Header Ads Widget

Difference Between CAGR vs XIRR vs Absolute Returns


ஒரு முதலீட்டை பொருத்தவரை முக்கியமானது எது? இந்த கேள்விக்கான பதில் அனைவருக்கும் தெரியும் லாபம் (returns) என்று இப்படிப்பட்ட Returns அல்லது லாபத்தை கணக்கிடுவது பலருக்கும் ஒரு கடினமான ஒன்றாக இருக்கலாம் அதை தான் நாம் இங்கு விவரிக்க போகிறோம்.


முதலீட்டு முறை

ஒவ்வொருவரும் அவர்கள் முதலீட்டை பல வழிகளில் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதில் சிலர் ஒரே ஒரு முறை முதலீடு செய்து விட்டு அதை மறந்து விடுவார்கள், சிலர் தொடர்ந்து முதலீடு செய்வார்கள் SIP முறையில் இதில் நாம் செய்த முதலீட்டுக்கு கிடைத்த லாபம் அல்லது Returns ஐ பல வழிகளில் கணக்கிடுகிறார்கள். 

இதில் lumpsum மற்றும் SIP வெறும் mutual funds இல் மட்டும் இல்லை பங்குகளிலும் இதே முறை உள்ளது அதே போல ஒரு click இல் என்ன returns நம்முடைய portfolio கொடுத்துள்ளது என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும் ஆனால் எதற்கு எந்த returns முறையை கையாள வேண்டும் ஒவ்வொன்றின் முக்கியத்துவம் என்ன என்பதை அறிவதன் வாயிலாக நம்முடைய செயல்திறனை நாமே புரிந்து கொள்ள மிகவும் எளிதாக இருக்கும். முதலீட்டு முறையை பற்றி சுருக்கமாக பார்த்தோம் அடுத்து Returns வகைகளை விவரிப்போம்.

Returns type

Returns வகைகளை பொருத்தவரை மூன்று வகைகள் உள்ளன.

  1. Absolute Return
  2. Cagr
  3. Xirr

இவை மூன்றும் தான் நம் அன்றாட முதலீட்டு வாழ்க்கையில் நம்ம சுற்றி வருகிறது மேலும் ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது. இந்த புரிதல் ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடும். இதை வைத்து influencers கள் செய்யும் மாய விளையாட்டு பற்றியும் நாம் இப்போது பார்ப்போம்.

ஒருவர் ஒரு பங்கை பரிந்துரை செய்து இருப்பார் அதை அவர் செய்து 5 வருடங்கள் இருக்கும் அந்த பங்கும் ஒரு ஏற்றத்தை கண்டிருக்கும் அவரும் அதையே பிடித்து கொண்டு பார் எவ்வளவு தூரம் மேல போய் உள்ளது சூப்பரான லாபத்தை கொடுத்துள்ளது multibagger என்று தொடர்ந்து பேசுவார்கள் இதனால் பார்வையாளர்கள் இழுக்க படுவார்கள் ஆனால் அப்படி பெரிது பண்ணப்பட்ட இந்த லாபம் உண்மையில் எவ்வளவு Returns கொடுத்திருக்கும் என்று யாரும் கவனிக்க மாட்டார்கள் இந்த வகையான Returns absolute return என்று அழைக்கப்படுகிறது. 

உதாரணத்திற்கு 2021 இல் ஒரு பங்கு 100 ரூபாய் இருந்திருக்கும் இப்போது 2026 இல் அது 300 ரூபாயில் இருக்கும் இதில் return என்று பெரிதாக உங்கள் முன் வைக்கப்படுவது 200% லாபம் அல்லது Return இது தான் காட்சிப்படுத்தபடுகிறது இது தான் absolute returns. 

ஆனால் இதை CAGR அடிப்படையில் பார்த்தால் Returns 14% தான் வருடத்திற்கு நமக்கு கிடைத்திருக்கும். 14% குறைவு இல்லை நல்ல returns தான் ஆனால் இங்கு influencer களால் முன் வைக்கப்படும் லாபம் 200% இது அவர்கள் நமக்கு வைக்கும் பொறி இது ஒரு வகை அடுத்து இன்னொரு வகை உள்ளது அது தான் மிகவும் மோசமான வகை அதில் பலரும் புரிதல் இல்லாமல் சிக்கி தவிக்கின்றனர்.

இது நமது Broker எளிதாக நமக்கு காட்டும் ஒரு Returns வகை அதையும் ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம். மேலே கூறிய முதலீட்டு முறையை விட வேறுபட்டு இருக்க கூடியது ஏனெனில் இந்த வகை உண்மையை தோலுரித்து காட்ட கூடிய ஒன்றாக உள்ளது. 

ஒருவர் ஒரு பங்கை 100 ரூபாய்க்கு பரிந்துரை செய்கிறார் அதே பங்கு 120 ரூபாய் போகிறது அப்போதும் பரிந்துரை தொடர்கிறது அதே பங்கு 150 ரூபாயை தொடுகிறது அப்போதும் பரிந்துரை செய்ய படுகிறது அதே பங்கு 230 ரூபாய் போகிறது அப்போதும் பரிந்துரை செய்ய படுகிறது. 

தொடர்ந்து இவ்வாறு நாம் ஒரு பங்கை அடிமட்ட விலையிலும் வாங்குகிறோம் துரத்தி பிடித்து உச்சத்தில் கூட வாங்குகிறோம் தொடர்ந்து வாங்கும் போது நமது ஆவரேஜ் விலை முதலில் வாங்கிய விலையில் இருந்து கண்டிப்பாக உயர்ந்திருக்கும் அல்லவா நிச்சயம் 150 ரூபாய்க்கு மேல் போய் இருக்கும் அதே பங்கு கீழே இறங்கி ஒரு 150 ரூபாய்க்கு வந்தால் நம் லாபம் எவ்வளவு ஒன்றுமே இருக்காது ஆனால் இப்படி பல விலைகளில் பரிந்துரை செய்தவர்கள் பங்கின் விலை வீழ்ச்சிக்கு பிறகு முதலில் கூறிய 100 ரூபாய் என்ற மதிப்பை மேற்கோள் காட்டி இன்னும் வாங்கிய விலைக்கு வர வில்லை என்று கூறுவார்கள் ஆனால் உண்மை என்ன நமக்கு எந்த லாபமும் இந்த முறையில் கிடைத்திருக்காது அப்படிப்பட்ட சிக்கலான தொடர் SIP இல் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும் என்பதை காட்டுவது தான் XIRR என்ற Returns வகை இது தான் Retail investor-ஐ பொறுத்தவரை மிகவும் முக்கியமான ஒன்று தொடர் SIP எந்த விலையிலும் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று இந்த XIRR தான் இதை கவனிக்காமல் நாம் முதலில் வாங்கிய விலையை மட்டும் பார்த்து நல்ல லாபம் என்று கருதினால் அது நம் இழப்பு மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Absolute returns

இந்த வகையான return முக்கியம் இல்லையா என்ற கேள்வி இருக்கலாம் முன்னரே கூறிய படி முக்கியம் தான் குறிப்பாக நாம் செய்யும் முதலீடு 1 வருடம் அல்லது அதற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த absolute return தான் உண்மையான வருவாய் இதே ஒரு வருடத்தை தாண்டினால் இந்த வகையான Return அடிப்படையில் நாம் பார்ப்பது வீண் என்றே கூறலாம். Swing traders இந்த வகையான Return அடிப்படையில் தான் பெரிதும் இயங்குவார்கள் அவர்களுக்கு இது தான் சரியான வகை.

CAGR வகை

இந்த வகை returns Long-term தான் ஆனால் ஒரு முறை முதலீட்டுக்கு மட்டுமே சிறந்தது மேலும் mutual funds தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏன் என்றால் mutual funds ஐ தேர்வு செய்யும் retail investors இந்த CAGR அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை இதுவும் ஒரு தவறான முறை என்பதை strong ஆக கூறுவேன் ஏன் என்று விளக்கமாக பார்ப்போம். 

மேலே நாம் பார்த்தோம் பங்குகளில் என்ன தவறுகள் நடக்கிறது Returns அடிப்படையில் என்று அதே தான் mutual funds இல் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு Retail investors ஒரு mutual fund இல் தானாகவே அல்லது பரிந்துரையின் பெயரிலோ முதலீடு செய்ய முடிவு எடுத்தால் முதலில் போய் பார்பது CAGR எவ்வளவு என்பது தான் வேறு எதுவும் பார்க்க மாட்டர்கள் 90 சதவீத retailers அது பெரும் தவறு CAGR return நாம் வாங்கும் இருந்த வளர்ச்சி விகிதம் நாம் வாங்கிய பிறகும் இதே வளர்ச்சி வேகம் இருக்கும் என்று கருதி வாங்குகிறார்கள் இது மிகவும் தவறான முடிவு இவ்வாறு முடிவு செய்து தான் small cap தான் மிகவும் சிறந்தது என்று போகிறார்கள் அதை நிச்சயமாக நம்மால் திருத்த முடியாது ஆனால் பங்கு சந்தை ரொம்ப மோசமானவன் எனக்கு காலை வருகின்றான் என்று அவனுக்கே தெரியாது. 

எளிதாக CAGR நாம் ஒரு லட்ச ஒரு fund இல் முதலீடு செய்துள்ளோம் 5 வருடம் கழித்து அதே fund இல் வேறு முதலீடு செய்யாமல் இருந்தால் நம் ஒரு முறை முதலீடு செய்த பணம் எவ்வளவு வளர்ந்து இருக்கும் என்பதே ஆகும் இதில் டிவிடெண்ட் என அனைத்தும் அடங்கும்.

ஆனால் நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்றால் அது Xirr தான் நம்மில் பலரும் sip செய்பவர்கள் சிலர் அவ்வபோது தன்னிடம் உள்ள பணத்தை முதலீடு செய்பவர்கள் அவ்வாறு தொடர்ந்து முதலீடு செய்து உங்களுடைய முதலீட்டு முயற்சி பலன் அளித்ததா என்பது இதன் மூலம் தான் தெரியும் குறிப்பாக தனி பங்குகளில் முதலீடு செய்பவர்கள் இதை பின்பற்றி அவ்வபோது கவனிப்பது மிகவும் முக்கியம் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

இந்த பதிவில் Returns அடிப்படையாக கொண்டு எவ்வாறு game விளையாடுவார்கள் என்றும் அதை நான் எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் எவ்வளவு வகையான Returns உள்ளது எது எதற்கு முக்கியம் என்பதை எல்லாம் நாம் அறிந்து புரிந்து இருப்போம் என்று நம்புகிறேன். புரிதலுடன் தொடர்ந்து ஒன்றாக பயணிப்போம் உங்கள் Retail Options……





Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

7 Comments

  1. Super bro and thank you for your efforts 🙏

    ReplyDelete
  2. Useful information bro. Thanks.

    ReplyDelete
  3. எதிர்பார்த்த ஒன்று மிக்க நன்றி ♥️

    ReplyDelete
  4. வணக்கம் சார்.

    இந்தக் கட்டுரை மிகவும் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளது. படிக்க மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதுபோன்ற தரமான மற்றும் பயனுள்ள கட்டுரைகளை தொடர்ந்து வழங்கி வருவதற்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    ஒரு சிறிய ஆலோசனை. நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் நண்பர்கள் பெரும்பாலும் ஒரு அல்லது இரண்டு, அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் இந்தக் கட்டுரையைப் படித்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். அதன் பிறகு அந்தப் பக்கங்களில் விளம்பரங்களைச் சேர்க்கலாம். புதிய பரிந்துரைகள் மூலம் வருபவர்களுக்கு அந்த விளம்பரங்கள் சென்றடையும் வகையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

    இது என்னுடைய சிறிய ஆலோசனை மட்டுமே.

    நன்றி. வணக்கம்.

    ReplyDelete