Header Ads Widget

Nifty50 vs Debt fund vs Direct stocks which is best?


பங்குசந்தையில் முதலீடு செய்பவர்கள் அதுவும் குறிப்பாக நீண்டகால நோக்கத்துடன் முதலீடு செய்பவர்கள் எதிர்பார்ப்பது Returns தான். நான் ஒரு பத்து லட்சம் முதலீடு செய்கிறேன் பத்து வருடத்தில் எவ்வளவு Returns கிடைக்கும் என்ற கணக்குகளை செய்த பின் தான் முதலீட்டேயே தொடங்குகிறார்கள். 

இவ்வாறு செய்யப்படும் முதலீட்டு கணக்கு பெரும்பாலும் நடந்து முடிந்த காலத்தில் எவ்வளவு லாபத்தை அதாவது Returns வழங்கி உள்ளது என்பதை அடிப்படையாக கொண்டு தான் முதலீடை தொடங்குகிறார்கள். 

இப்படி 10 வருடம் அல்லது அதற்கும் மேற்பட்ட வருட முதலீடு செய்பவர்கள் பெரும்பாலும் mutual fund ஐ தான் அதிகமாக தேர்ந்தெடுக்கிறார்கள் காரணம் பெரிய இழப்பு வராது பங்குகளை போல பெரிதாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை நேரம் செலவு செய்ய இயலாதவர்கள் முதல் தேர்வு mutual Fund தான் அதிலும் குறிப்பாக Retail investors இன் முதன்மையான தேர்வே Nifty50 தான். 

Nifty50 Vs Debt Fund

இதன் மேல் இருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாத ஒன்றாக தான் இருக்கிறது ஆனால் அதுவே இப்போது சற்று கேள்வி குறியாக தான் இருக்கிறது அதை பற்றிய விமர்சனங்கள் தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம் பல சுமாரான நிறுவனங்கள் Nifty குள் வந்த வண்ணம் உள்ளது என்ன தான் புகழ் பெற்ற பெரும் நிறுவனங்கள் இருந்தாலும் Nifty50 மேலான நம்பிக்கை சற்று குறைவதை காண முடிகிறது. ஆனால் புதிதாக சந்தைக்கு வந்தவர்கள் நாடும் முதல் இடம் nifty50 தான். ஆயிரம் குறைகள் இருந்தாலும் பல முதலீடுகள் ஒப்பீடு NIFTY50 ஐ சார்ந்தே இருந்து வருகிறது அப்படிப்பட்ட NIFTY50 கடந்த 10 வருட காலத்தில் தந்த Returns 10-13% ஆகும். இது ஒரு நல்ல Returns ஆகவே கருதப்படுகிறது. 

இதை தவிர small cap, midcap, multicap, flexicap, large Cap, என சொல்லி கொண்டே போகலாம் பல விதமான mutual funds உள்ளது ஆனால் பயம் இல்லாமல் தொடர்ந்து பாதுகாப்பாக முதலீடு செய்ய ஒரு தரமான இடமாக nifty50 பார்க்கப்படுகிறது. NIFTY50 ஐ தாண்டி ஒரு பாதுகாப்பான இடம் என்றால் Debt Mutual Fund தான் அப்படி பட்ட இந்த வகையான ஃபண்ட் கிட்டதட்ட Nifty50 க்கு இணையான Return தந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ஒரு நான்கு Debt Funds சுமார் 10% வரை Returns ஐ 10 வருடத்தில் தந்துள்ளது பெரிய விஷயம் தானே ஏன் என்றால் பெரிய Volatile இருக்காது விலையில் நிலையான லாபம் பாதுகாப்பான ஒரு முதலீடாக தான் இந்த Debt Mutual Funds பார்க்க படுகிறது ஆனால் 10% Return அதிகம் அல்லவா எப்படி சாதித்தது Risk இல்லாமல் இது நமக்கு இப்போதைய நிலையில் பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்ற கேள்விகள் வந்து இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் இதை பற்றி பார்ப்போம்.


மொத்தம் நான்கு FUNDS மட்டும் 10% SIP Returns ஐ வழங்கி உள்ளது. மேலும் ஒரு 35 Funds 5 வருட அளவில் பார்க்கும் போது 8% வழங்கியுள்ளது அதே 35 Funds 5 வருடத்தை தாண்டும் போது 23 ஆக குறைகிறது. நீண்ட கால அளவில் Return அளவு குறைகிறது என்பது தான் இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஆனால் இந்த நான்கு Funds எவ்வாறு 10% நீண்ட காலத்தில் எட்டியது என்று பார்த்தால் Risk அதிகமாக எடுத்து இந்த லாபத்தை கொண்டு வந்துள்ளனர். 

நீங்கள் நினைக்கலாம் நல்லது தானே எப்படியோ லாப அளவு உயர்ந்து உள்ளதே என்று ஆனால் Risk இன் அளவும் உயர்ந்து உள்ளதை நாம் கவனிக்க வேண்டும். இந்த நான்கு Funds இல் மூன்று பார்க்கும் போது Credit Risk fund catagory ஐ சார்ந்தது. இன்னொரு Fund medium duration ரகத்தை சார்ந்தது.

Credit Risk catagory

இந்த வகையான category கொஞ்சம் ஆபத்தானது ஏன் என்றால் credit rating குறைவாக உள்ள கடன் பத்திரங்களை வாங்குபவர்கள் இவ்வகையான கடன் பத்திரங்கள் அதிக வட்டி தர கூடிய காரணத்தால் லாபம் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அந்த mutual fund நிறுவனமும் சரியாக விளையாடி லாபத்தை பதிவு செய்துள்ளது ஆனால் எப்போதாவது ஒரு முறை சறுக்க வாய்ப்புகள் அதிகம் அப்போது நமது லாபம் ஒன்னும் இல்லாமல் போக வாய்ப்பு அதிகம். 

இந்த fund இல் இருக்கும் கடன் பத்திரங்கள் அளித்த நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் திவால் ஆகலாம் என்ற நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் இருக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் திவால் ஆனால் அசல் வட்டி இரண்டுக்கும் ஆப்பு நாம் தனியாக இந்த வகையான கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது 100% ஆபத்து அதே நேரத்தில் mutual fund மூலமாக செய்வதால் அசலுக்கு பாதிப்பு பெரிதாக இல்லாமல் போனாலும் வருமானம் பாதிக்க வாய்ப்பு அதிகம் என்பதை புரிய வேண்டும்.

இரண்டு வகையான Risks

ஒன்று நேரடி bond முதலீடு என்னை பல நண்பர்கள் கேட்டுள்ளனர் ஏன் Bond இல் முதலீடு செய்ய மாட்டீர்கள் என்று மேலும் சிறந்த bond பற்றி விரிவாக கூறுங்கள் என்று கேட்டுள்ளனர் இதற்கு தொடர்ந்து நான் கூறிய பதில் bond பற்றி எனக்கு தெரியாது என்று.

எனக்கு ஏன் bond இல் முதலீடு செய்ய ஆர்வம் வரவில்லை என்று கூறுகிறேன் bond இல் அதிக return வேண்டும் என்றால் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டும் இது முதலுக்கே மோசம் என்ற நிலையை உண்டாக்கும் இதே return குறைவாக உள்ள bond முதலீடு போதிய பயனை அளிக்காது என்பது என் எண்ணம் என்னுடைய இந்த கருத்தில் பலருக்கும் மாற்று கருத்து இருக்கலாம் ஆனால் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது முதலீட்டு உலகை பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு முதலீடு விருப்பம் இருக்கும் அது போல எனக்கு bond இல் முதலீடு செய்ய துளி கூட ஆர்வம் இல்லை. 

மேலும் இந்த bond இல் கிடைக்கும் Return ஐ பங்குகள் மூலம் பெற முடியும் என்பது என் எண்ணம் அதுவும் சரியான நேரம் வரும் போது இப்படிப்பட்ட சரியான நேரத்திற்கு காத்திருந்து அந்த பணம் FD வட்டி விகிதத்தில் வளர Liquid fund ஐ தேர்வு செய்து அதில் போட்டு பிறகு பொறுமையுடன் இருந்து நேரம் வரும் போது செய்யும் முதலீடு வெற்றியை தரும் என்பதே என் style. 

இதற்கு நாம் பெரிய அளவில் உழைப்பை போட வேண்டும் உழைப்பை போடாமல் இதை செய்தால் பிறகு நஷ்டம் வரும் முதலுக்கு மோசம் என்ற நிலை உருவாகும். உழைப்பு மற்றும் பொறுமை இது இரண்டும் இருந்தால் நிச்சயமாக வெற்றி உங்களை தேடி வரும். 

சில பேர் கேட்கலாம் சரியான நேரம் வந்து செய்த முதலீடு மேலே செல்லாமல் கீழே இறக்குமே அப்போது நமக்கு எந்த returns ம் கிடைக்காதே இதற்கு bond பரவாயில்லையே என்று நினைக்கலாம் சரி தான் ஆனால் சரியாக தேர்வு செய்ய பட்ட பங்கு ஒரு ரெண்டு ஆண்டுகள் perform செய்யாமல் கீழே சென்று இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எதிர்பார்க்காத வளர்ச்சியை தரும் என்பது என் அனுபவம்.

ரிஸ்க் என்பது ஒன்று தான் ஆனால் அந்த ரிஸ்க் நாம் எங்கே எடுக்கிறோம் என்பதில் தான் நம் வெற்றியே இருக்கிறது. சரியாக யோசித்து பொறுமையுடன் காத்திருந்து தேர்வு செய்வதை வழக்கமாக கொள்ளுங்கள் வெற்றி என்பது உங்களை பின்தொடரும் புரிதலுடன் ஒரு செயலை செய்ய முயற்சிப்பது வெற்றிக்கான வழி அந்த வழி நமக்கான வழி தொடர்ந்து ஒன்றாக பயணிப்போம் உங்கள் Retail Options……





Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

0 Comments