கிட்டதட்ட 90பில்லியன் டாலர்கள் இந்த பிரிவில் முதலீடு குவிய உள்ளது. 

இதனால் Power grid முன்னணி நிறுவனம் நம் நாட்டில் பெரும் transmission lines கையில் வைத்துள்ளது. மேலும் pginvit பயனடைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது தவிர Tata Power, Adani போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும். 

இவை மட்டும் தான் பயன் பெறுமா என்ற கேள்வி இருக்கலாம் அது தான் இல்லை இன்னும் பல துறைகள் சார்ந்த நிறுவனங்கள் இதன் மூலம் பயனடையும் வேலை வாய்ப்பு பெருகும் பல நிறுவனங்கள் நல்ல லாப வளர்ச்சி அடையும் அப்படி பல நிறுவனங்கள் இருந்தாலும் இந்த பதிவில் ஒரு நிறுவனத்தை பற்றி மட்டும் தான் பார்க்க போகிறோம் விரைவில் மற்ற நிறுவனங்களை பற்றியும் வாய்ப்பை பற்றியும் விவரமாக பார்ப்போம்.

எல்லாம் சரி நிறுவன பங்கை பற்றி இன்னும் பேச வில்லையே என்ற கேள்வி உங்களின் மனதில் வந்து இருக்கும் ஆனால் இங்கு நிறுவன பெயர் முக்கியமில்லை அடிப்படை புரிதல் மிகவும் முக்கியம் அதை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதே என் நோக்கம். 

போதிய அளவில் எளிமையாக இத்துறையில் உள்ள வாய்ப்பை பார்த்தோம் இப்போது நாம் நிறுவனத்தை பார்ப்போம் எப்படி எதிர்காலம் இருக்கும் என்றும் பார்ப்போம்.

இதில் நாம் KEC INTERNATIONAL நிறுவனத்தை பற்றி தான் பார்க்க போகிறோம்.

Kec international RPG group இன் ஒரு முன்னணி நிறுவனம் இந்திய power sector துறையை பொறுத்தவரை முன்னணி நிறுவனங்களில் ஒன்று பல வேலைகளை Power sector இல் செய்து வருகிறது டிசைன், டெஸ்டிங், மற்றும் முக்கியமான HVDC systems கட்டுமானத்தில் இந்த நிறுவனம் உள்ளது.

மேலும் KEC INTERNATIONAL நிறுவனம் வெறும் power sector இல் மட்டும் இல்லை, civil, SAE TOWER, RAILWAYS, RENEWABLES போன்ற பல துறைகளில் உள்ளது. இருந்தாலும் இதை எல்லாம் விட power sector இல் T&D transmission & distribution துறை தான் பெரும் வருமானத்தை ஈட்டும் துறையாக உள்ளது. 

FY26 இல் சுமார் 68% (15883 கோடி) வருமானம் இங்கிருந்து தான் வந்துள்ளது மேலும் நடந்து முடிந்த காலாண்டில் 56% வருமானம் இங்கு இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு தான் நாம் முதலில் Power sector பற்றி விரிவாக பார்த்தோம் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

High working capital model Middle east கட்டுமான நிறுவனங்களை பொருத்தவரை ரொம்ப முக்கியமான ஒன்று KNRC இல் கூட நாம் பார்த்தோம். 

பல சொத்துகளை விற்று வரும் காலங்களுக்கு தேவையான பணத்தை திரட்டி வருவதை தற்சமயம் middle East பிரச்சனையால் collection delay ஏற்பட்டுள்ளது இதனால் மார்ஜின் பாதிக்கபட்டுள்ளது விரைவில் சரியாகலாம் ஆனால் இதுவும் தற்சமயம் உள்ள பிரச்சினையாக உள்ளது.

கரன்சி மற்றும் அண்டை நாடுகளில் பிரச்சனைகள்

KEC INTERNATIONAL நிறுவனத்திற்கு பெரும்பான்மையான அதாவது 53% வணிகம் கடந்த நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து தான் வந்துள்ளது. கரன்சி ஏற்ற இறக்க பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது அதே போல Middle East போல நடக்கும் பிரச்சனைகள் லாபத்தை குறைக்கவும் செய்யும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

போட்டி தன்மை

அதே போல் நிறுவனத்திற்கு போட்டி மிகவும் பெரிய அளவில் உள்ளது kalpatru power, transrail, worley, ge vernova, இன்னும் பல நிறுவனங்கள் உள்ளன இந்த போட்டியை சமாளிப்பதும் பெரும் சவாலே.

கடன் சுமை

கட்டுமான பணி செய்யும் நிறுவனத்திற்கு கடன் ஒன்றும் புதிதல்ல working capital சில நேரங்களில் கடன் மூலம் வருவதற்கான வாய்ப்பு தான் உள்ளது வேறு வழியும் இல்லை ஆனால் கடனை குறைக்க வேண்டிய அவசியம் கண்டிப்பாக நிறுவனத்திற்கு உள்ளது. 

இப்போது வரை சுமார் 6722 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதனால் வட்டி செலவினங்கள் அதிகரித்து நிறுவனத்தின் லாப விளிம்பு பாதிக்கும்.

வாய்ப்பு இருக்கா??

முக்கிய கட்டத்தில் இப்போது நாம் வந்திருக்கிறோம் ஏனென்றால் பலரும் எதிர்பார்க்க கூடிய விஷயம் இது ஒன்னு தான் வாய்ப்பு இருக்கா?? 

ஆனால் என்னை பொறுத்தவரை இந்த நிறுவனத்தை தொடர்ந்து நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம் தற்போது நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 60% மேல் சரிந்து காணப்படுகிறது. 

20 PE இல் வர்த்தகமாகிறது ஆனாலும் இந்த மதிப்பு நமக்கு சரியானது அல்ல என்பது என் புரிதல். ஆனால் காத்திருக்க ஒரு worth ஆன நிறுவனம் இந்த KEC INTERNATIONAL.







Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

36 Comments

  1. Such a nice article, man. Felt like a story. Thanks for the info.🔥👌 english translation option when?😶

    ReplyDelete
  2. Fantastic article bro..keep it up,thank you❤️😍

    ReplyDelete
  3. Nice article bro thank you for your hard work

    ReplyDelete
  4. Detailed information.. Thanks bro..

    ReplyDelete
  5. Very good valuable information

    ReplyDelete
  6. Thanks for information brother

    ReplyDelete
  7. Super bro. Romba detailed aa elarukum puriyura mathiri simple aa sollitinga. Thanks bro. Continues aa update panunga.

    Bro, Lodha pathi next chapter podunga. Apdiye bajaj electrics pathiyum oru artical podunga

    ReplyDelete
  8. Thankyou for bringing this stock to us bro. Will wait for the right opportunity to get this stock in our portfolio. You are putting a lot of efforts into your videos and articles for the well-being of your viewers. You truly deserve success for that dedication. I sincerely wish you that you will achieve the crore milestone very soon.

    ReplyDelete
  9. Bro i feel happy to read the article, thankyou

    ReplyDelete
  10. Super brother highly educated article very interesting keep going 👍

    ReplyDelete
  11. Periya content ah simple ah explain panni irrukiga bro. Thanks you

    ReplyDelete
  12. நிறுவனத்தையும் அது சார்ந்த துறை பற்றியும் தெளிவான தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி சகோ. இந்தக் கட்டுரை தேவைப்படும் நேரத்தில் மீள் வாசிப்பு செய்து முதலீடு செய்ய முடிவெடுக்க உதவும்.

    ReplyDelete
  13. Do you think the current order book of KEC International is strong enough to sustain revenue growth for the next 3–5 years?

    ReplyDelete
  14. Thanks brother for the information 😊

    ReplyDelete
  15. Good job bro. Opportunity vantha sollunga. Intha sector la Transformers manufacturing stocks yethavathu onnu vaanganumnu aasai but Yellam yeriduchi. ABB, siemens, voltamp, CGPower, BBL nu Yellam watchlist la Iruku bro.

    ReplyDelete
  16. எளிமையான விளக்கம், நன்றிகள் 🙏

    ReplyDelete
  17. Super bro 🔥🔥 thank you for your efforts

    ReplyDelete
  18. Nice article very valuable information thank you for your hard work 🤝

    ReplyDelete
  19. Thank you for detailed information bro 🙌🏻

    ReplyDelete
  20. Very nice. Thank you 🙏🏻

    ReplyDelete
  21. Super bro.you are the young and energetic analyzer.📈🎉

    ReplyDelete
  22. Nice write up. Transrail is looking good but valuations might be expensive, when you get time please investigate. Thanks

    ReplyDelete
  23. Waiting bro. Super 👍 details

    ReplyDelete