Header Ads Widget

KEC INTERNATIONAL, LT, KALPATRU ஏன் கவனிக்க வேண்டும்

எதிர்பார்க்காத வளர்ச்சியை அடைய போகும் பங்குகள்!!




ஈரான் மற்றும் அமெரிக்கா போர் முடிவு ஒப்பந்தம் கையெழுத்து ஆக கூடிய நிலைமையில் உள்ளது இது நடந்தால் பல மாற்றங்கள் மற்றும் நம் இந்திய நிறுவனங்களுக்கு பெரும் சாதகமான நிலை ஏற்பட வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. 

அப்படிப்பட்ட விஷயத்தை பற்றி தான் நாம் விவரிக்க போகிறோம் மேலும் ஏற்கனவே ஒரு பங்கை பற்றி விரிவாக கட்டுரை மூலம் விளக்கி இருக்கோம் சந்தேகம் இருந்தால் அதை மீண்டும் படித்து விட்டு இதை படியுங்கள். மேலும் அதே நிறுவனம் மற்றும் இன்னும் சில நிறுவனங்களின் வளர்ச்சிக்கான சாத்திய கூறுகள் பற்றி தெளிவாக பார்ப்போம்.


இந்த கட்டுரையை எழுதுவதற்கான காரணம் நாம் முன் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்பதே நோக்கம் இந்த போர் முடிவுக்கு வந்தால் வந்த உடன் நம்மால் பெரும் மற்றும் அவசர முடிவை எடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை பல சமயங்களில் வாய்ப்புகள் கிடைக்காமல் போவது தான் வழக்கம். 

சரி ஏன் போரை சுற்றி நான் சிந்திக்கிறேன் என்றால் போரால் நடந்த பாதிப்பு மிகவும் அதிகம் அதை சரி செய்ய கூடிய பெரும் வாய்ப்பு நம் நாட்டு நிறுவனங்களுக்கு ஏற்படும். 

உதாரணத்திற்கு, போரால் பல கட்டுமானங்கள் சேதம் ஏற்பட்டுள்ளது அதை மறு சீரமைப்பு செய்வதில் முதன்மையான பங்கேற்பாளராக இருப்பது நம் நாட்டு நிறுவனங்கள் தான் ஏற்கனவே middle East இல் இருந்து நம் நாட்டு நிறுவனங்கள் infrastructure ஆர்டர்களை வென்று வருகின்றன பல கோடி ரூபாய் வருவாய் இங்கிருந்து பெற படுகின்றன. 

இந்த சூழ்நிலையில் சேதமடைந்ததை சரி செய்ய பெரிய வாய்ப்பாக நமது நிறுவனங்களுக்கு இருக்கும் வருவாய் பெருகும் என்பது என் எண்ணம். 

Middel East Focused Companies

மேலும் Middle East இல் அதிக வருவாய் பெற கூடிய நிறுவனங்களை பற்றி பார்ப்போம்.

1) Larson & Toubro
2) Kalpatru power
3) KEC International

ஒன்றன் பின் ஒன்றாக இந்த மூன்று நிறுவனங்களை பற்றி நாம் விவாதிப்போம் முதலில் நாம் பெரிய நிறுவனத்திலிருந்து ஆரம்பிப்போம்.  

மூன்று முக்கிய நிறுவனங்கள் என் கவனத்திற்கு வந்தவை அதில் ஒன்று மற்றும் தலை சிறந்த நிறுவனமாக L&T உள்ளது சுமார் மூன்றில் ஒரு பங்கு வருவாய் Middle East இல் இருந்து மட்டுமே வருகிறது. 

இதன் விளைவாக நாம் போர் ஆரம்பிக்கும் போது பார்த்தோம் ஒரு நல்ல அடி வாங்கி கீழே இறங்கியது ஆனால் இப்போது அதெல்லாம் சரியாகி பழைய நிலைமைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் எதிர்பார்த்த சரிவு இந்த இடத்தில் ஏற்படாது ஒரு பெரிய ஏமாற்றமாக அமைந்து. 

அடுத்து இரண்டு நிறுவனங்களை பார்க்க போகிறோம் குறிப்பாக சொன்னால் ஒரு நிறுவனத்தை பற்றி அதிகமாக பேச இருக்கிறோம் இறுதியாக அதை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

Kalpatru power ஒரு முக்கிய நிறுவனம் Middle East இந்த நிறுவனத்தை பொறுத்தவரை முக்கிய சந்தை ஏனெனில் 2 வருடங்களுக்கு முன்னர் saudi Aramco EPC projects ஐ செய்வதற்காக தேர்வு செய்து இருந்தது 800 கிலோ மீட்டர்கான phase 3 Master Gas Project EPC திட்டத்தை வென்றது. 

மேலும் ஒரு நல்ல வளர்ச்சியை நிறுவனம் வரும் காலங்களில் எதிர்பார்க்கிறது. இதை பற்றி இன்னும் விரிவாக நேரம் கிடைத்தால் பார்ப்போம். 

தற்போது நாம் KEC பற்றி தான் சிறிது விரிவாக பார்க்க இருக்கிறோம். நாம் ஏற்கனவே KEC INTERNATIONAL பற்றி விரிவாக பார்த்துள்ளோம் எந்த குழுமத்தின் நிறுவனம் இது எங்கெல்லாம் வணிகம் செய்கிறார்கள் என்று படிக்காத நபர்களாக இருந்தால் மேலே search option இல் KEC என்று type செய்யவும் இதை பற்றி தெரிந்து கொள்ளலாம் மேலும் மேற்கொண்டு இருக்கும் எதிர்கால திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

இப்போது நடந்த போர் முடிவுக்கு வரலாம் என்கிற நிலையில் நிறுவனங்கள் ஆர்டர்களை பிடிக்க தயாராக இருக்கின்றன அதில் KEC INTERNATIONAL முக்கிய ஒன்று.

Middle East KEC INTERNATIONAL பொருத்தவரை ஒரு முக்கிய சந்தை தொடர்ந்து ஆர்டர்களை வென்று வருகிறது குறிப்பாக 2025 ஆம் வருடம் 3243 கோடி மதிப்பிலான Transmission ஆர்டர் கைப்பற்றியது மேலும் இது மிகவும் பெரிய ஆர்டர் நிறுவனத்துக்கு. 

அதே வருடம் UAE மற்றும் Kuwait இடம் இருந்து ஒரு 1236 கோடி ரூபாய் ஆர்டர் கிடைத்தது இது போல பல ஆர்டர்களை வென்று முக்கிய நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதை தாண்டி மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது அவர்கள் நுழையாத சந்தையில் வேறு ஒரு வாய்ப்பையும் எதிர்பார்க்கிறது. 

அது தான் ஈரான் கேக்கும் போதே குபீர் என்று இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் நிறுவன தரப்பில் இருந்து வந்த பதில் middle East ஐ போல ஈரான் சந்தையில் நாங்கள் பெரும் வாய்ப்பை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்கள் அதை சரியாக நாங்கள் முன்னோடியாக பயன்படுத்துவோம் என்று தெரிய வருகிறது. 

ஈரான் மீது அமெரிக்க பொருளாதார தடை உள்ளதே எப்படி ஒரு இந்திய நிறுவனம் இதை வாய்ப்பாக கருத முடியும் என்று எண்ணலாம் ஆனால இப்போது போர் நிறுத்ததுடன் சேர்ந்து சில முக்கிய விஷயங்கள் உள்ளன அது தான் இந்த பொருளாதார தடை தளர்வு மற்றும் நாடு முன்னேற்றம் அடைய நிதி வழங்கல் உட்பட சில விஷயங்கள் இதை தான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஈரான் ஒரு மிகப்பெரிய சந்தை Power transmission முதல் Data center வரை பெரும் வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதில் ஒரு சிக்கல் மற்றும் நிபந்தனைகள் உள்ளன நிபந்தனை என்ன என்றால் அணு ஆயுதம் தயாரிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பது தான் இது நடந்தால் பெரும் மாற்றத்தை ஈரான் நாட்டில் ஏற்படும் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிதி உதவி பற்றி கூறினேன் அது எவ்வளவு என்றால் சுமார் 300 பில்லியன் டாலர்கள் அளவில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே போல ஈரானின் வெளி நாடுகளில் உள்ள சொத்துக்களையும் விடுவிப்பதாக கூறப்பட்டு உள்ளன. எல்லாம் சரி ஆனால் தற்போது வரை கையெழுத்து போட படாத நிலை தான் ஏற்பட்டுள்ளது. 

இதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதே நோக்கம். இது நடந்தால் KEC பெரும் வாய்ப்பை பெரும் நிறுவன வளர்ச்சி மிகவும் வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் ஏன் என்றால் LT நிறுவனத்துடன் ஒப்பிடும் போது இது சிறிய நிறுவனம் பெரிய மாற்றம் இந்த சிறு நிறுவனத்தில் ஏற்பட்டால் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என் எண்ணம். 

சரி அடுத்து Middle East project ஐ பற்றி விரிவாக பார்ப்போம் போர் நிறுத்தம் என்ற ஒன்று வரும் முன்னரே அங்கிருக்கும் நிறுவனங்கள் மறு சீரமைப்பு செய்வதில் வேகமாக களம் இறங்கி விட்டன. 

ஏன் அந்த அளவுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது ஈரான் தாக்குதலால் Rystad Energy கூறியது Infrastructure ஐ பழுது பார்க்கும் செலவு மட்டும் 58 பில்லியன் டாலர்கள் இருக்கும் என்று கூறி உள்ளது அதுவும் 25 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பழுது பார்க்கும் பணி உடனடியாக நடக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது. 

அடுத்து, Qatar இல் உள்ள oil Fields Ras laffan gas field இந்த போரின் தாக்குதலின் போது பெரிய இழப்பை சந்தித்து உள்ளது. இது போன்ற பல அவசர தேவைகள் உள்ளன உடனடியாக பயன்களை அடைய இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அதிகம் ஆனால் அமெரிக்க அதிபர் சொல்வதை நம்புவதும் கடினமான ஒன்று தான் போர் முடியும் முடியாத என்பது இப்போது வரை புரியாத புதிராகவே உள்ளது. 

இந்த பதிவில் Middle East மற்றும் ஈரானில் உள்ள வாய்ப்புகளை பார்த்தோம் இதை kec எப்படி பார்க்கிறார்கள் என்று பார்த்தோம். ஆனால் உங்களுக்கு மீண்டும் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். 

Middle East மட்டுமே இல்லாமல் kec நிறுவனம் அமெரிக்கா பிரேசில் ஆப்ரிக்காவில் கணிசமான வர்த்தகத்தை செய்வது மட்டும் இல்லாமல் தொடர்ந்து புது ஆர்டர்களை வென்று வருவது கவனிக்க வேண்டிய விஷயம் மற்றும் இந்தியாவில் நடக்க போகும் POWER TRANSMISSON மாற்றத்தை பயன்படுத்த துரிதமாக செயல் பட்டு வருகிறது. 

இதனால் இந்த நிறுவனத்தில் இருக்கும் மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம் தொடர்ந்து கவனம் இருக்க வேண்டும். ஒரு சில நிறுவனங்களை மட்டும் பார்க்கும் பழக்கம் தான் இங்கு அனைவருக்கும் இருக்கிறது என்பதை நன்றாக என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஆனால் ஒரு சில நிறுவனத்துடன் மட்டும் நம் பயணம் முடிந்து விடாது என்பதை நாம் உணர்ந்து செயல்படுவது மிகவும் முக்கியம். மேலும் என்னுடைய செயல்பாட்டை கவனமாக பார்க்கும் போது உங்களுக்கு தெரியும் வெறும் IT நிறுவனங்கள் FMCG நிறுவனங்கள் என்று இல்லாமல் பல தரப்பட்ட நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நான் விவரித்து கொண்டே வருகிறேன் நமது நாட்டை தாண்டியும் என் தேடல் எவ்வாறு உள்ளது அதன் பயன் பங்களிப்பு எவ்வாறு உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள் அதே போன்ற தேடல் உங்களிடம் வர வேண்டும் என்பதே என் நோக்கமே தவிர நிறுவனத்தை வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்பது என்னுடைய மற்றும் இந்த கட்டுரையின் நோக்கம் கிடையாது என்பதையும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்து இது போல பல விஷயங்களை நாம் கற்று தெரிந்து கொள்வோம் தொடர்ந்து ஒன்றாக பயணிப்போம் உங்கள் Retail Options………….




 


Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

27 Comments

  1. Wow super ultimate explanation about kec international and what are oportunity available in world wide.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே 🙏🏼

    ReplyDelete
  3. Because of you we retail peoples came to know more about business understanding Thank you Nanba

    ReplyDelete
  4. Article informative bro.. Really appreciate your efforts and sharing with retailers.. Defently your information help us to improve and analyse indepth.. please keep it up posting articles.. Thanks a lot bro😍🫶💕

    ReplyDelete
  5. நான் இந்த துறையில் இருக்கிறேன். நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை. போர் முடிந்த பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  6. மிகத் தெளிவான விளக்கம் சகோ... பங்கு சந்தையில் உங்களால் எங்களுக்கு என்ன உதவி செய்ய முடியுமோ ,அது சிறப்பாக செய்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி..

    ReplyDelete
  7. Romba thanks bro, romba useful aa iruku.
    Oru naal ningalaum oru periya famous youtuber aavinga
    Apo engala maranthurathina ❤️

    ReplyDelete
  8. சிறப்பான கட்டுரை. நன்றி நண்பரே

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Your perspective and forecast about these stocks are very good. Keep continuing your research and please keep sharing your knowledge which will be helpful for all your followers. I'm personally benefited because of you (both in Indian & US markets) and really appreciate it!
    I don't know why my profile is showing as anonymous though I've logged in with my google account.

    ReplyDelete
  11. Excellent information.Thank you

    ReplyDelete
  12. இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

    ReplyDelete
  13. Thanks a lot. This is very useful

    ReplyDelete