Header Ads Widget

ITC மற்றும் FMCG எதிர்கால வளர்ச்சி


நமது பங்குசந்தையில் தற்போது வரை பெரிய முன்னேற்றம் காணாத ஒரு துறை என்றால் அது FMCG தான் இப்பிரிவில் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் பல ஆண்டுகளாக பெரிதும் ஏற்றத்தை காணாத இடத்தில் தான் உள்ளது ஒரு குறிப்பிட்ட அளவில் மற்றும் ஏற்றத்தை தந்து பிறகு மீண்டு கீழ் நோக்கி வருவதே வேலையாக கொண்டுள்ளது. 

தற்போதும் பல பெரும் நிறுவனங்கள் மிகவும் கீழே உள்ளன இதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் சிலவற்றை சொல்ல போனால் போதிய வளர்ச்சி இல்லாதது ஒரு முக்கிய காரணம் கிராம புறங்களில் விற்பனை கூடினால் நகர் புறங்களில் விற்பனை இல்லை நகர் புறங்களில் விற்பனை கூடினால் கிராம புறங்களில் இல்லை இரண்டு இடத்திலும் விற்பனை கூடினால் மூல பொருட்களின் விலை உயர்வு லாப வரம்பை பாதிக்கிறது இதை தாண்டி வட்டி விகித உயர்வு inflation போன்றவை இந்த துறையை வாட்டி வதைக்கிறது இதெல்லாம் போதாதென்று regional brands unorganised products களின் போட்டிகள் என பல்வேறு பிரச்சினைகள் இந்த துறையின் வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக உள்ளன. இதெல்லாம் உடைத்து நிறுவனம் வளர்ச்சியை நோக்கி சொல்ல பல செயல்களை செய்து வருகிறது. 

அதில் முக்கியமான ஒன்று ஏற்கனவே சில சிறிய நிறுவனங்கள் அல்லது புதிதாக தோன்றி வெற்றிகரமாக வியாபாரம் செய்யப்படும் நிறுவனங்களை வாங்கி இவர்களின் வளர்ச்சியை பெருக்க தற்போது அநேக நிறுவனங்கள் குறிக்கோளாக உள்ளன அதை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் இது FMCG துறையை பொருத்தவரை ஒரு பகுதி தான் இன்னும் நாம் பார்க்க வேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் பலவை உள்ளது நேரம் கிடைக்கும் போது அதை பற்றி விவரிக்கிறேன். தற்போது இந்த பதிவில் புது நிறுவனங்களை கையகப்படுத்தி எப்படி வெற்றியை அடைய பெரும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என்பதை நாம் விரிவாக பார்ப்போம்.


FMCG பங்குகள் நிலைமை

வளர்ச்சி பாதையை பார்க்கும் முன் நாம் தற்போது நிறுவனம் உள்ள நிலையை பார்ப்போம்.

இந்துஸ்தான் யூனிலீவர் இந்தியாவின் முதன்மையான ஒரு FMCG நிறுவனம் இப்பிரிவின் தலைமை நிறுவனம் என்றும் கூறலாம். இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 6 வருட Low இல் வர்த்தகம் ஆகி வருகிறது இடைப்பட்ட காலத்தில் நிறுவன பங்கின் விலை ஒரு உச்சத்தை தொட்டாலும் தற்போது நிலையில் மிகவும் குறைவாக டிரேட் ஆகி வருகிறது. 

அதே சமயத்தில் நிறுவனம் மதிப்பீடு சார்ந்து நாம் பார்க்கும் போது 10 வருட Low இல் வர்த்தகம் ஆகிறது. எப்போதும் பிரீமியம் மதிப்பில் வர்த்தகமாகும் நிறுவனம் ஆன இந்துஸ்தான் யூனிலீவர் கவர்ச்சி கரமான மதிப்பில் வர்த்தகமாவது உண்மையில் சிறந்த விஷயம்.

அடுத்து ITC என்ன தான் சிகரெட் மூலம் முக்கிய வருமான பெரும் ஒரு நிறுவனமாக இருந்தாலும் FMCG இல் தவிர்க்க முடியாத நிறுவனம் அது எந்த விலையில் வர்த்தகம் ஆகிறது என்றும் நாம் அறிந்த விஷயமே

Dabur, Colgate, jyothy Lab, போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் சரிவை சந்தித்து இப்போது கண்டுகொள்ள ஆள் இல்லாத நிலையில் பெரும் சரிவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல முன்னணி நிறுவனங்கள் சரிவை சந்தித்து வந்தாலும் கூட சில நிறுவனங்கள் நல்ல ஏற்றத்தை அடைந்து வருகின்றன. 

அவைகளில் Nestle ஒரு பன்னாட்டு நிறுவனம் முக்கியமானவை உச்சத்தில் வர்த்தகமாகும் முன்னணி நிறுவனம் லாப வளர்ச்சியும் நன்றாக உள்ளது பங்கின் வளர்ச்சியும் நன்றாக உள்ளது. 

அடுத்து Tata consumer இந்த நிறுவனத்தின் பங்கு விலை வளர்ச்சியும் மிகவும் நன்றாக உள்ளது FMCG துறை சிக்கலாக இருக்கும் சூழ்நிலையில் கூட நிறுவன மதிப்பு மிகவும் மிகை படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிட தக்க ஒன்று இது போன்ற இடங்களில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள மறக்க கூடாது.

அடுத்து Marico இந்நிறுவனத்தின் பங்கு விலையும் கிட்டத்தட்ட உச்சத்தில் தான் உள்ளது மதிப்பீடு நாம் மேல் கூறிய FMCG ஜாம்பவான்களான HUL ITC போன்ற நிறுவனங்களை காட்டிலும் மிகை படுத்தபட்டுள்ளது. நிறுவனத்தின் மதிப்பீடு அதிகமாக உள்ளது சரி லாப வளர்ச்சி எவ்வாறு உள்ளது ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை ஆனாலும் பங்கு உச்சத்தில் உள்ளது குறிப்பிடதக்கது. 

Marico Growth

இந்த marico நிறுவனத்தின் பெரும் அளவிலான வருவாய் பெருமளவு தேங்காய் எண்ணெய் சார்ந்தே உள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே நல்ல மார்ஜின் தரக்கூடிய பிரிவும் இது. 

இதை தவிர நாம் மேலே கூறிய படி பார்க்கும் பொழுது நிறுவனம் அவர்களின் வளர்ச்சிக்கு கையகபடுத்தலை முதன்மையாக கொண்டு வளர்ச்சியை நோக்கி வேகமாக பயணிக்கிறார்கள் இது ஒரு முக்கிய காரணம் நிறுவன பங்கின் விலை உயர ஏனென்றால் HUL ITC போன்ற நிறுவனங்கள் என்ன தான் கையகப்படுத்தலை செய்தாலும் வருமானம் உயர்வு மிகவும் பெரிதாக இருக்காது ஏற்கனவே உள்ள வருமான அளவுடன் ஒப்பிடும் போது. 

Hul minimalist என்ற D2c நிறுவனத்தை கைப்பற்றியது பெரிய அளவில் சந்தையில் பேசப்பட்டது அதை மேலும் வளர்த்தெடுக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சுமார் 2700 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய நிறுவனம் minimalist. 

அடுத்து Tata consumer Acquired capital foods நிறுவனத்தை சுமார் 7000 கோடி கொடுத்து வாங்கியது. 

அடுத்து Reliance consumer பல நிறுவனங்களை வாங்கி குவித்தாலும் naturedge beverage என்ற நிறுவனத்தை 8000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது பெரிதாக கருத படுகிறது இந்த கையகப்படுத்துதல் மூலம் நிறுவனம் நல்ல வருவாய் வளர்ச்சியை சந்தித்து வருவது Reliance consumer இல் நன்றாக தெரிகிறது அதை பற்றி நாம் அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

Future Growth

இப்போது இறுதியாக marico நிறுவனத்தின் கையகப்படுத்துதல் மூலம் சாதித்த விஷயங்களை பார்ப்போம் இதன் மூலம் நேரடியாக இந்த கையகப்படுத்தல் எவ்வாறு வெற்றி அல்லது வளர்ச்சியை உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்.

Marico வின் கையகப்படுத்துதலில் Beardo, 4700bc, cosmix, true elements, plix போன்ற நிறுவனங்கள் அடக்கம் இந்த நிறுவனங்கள் 2026 ஆம் நிதி ஆண்டில் எவ்வளவு வருவாய் நிறுவனத்திற்கு ஈட்டி தந்து உள்ளது என்று பார்த்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். 

நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த நிதி ஆண்டில் சுமார் 13,611 கோடி ரூபாய் இதில் இந்த கையகப்படுத்துதல் மூலம் அடைந்த வருவாய் மட்டும் 2375 கோடி ரூபாய் ஆகும். வருவாய் வளர்ச்சி பெருக்குவதில் இந்த முறை மிகவும் சிறந்தது என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Brand இன் அடிப்படையில் நாம் பார்ப்போம் எவ்வளவு வருவாய் லாபம் இதன் மூலம் ஈட்டி உள்ளது என்று.

Plix என்ற Nutrition brand 2023 இல் 58% பங்குகளை வாங்கியது தற்போது இது 60% ஆக உள்ளது இந்த பிராண்ட் சுமார் இரட்டிப்பு வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது 2025 ஆம் நிதி ஆண்டில் 433 கோடி ரூபாய் வருவாயும் 2026 ஆம் நிதி ஆண்டில் 764 கோடி ரூபாய் வருமானம் செய்துள்ளது. மேலும் லாபம் ஐந்து மடங்காக உயர்ந்து உள்ளது 4 கோடியில் இருந்து 26 கோடி ரூபாயக உயர்ந்து உள்ளது.

அடுத்து cosmix 60% பங்குகளை 226 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய நிறுவனத்தின் வருவாய் 915 கோடி ரூபாய் ஆக உள்ளது பதில் 124 கோடி ரூபாய் ஆக உள்ளது வருமானம் மற்றும் லாபம் இரண்டும் இரட்டிப்பாக மாறி உள்ளது. 

ஆனால் இந்த வருமானம் 2026 ஆம் நிதி ஆண்டில் தெரியாது ஏன் என்றால் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் பங்குகளை வாங்கியது அடுத்த 2027 நிதி ஆண்டில் இதன் தாக்கம் கணிசமாக தெரிய வரும்.

அதே போல 4700bc brand ஒரு பிரீமியம் snacks brand இதனை 2026 இல் 227 கோடி ரூபாய் கொடுத்து 2026 ஜனவரி மாதத்தில் வாங்கியது இதன் வருமானம் 120 கோடி ரூபாய் ஆனால் நிறுவனம் நஷ்டத்தில் ஓடுகிறது சுமார் 24 ரூபாய் நஷ்டம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது இதன் வருவாயும் 2027 நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் தாக்கலில் தெரிய வரும்.

இது போன்று இன்னும் சில நிறுவனங்களை வாங்கி உள்ளது beardo, HM snacks true elements போன்ற நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன நல்ல வருவாய் வளர்ச்சியையும் அடைந்து வருகிறது நிறுவனம் ஆன்லைன் விற்பனையிலும் பெரும் கவனத்தை செலுத்தி வருகிறது இது நல்ல வெற்றியை தந்து வருகிறது. இப்படிப்பட்ட பல நிறுவனங்களை வாங்கி தங்கள் எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்து வருகிறது என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

இப்பதிவில் மூலம் நான் கூற வருவது தற்போது FMCG நிறுவனங்கள் கடும் சிக்கலை சந்தித்து வந்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல வளர்ச்சியை அடைய பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. 

இதை நாம் சரியாக அடையலாம் காண வேண்டும் நிறுவனம் கடந்த ஆண்டுகளில் செயல் திறன் குறைவாக உள்ளது என்றும் குறிப்பாக பங்கின் விலை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை என்று நிறுவனங்களை ஒதுக்கும் பழக்கம் நம்மில் பலரிடமும் உள்ளது அதை அப்படி தள்ளி வைத்து விட்டு எதிர்காலத்தை நிறுவன செயல்பாடுகளின் மூலம் கணிக்க முற்பட வேண்டும் என்பதே நோக்கமாகும் இதில் ஒரு நிறுவனத்தின் செயல் திறன் பற்றி நாம் பார்த்தோம் குறிப்பாக கையகப்படுத்துதல் மூலம் அடையும் வளர்ச்சி என்ன சந்தையில் தாக்கம் என்ன என்பதை பார்த்தோம் இது ஒரு சிறிய முயற்சி தான் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. 

இன்னும் நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அதிகம் வெறும் பங்கின் விலையை கருத்தில் கொண்டு நீண்ட காலத்தை கவனத்தில் கொள்ளாமல் எடுக்கப்படும் முடிவுகள் ஒரு போதும் வெற்றியை தராது என்பதை விளக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் மற்றும் என் பதிவின் நோக்கம் நண்பர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது பங்கின் பெயர் வாங்கலாமா? வேண்டாமா? எவ்வளவு ஏறும் என்பது மட்டும் தான் என்று எனக்கு நன்றா தெரியும் ஆனால் அது என் நோக்கம் இல்லை மிகவும் சுபமாக என்னால் ஏதாவது ஒரு வழியில் அதை கூற முடியும் ஆனால் கற்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம் அதற்கவே இந்த கட்டுரை முயற்சி என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் பலருக்கும் படிக்கும் ஆர்வம் கிடையாது ஆனால் வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் முழுமையாக ஒரு 5 நிமிடம் ஒதுக்கி படிப்பார்கள் என்பது என் நம்பிக்கை நீங்கள் ஐந்து நிமிடம் ஒதுக்கு இதை படித்து புரிந்து கொள்ள நான் போட்ட உழைப்பு மிகவும் பெரிது ஆனால் ஒரு கற்றல் உண்டாகும் புரிதல் உண்டாகும் சிலருக்கு என்பதை நினைக்கும் போது இந்த உழைப்பு வீணா வில்லை என்ற மகிழ்ச்சி உள்ளது தொடர்ந்து ஒன்றாக கற்று புரிதலுடன் பயணிப்போம் உங்கள் Retail Options….






Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

29 Comments

  1. Thanks for the information brother.
    Ipo FMGC ella stocksum low la Iruku namma ella stock um purchase panna neraya amount venum, instead of that namma FMCG mutual fund or bees la invest pannalama edachi opportunity iruka?

    ReplyDelete
  2. Super bro details explanation about FMCG

    ReplyDelete
  3. Super analysis. Thanks for sharing the details

    ReplyDelete
  4. Thanks bro. FMCG sector pathi explain panathuku. Engaluku verum 5 mins thaa padika. Aana ninga periya effort poduringa.

    ReplyDelete
  5. HUL, ITC Accumulate panren, FMCG Etf la sip panren

    ReplyDelete
  6. hul innum viluntha nalla erukum bro romba slow ha accumulation panitu eruka

    ReplyDelete
  7. சிறப்பான தகவல் சகோ. தொடர்ந்து பயணிப்போம்

    ReplyDelete
  8. கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி

    ReplyDelete
  9. Thank you for your hard work in dissemination of knowledge about FMCG sector!

    ReplyDelete
  10. Detailed review about important FMCG Shares. Thanks thambi

    ReplyDelete
  11. Thanks for sharing your analysis bro... Detailed article about FMCG sector, good work and helpful to retailers..🫶😍🙏

    ReplyDelete
  12. Ok thank your valuable information

    ReplyDelete
  13. வணக்கம் சார்,

    மிகவும் அருமையான, ஆழமான பதிவு. FMCG துறை தற்போது எதிர்கொள்ளும் சவால்களையும், நிறுவனங்கள் எதிர்கால வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் கையகப்படுத்தல்கள் மற்றும் வணிக உத்திகளையும் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கியுள்ளீர்கள்.

    கடந்த கால பங்கு விலை செயல்பாட்டை மட்டும் வைத்து ஒரு நிறுவனத்தை மதிப்பிடாமல், அதன் எதிர்கால செயல்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளையும் கவனிக்க வேண்டும் என்ற உங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    இவ்வளவு தகவல்களைத் திரட்டி, அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பகிர்ந்து வருவதற்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

    தொடர்ந்து இதுபோன்ற தரமான பதிவுகளை வழங்குங்கள். உங்கள் பதிவுகள் பலருக்கு முதலீட்டு புரிதலையும் சரியான பார்வையையும் உருவாக்குகின்றன.

    நன்றி, வாழ்த்துகள் சார்! 🙏📈

    ReplyDelete
  14. Hope FMCG will gain some momentum in near future. Thankyou for this article bro. Keep growing ❤️

    ReplyDelete
  15. Thanks for ur valuable input bro

    ReplyDelete