Header Ads Widget

SBI AMC IPO Apply or Not

Mutual funds நாட்டின் இன்றியமையாத முதலீடு முறையாக தற்போது மாறியுள்ளது நேரடியாக முதலீடு செய்பவர்கள் கூட நிச்சயமாக ஏதாவது ஒரு mutual funds முறையில் தொடர்ந்து முதலீடு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். 

இந்த துறையின் வளர்ச்சி எதிர்பார்க்காத வகையில் இருந்தது குறிப்பிடதக்க ஒன்று அதை பயன்படுத்தி நிறுவனங்கள் அதன் பங்கை பொது வெளியில் விற்று பணம் திரட்டும் யுக்தியை கையாண்டு வருகின்றனர். 

உதாரணத்திற்கு, Icici AMC 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பங்குசந்தைகள் நுழைந்தது 2165 ரூபாய் என்ற விலையில் பங்குகளை விற்று பங்குசந்தையில் நுழைந்த ICICI AMC பங்கின் விலை தற்போது வரை உயர்ந்த வண்ணம் உள்ளது இதன் உச்சபட்ச விலை 3611 ரூபாயை எட்டியது தற்போது 3160 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் ஆகி வருகிறது. 

அருமையான வளர்ச்சி பங்கில் ஏற்பட்டுள்ளது. மேலும் ICICI AMC தான் நாட்டின் இரண்டாவது பெரும் AMC நிறுவனம் ஆகும். அடுத்து ICICI AMC க்கு முன் பங்குசந்தைக்கு வந்த இன்னொரு முக்கிய நிறுவனம் Canara Robeco Fund இது பங்குசந்தையில் 266 ரூபாய்க்கு பங்குகளை ஆஃபர் செய்தது ஆனால் listing gain கொடுத்த பிறகு பங்கு பெரிதாக வளர வில்லை இன்னும் சொல்ல போனால் மதிப்பீடு அளவில் நல்ல இடத்திலும் உள்ளது. 

ஆனால் என்ன canara Robeco மிகவும் சிறிய நிறுவனம் வளர்ச்சி வேகம் குறைவாகவும் உள்ளது நன்றாக வளர்ந்த நிறுவனங்கள் உடன் ஒப்பிடும் போது. சரி அடுத்து நாம் எதை விவரிக்க போகிறோம் என்று தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் ஆம் SBI AMC IPO பற்றி தான் இதில் நாம் விரிவாக பார்க்க இருக்கிறோம்.


SBI AMC IPO

  • Market Cap -      1,16,913 Crores
  • IPO Open date - July 14, 2026
  • IPO Close date - July 16, 2026
  • Price band 545 - முதல் 574 வரை
  • Lot size -              1=26 shares
  • OFS/Fresh -         Fully OFS
  • Employee offer-   54rs
  • GMP-                    89rs

இன்றைய தினம் 12/07/2026 அன்று 15.5% listing gain கிடைக்க வாய்ப்பு உள்ளதாக gmp உணர்த்துகிறது. அப்படியானால் 574 ரூபாய்க்கு இருக்கும் பங்கு listing அன்று 663 ரூபாயாக list ஆகும் என்று எதிர்பார்க்கலாம் மேலும் ஒரு lot க்கு 2314 ரூபாய் எதிர்பார்க்கலாம் ஆனால் நினைவில் கொள்ள வேண்டும் இது வெறும் எதிர்பார்ப்பு மட்டுமே உறுதி இல்லை என்று.

Retail investors ஒரு Lot முதல் 13 Lot வாங்கலாம் ஒரு Lot வாங்க 14924 ரூபாய் ஆகும் 13 Lot vaanga 1,94,012 ரூபாய் வரை ஆகும்.

Financials

கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் லாப வளர்ச்சி மிகவும் அருமையாக இருந்து உள்ளது. 2024 ஆம் நிதி ஆண்டில் 2072 கோடி ரூபாய் லாபத்தையும் 2025 ஆம் ஆண்டில் 2540 கோடி ரூபாய் லாபத்தையும் அடைந்து உள்ளது இதில் 2024 மற்றும் 2025 உடன் ஒப்பிடும் போது சுமார் 20% வளர்ச்சி நிறுவனம் அடைந்து உள்ளது. 

2026 ஆம் நிதி ஆண்டில் இந்த லாப வளர்ச்சி நின்று விட வில்லை சுமார் 3067 கோடியாக வளர்ந்து உள்ளது வளர்ச்சி வேகம் மிகவும் அருமையாக இருக்கிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று இதே லாப வளர்ச்சி வரும் காலங்களில் இருக்குமா என்பது தான் நீண்ட கால நோக்கில் பங்குகளை வாங்க நினைக்கும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒன்று இது தான்.

நிறுவனத்தின் அடிப்படைகள்

இந்த பிரிவில் நிறுவனத்தை பற்றிய விவரங்களை நாம் பார்ப்போம்.

SBI AMC நிறுவனம் ஆனது SBI Bank மற்றும் Amundi Assets management நிறுவனத்தின் கூட்டாண்மை ஆகும் இதில் பெரும் அளவிலான பங்குகள் SBI இடம் உள்ளது மேலும் SBI தான் தற்போது பங்குகளை IPO மூலம் விற்க உள்ளது 1.4% பங்குகள் அடங்கும். Amundi சுமார் 36.33% பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.

SBI AMC பல வகையான முதலீட்டு வகைகளை கொண்டு உள்ளது. Equity, Debt, ETF, hybrid Funds, என அனைத்து வகைகளும் அடங்கும் மேலும் நாட்டின் Aum இல் சுமார் 15.4% SBI இடம் தான் உள்ளது.

டிசம்பர்31,2025 கணக்கின் படி QAAUM (quarterly average assets under management) பார்க்கும் போது 12.5 லட்ச கோடி ரூபாயாக உள்ளது. இதே இரண்டாம் இடத்தில் ICICI AMC உள்ளது 11.5 லட்ச கோடி ரூபாய் உடன், 

மூன்றாம் இடத்தில் 9.5 லட்ச கோடி ரூபாய் உடன் HDFC AMC உள்ளது. இவர்கள் தான் இந்தியாவின் முதல் மூன்று நிறுவனங்கள் இந்த Amc தொழிலை பொறுத்தவரை.

அடுத்து சில இடங்கள் எந்த நிறுவனங்கள் உள்ளன என்று பார்ப்போம், Nippon சுமார் 7.4 லட்ச கோடி ரூபாய் உடன் நான்காம் இடத்தில் உள்ளது மேலும் குறிப்பாக ETF என்று வரும் போது மிகவும் பிரபலமான ஒன்று நிப்பான் தான் கோல்ட் பீஸ் நிஃப்டி பீஸ் என்று அனைவரும் தேடும் இடமாக உள்ளது. ஐந்தாம் இடத்தில் kotak mahindra Bank 6லட்ச கோடி ரூபாய் உடன் உள்ளது, ஆறாம் இடத்தில் Aditya birla 4.40 லட்ச கோடி ரூபாய் உடன் உள்ளது.

SBI AMC பிற சேவைகள்

Mutual funds இல்லாமல் பார்க்கும் போது PMS Portfolio management services மற்றும் Sif "Specialized Investment Funds” போன்ற பிரிவுகளில் SBI இன் Market share அதிகம் மேலும் இப்பிரிவில் சுமார் 17 லட்ச கோடி ரூபாய் வரை SBI AMC manage செய்கிறது ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 29 லட்ச கோடிக்கு மேல் பணத்தை இவர்கள் manage செய்கிறார்கள். 

PMS பிரிவில் இவர்களின் Market Share 39% ஆக உள்ளது அடுத்து sif பிரிவில் இவர்கள் market share 61% ஆக உள்ளது. ஒட்டு மொத்த அளவில் SBI கணிசமாக Market share ஐ கொண்டு முதன்மையான நிறுவனமாக உள்ளது. இருந்தும் லாப அளவில் ICICI SBI ஐ விட சிறந்ததாக இருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

மேற்கொண்டு இவர்களின் வளர்ச்சி என்று பார்த்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது ஏன் என்றால் SBI Bank வாடிக்கையாளர்களை Mutual Funds வாடிக்கையாளராக மாற்றுவதை SBI AMC உறுதி பூண்டுள்ளது. இது ஆரம்ப காலத்தில் மந்தமாக இருந்தாலும் வருங்காலத்தில் வளர்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இறுதியாக SBI AMC long-term க்கு இந்த IPO வில் பங்கு பெறுவது சரியா இருக்குமா என்று கேட்டால் சந்தேகம் தான் இந்த பிரிவில் உள்ள நிறுவனங்கள் பெரும் உச்சத்தை அடைந்து உள்ளது இந்த சூழ்நிலையில் நீண்டகால முடிவு எடுப்பது சரியா என்றால் இருக்காது என்பது என் கருத்து. 

அதே சமயம் ICICI AMC உடன் பார்க்கும் போது list ஆன பிறகு இப்போது வரை உச்சத்தில் உள்ளது அதே போல நடக்க வாய்ப்பு இருக்கலாம் ஆனால் உறுதி அல்ல. Listing gain வெறும் 15% தான் உள்ளது அதுவும் சந்தை நிலை பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது. 

பல சிறப்பம்சங்கள் இருந்தும் இந்த துறையில் முதன்மையான நிறுவனமாக இருந்தும் சந்தை மதிப்பு சாதகமா இல்லாத நிலையில் நாம் நம் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும் என்பது என் கருத்து இறுதி நாள் வரை நேரம் உள்ளது பொறுமையாக யோசித்து அன்றைய தினம் அன்று ஒரு முடிவை எடுப்பது நல்லது என்பது தான் என் கருத்து.

இந்த IPO பற்றிய பதிவு நம் வலைதளத்தில் முதலாவது IPO பற்றிய பதிவாகும் தொடர்ந்து இது போல இன்னும் வரும் காலங்களில் வரும் முக்கிய நிறுவனங்களின் IPO பற்றி இன்னும் சிறப்பாக விரிவாக விளக்க முயற்சி செய்வோம்.




Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

7 Comments

  1. சிறப்பு👍மிக்க நன்றி, ப்ரோ😍🫶!!!

    ReplyDelete
  2. Super bro. Further aa IPO pathi ingaye discuss panalam. IPO apply pandramo illayo... But ninga share pana information naala knowledge gain aaguthu. Thanks bro

    ReplyDelete
  3. சிறப்பான தகவல் சகோ

    ReplyDelete