Header Ads Widget

1970 முதல் 1980 வரை ஏற்பட்ட மோசமான நிலை மீண்டும் வரப்போகிறதா??

தற்போது 2026ல் நமது மார்கெட் சரிவிற்கும் 1970 இல் உலக சந்தை சரிந்ததற்கும் ஒற்றுமை காணப்படுகிறது. என்னவென்று பார்ப்போம். 

1970 முதல் 1980 வரை கச்சா எண்ணெய் விலை பல மடங்கு அதிகரித்து உலக நாடுகளில் பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியது. 

Inflation தலை தூக்கியது அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் விலைவாசி உயர்வு மற்றும் gas தட்டுப்பாடு உள்நாடு பிரச்சனை என அனைத்தையும் சந்தித்து. 

அதே சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அப்போது இதில் எந்தெந்த நாடுகள் பிரச்சினையில் ஈடுபட்டதோ அதே நாடுகள் தான் தற்போதும் ஈடுபட்டு வருகின்றன.

1973 இல் அமெரிக்கா சந்தையான dow jones சுமார் 60% சரிந்தது ஆனால் சரிந்த வேகத்தில் மீண்டும் மேல் ஏறியது. பிறகு மீண்டும் 1977 இல் சரிந்து மேலே செல்ல சில காலங்கள் ஏற்பட்டது.


பிரச்சனை ஏன் வந்தது?

1973 இல் இதே இஸ்ரேல் போரின் போது opec நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தியது மேலும்  அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்ட நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தியது. இதனால் கச்சா எண்ணெய் 3 டாலரிலிருந்து 12 டாலராக ஒரு barrel விலை அதிகரித்தது.

பிறகு ஈரானிய புரட்சி அதுவும் அமெரிக்கா காரணமாக ஏற்பட்டது அப்போது ஏற்பட்ட பாதிப்பு கச்சா எண்ணெய் விலை 40 டாலரை தொட்டது. அந்த சமயத்தில் அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டு வருவது போல உள்நாடு எதிர்ப்பு வேலையின்மை விலைவாசி உயர்வு போன்றவை பெரும் மந்த நிலையை உருவாக்கி அரசுக்கு கேட்ட பெயர் ஏற்பட்டவுடன் அதில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பிப்பாய்க்கு 3 டாலரில் இருந்து 40 டாலருக்கு  ஏறியது சுமார் 1000 சதவீதத்திற்கு மேல் விலை உயர்வு ஏற்பட்டது. கச்சா எண்ணெய் மட்டுமில்லாமல் கீழ் வருவன அனைத்துமே உயர்ந்தது. 


மேலும் தங்கம் 

1970 காலகட்டங்களில் ஒரு அவுன்ஸ் தங்கம் 35 டாலரிலிருந்து 800 டாலர் உயர்ந்தது 10 வருடத்தில் 2200 சதவீதம் உயர்ந்தது இந்த காலம் தங்கத்தின் பொற்காலம் என்றும் அழைக்கப்படுகிறது.

இதில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இல்லாமல் வெள்ளி மற்ற உலோகங்கள் தானியங்கள் நிலங்கள் என்று அனைத்தின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு சென்றன. 

விலை உயர்ந்த பங்குகள் வீழ்ச்சி அந்த காலத்தில் எப்போதும் சரிவை காணாமல் தொடர்ந்து மேல் நோக்கி மட்டும் சென்று கொண்டிருந்த நிறுவனங்கள் சரிந்து மிகவும் குறைந்த மதிப்பிற்கு வந்தன. 

மிகவும் பாதுகாப்பான முதலீடு என்று கருதப்படும் பாண்ட் முதலீடு பெரும் சிக்கலை சந்தித்து நிலையான வருமானத்தை எதிர்பார்த்தார்கள் பெரும் துன்பத்தை சந்தித்து வந்தனர்.

ஆனால் இந்த பதற்றமான சூழ்நிலை சரியானதும் கச்சா எண்ணெய் இயல்பு நிலைக்கு திரும்பியது பிறகு மீண்டும் வந்த பிரச்சனைகள் விலையை ஏற்றியது. 

ஆனால் ஏறிய gold silver பிற உலோகங்கள் மற்றவைகள் எதுவும் கீழே இறங்கவில்லை. 

Crude oil ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு குறுகிய காலத்தில் விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருந்தாலும் பிறகு சரிவது நமக்கு வரலாறு தந்த பாடம் அதே போல் தான் பங்குகளும் பிரச்சினையின் போது விலை இறங்கினாலும் எல்லாம் சரியான பின்னர் நல்ல வளர்ச்சியை தரும் என்பதும் வரலாறு நமக்கு கற்றுதந்த பாடம்.

இக்கட்டனா சூழ்நிலையை கையாள முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது புரிதல். அதை சரியாக செய்தால் வாழ்வில் நல்ல வெற்றி உண்டாகும்.







Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

25 Comments

  1. thank you for sharing your knowledge

    ReplyDelete
  2. Thanks bro. Intha artical intha situation aa handle pana romba useful aa iruku. Awareness thanthathuku thanks bro.

    ReplyDelete
  3. Apa market enum crash aaguma bro

    ReplyDelete
  4. Valuable information thank you

    ReplyDelete
  5. நல்ல தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அருமையான ஆய்வு.இதுவரை யாரும் சொல்லாத செய்தி. மிக்க நன்றி தம்பி

    ReplyDelete
  7. Appreciate your efforts bro... KEEP going 💪

    ReplyDelete
  8. Thankyou for the valuable information

    ReplyDelete
  9. Excellent bro..will invest in good stocks during this crisis time..thanks

    ReplyDelete
  10. Hard work bro. New information thanks 🙏🙏🙏

    ReplyDelete
  11. Very good article keep Posting articles like this comparing past events in stock market with current events 🤝

    ReplyDelete