முதலீட்டாளர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகத்தனமான எப்போதும் இதில் வாய்ப்பு உள்ளது கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் என்று ஒரு பங்கு உள்ளது என்றால் அது ITC தான் வேறு எந்த ஒரு பங்கையும் முதலீட்டாளர்கள் இந்த ஒரு இடத்தில் வைத்து பார்த்தது இல்லை என்பது தான் உண்மை அப்படிப்பட்ட பங்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரும் ஏமாற்றத்தை தந்து பெரும் சோகத்தில் ஆழ்த்தியது இது மறுக்க முடியாத உண்மை உச்சத்தில் விரும்பி வாங்கப்பட்ட பங்கு விலை வீழ்ச்சியில் சிறு குறு முதலீட்டாளர்கள் அஞ்சி நடுங்க வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
தொடர்ந்து சரிந்து வருவதால் நம்பிக்கை இன்றி தற்போது பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்காவே இப்போது ஒரு நல்ல செய்தியை தந்து உள்ளது.இந்த செய்தி மிகவும் முக்கியம் ஏன் என்றால் சிறு முதலீட்டாளர்கள் மனதில் ஆழமாக ஒரு கருத்தை விதைத்து நம்பிக்கை ஏற்படுத்திய அந்த ஒரு கருத்தை பற்றி தான் இப்போது விவரிக்க போகிறோம்.
அந்த கருத்து என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருப்பீர்கள் அது தான் FMCG பிம்பம் இந்த கதையை தொடர்ந்து சொல்லி ITC என்றாலே FMCG தான் என்றும் வேறு எந்த தொழிலை பற்றியும் பேசாமல் சொல்லி சொல்லி கெடுத்தார்கள் அந்த சமயமே தொடர்ந்து பேசி வந்தோம் இது FMCG இல்லை cigarette என்று ஆனால் கேட்க ஆளில்லை தற்போது திட்டம் இல்லாமல் இங்கு சிக்கியுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.
சரி அதற்காக FMCG ஒன்றும் இல்லையா என்று கேட்டால் நிச்சயமாக FMCG ITC இன் முக்கிய பிரிவு ஆனால் அதை நாம் மிகைப்படுத்தி பார்பது நம்மை நாமே ஏமாற்றுவது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் இப்போது நடந்த வீழ்ச்சியில் என்ன தான் FMCG முக்கிய பிரிவு என்றாலும் cigarette தான் ITC இன் முதுகெலும்பு அதில் ஏற்பட்ட அடியின் விளைவு இப்போது வரை உள்ளது. இதே போல ஒரு சிக்கல் FMCG இல் ஏற்பட்டிருந்தால் இந்த வீழ்ச்சி வந்திருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இருக்காது இறுதியாக ஏன் என்பதை சொல்கிறேன் அதற்கு முன் நல்ல செய்தியை விவரிப்போம்.
ITC FMCG
இன்று ITC இடம் வந்த பெரிய update FMCG பற்றி தான் என்ன என்றால் 2026 ஆம் ஆண்டு நிதியாண்டில் வாடிக்கையாளர்கள் ITC நிறுவனத்தின் FMCG பிரிவில் சுமார் 37000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
ITC FMCG
இன்று ITC இடம் வந்த பெரிய update FMCG பற்றி தான் என்ன என்றால் 2026 ஆம் ஆண்டு நிதியாண்டில் வாடிக்கையாளர்கள் ITC நிறுவனத்தின் FMCG பிரிவில் சுமார் 37000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
இது 2023 ஆம் நிதியாண்டில் 29000 கோடி ரூபாய் ஆகவும் 2024 ஆம் நிதியாண்டில் 32500 கோடியாகவும் 2025 ஆம் நிதியாண்டில் 34000 கோடியாகவும் உள்ளது. மேலும் 28 கோடி வீடுகளில் ITC தயாரிப்புகள் நுழைந்துள்ளது. இது மிகப்பெரும் விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை.
நாம் இப்போது பார்த்தது வரி, மார்ஜின் உட்பட அனைத்தும் சேர்த்து ITC இன் தயாரிப்பை வாங்கிய கணக்கு அடுத்து நாம் பார்க்க இருப்பது இந்த FMCG மூலம் எவ்வளவு வருவாய் கிடைத்தது என்பதை பார்ப்போம்.
Segment revenue
நடந்து முடிந்த 2026 ஆம் நிதியாண்டில் 24209 கோடி ரூபாய் வருமானம் FMCG மூலமாக வருவாய் ஈட்டி உள்ளது. இது 10% வளர்ச்சியாகும் ITC இன் FMCG products பல பிரிவில் முன்னணியில் உள்ளது இதில் முக்கிய ஒன்று Ashirvad Atta தொடர்ந்து இந்த பிரிவில் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறது.

அதே போல நொறுக்குத்தீனியான bingo இந்த பிரிவில் முதல் இடத்தில் இருக்கிறது biscuit பொருத்தவரை குறிப்பாக cream biscuits பிரிவில் முன்னணியில் உள்ளது classmates notebook கூட முதல் இடத்தில் உள்ளது.
FMCG PROFIT
ITC இன் FMCG பிரிவின் லாபம் மற்ற FMCG நிறுவனங்கள் உடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு மார்ஜின் இங்கு மிகவும் குறைவு குறிப்பிட்டு சொல்ல போனால் மற்ற நிறுவனங்கள் உடன் ஒப்பிடும் போது பாதி அளவு தான் மார்ஜின் உலகு இது வளர இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.
அடுத்து ரெண்டு முக்கிய பிரிவு ஒன்று அகர்பர்த்தி இன்னொன்று நூடுல்ஸ் இந்த பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளதும் குறிப்பிடதக்கது. FMCG பிரிவு தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருவது மிகவும் நல்ல விஷயம் தானே இதை தாண்டி இந்தியாவில் no1 FMCG என்ற இடத்தை அடைவதை லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது அதற்கு ஒரு உதாரணம் கிட்டதட்ட 100 புது products ஐ கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளது தொடர்ந்து இந்த பிரிவை வளர்த்து எடுக்க தொடர்ந்து முதலீடு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
FMCG போட்டி
நமது நாட்டில் FMCG பிரிவில் கடும் போட்டி உள்ளது என்பது நாம் அறிவோம் organized and unorganized என்று ஒரு பக்கம் போட்டி ஓடி கொண்டிருக்கிறது இன்னொரு பக்கம் பெரும் நிறுவனங்கள் கடுமையாக போட்டி போடுகின்றன.

ITC-ஐ பொருத்தவரை ஒரு பக்கம் ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வாங்கி வளர்த்தெடுக்கும் முயற்சியிலும் இன்னொரு பக்கம் புது products ஐ வெளியிட்டும் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டுள்ளது.
அதே தான் மற்ற நிறுவனங்கள் மிகவும் aggressive ஆக செய்து கொண்டு வருகிறது அதிலும் குறிப்பாக reliance நிறுவனம் மீண்டும் ஒரு எண்ணம் வரலாம் இப்போது ஏன் Reliance-ஐ தூக்கி பிடிக்க வேண்டும் என்று நினைக்கலாம் ஆனால் FMCG பிரிவில் இவர்கள் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது 2026 நிதியாண்டில் 22000 கோடி வருவாய் ஈட்டி உள்ளது இவர்களின் திட்டம் புது brand சொந்தமாக உருவாகுவதை விட ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வாங்கி வளர்ச்சியை வேகமாக அடைய முயற்சி செய்து வருகிறது. இப்படிபட்ட போட்டியும் உள்ளது என்பதை அறிய வேண்டும்.
FMCG PROFIT
ITC இன் FMCG பிரிவின் லாபம் மற்ற FMCG நிறுவனங்கள் உடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு மார்ஜின் இங்கு மிகவும் குறைவு குறிப்பிட்டு சொல்ல போனால் மற்ற நிறுவனங்கள் உடன் ஒப்பிடும் போது பாதி அளவு தான் மார்ஜின் உலகு இது வளர இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.
இவர்களும் விற்பனையை பெருக்க லாப வரம்பை தியாகம் செய்யும் வணிக மாடலாக தான் உள்ளது இது கவனிக்க வேண்டிய விஷயம்.
ஏற்றுமதி வணிகம்
ITC ஐ பொருத்தவரை எந்த அளவுக்கு உள்நாட்டில் FMCG பிரிவு விற்பனையில் கவனம் செலுத்துகிறதோ அதே அளவுக்கு ஏற்றுமதி செய்யும் பிரிவிலும் கவனம் செலுத்துகிறது நம் நாட்டின் பல நிறுவனங்கள் இப்போது ஏற்றுமதியை மிகவும் கவனம் செலுத்துகிறது இது நல்ல வளர்ச்சியையும் மேலும் இந்திய நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களாக பெரும் வளர்ச்சியை சந்திக்கவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இது மேலும் ITC இன் எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்யும். இப்படிபட்ட செயல்பாடுகள் இருந்தும் ஏன் இப்போதைக்கு இது முக்கியம் இல்லை என்று நாம் பார்ப்போம்.
ITC FMCG பிரிவு சிறப்பாக செயல்பட்டாலும் லாப அளவில் இன்னும் முன்னேற சில ஆண்டுகள் காலம் பிடிக்கும் மேலும் FMCG பிரிவை நாம் தனியாக பிரித்து பார்த்தால் மற்ற நிறுவனங்களை காட்டியும் உயர்ந்த மதிப்பில் இருக்கும் FMCG தனியாக பார்க்கும் போது ஒரு Valuations சிறப்பாக இருக்காது இது ஒரு முக்கிய point.
அடுத்து சிகரெட் பிரிவு ஒட்டு மொத்தமாக gross revenue பார்க்கும் போது 80867 கோடி ரூபாய் விற்பனையாக உள்ளது நிகர வருமானம் 37099 கோடியாக உள்ளது.

லாப வரம்பு அதிகம் மேலும் லாபமும் பெரிதளவில் இந்த பிரிவில் இருந்து தான் வருகிறது இது அனைவருக்கும் தெரிந்தாலும் கூட பலரும் இதை FMCG ஐ மையமாக கொண்டே முடிவுகளை எடுத்து வருகின்றனர் அதன் விளைவுகளை இப்போது நன்றாக உணர்ந்திருப்பார்கள் சிகரெட் தொழில் ஏற்பட்ட சிறிய அடி எவ்வளவு பெரிய விளைவை உண்டாக்கியது என்று.
FMCG முக்கியம் தான் அதற்காக எல்லா சூழ்நிலையிலும் அதை மட்டுமே மையமாக கொண்டு நாம் முடிவு எடுத்தால் சரியாக அமையாது என்பது என் கருத்து. சரி அடுத்து என்ன என்ற கேள்வி இருக்கும் அதை விவரிப்போம்.
Next ITC?
Cigarette பிரச்சனையை ITC கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்து வருகிறார்கள் விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் அதே போல FMCG பிரிவு வருவாய் வளர்ச்சியை பார்த்தோம் நன்றாக உள்ளது.
Next ITC?
Cigarette பிரச்சனையை ITC கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்து வருகிறார்கள் விரைவில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் அதே போல FMCG பிரிவு வருவாய் வளர்ச்சியை பார்த்தோம் நன்றாக உள்ளது.
மேலும் சில ஆண்டுகளாக நன்றாக இல்லை performance இந்த செய்தி சற்று முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்று எதிர் பார்க்கிறேன் சற்று ஒரு முன்னேற்றம் ஏற்படலாம் என்று எண்ணுகிறேன்.
ஆனால் நாம் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன் எதற்கும் தயாராக முன்கூட்டியே எதிர்பாராததை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் அப்போது தான் எதிர்பாராதது நடக்கும் போது நாம் எதிர்பார்த்த படி விஷயங்களை செய்ய முடியும் என்று நம்புகிறேன்
தொடர்ந்து இங்கு நடக்கும் மாற்றங்களை பற்றி நாம் பார்த்து கொண்டே தான் இருக்க போகிறோம் நிறுவனத்தில் நடக்கும் மாற்றத்தை கவனமாக பார்ப்போம் அது நமக்கு ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்தும் ITC தானே நமக்கு நன்றாக தெரியும் என்று அசால்ட்டாக விட்டு விட கூடாது தற்போது அதன் தாக்கம் என்ன என்று நாம் கண்டிருப்போம் தொடர்ந்து உழைப்போம் திட்டத்தை சரியாக உருவாக்கி அதை செயல்படுத்தி வெற்றி பெறுவதை நாம் நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும் என்பதே என் நோக்கம். தொடர்ந்து ஒன்றாக பயணிப்போம் உங்கள் Retail Options……
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

17 Comments
Thanks for useful information brother
ReplyDeleteசிறந்த பதிவு.வாழ்த்துகள்
ReplyDelete♥️👍
ReplyDeleteThanks bro your ITC update and your support
ReplyDeleteThanks bro your ITC update and your support
ReplyDeleteSuperb bro...thank you 👏
ReplyDeleteசிறப்பான தகவல் சகோ
ReplyDeleteதெளிவான ஆழமான பதிவு! வாழ்த்துக்கள்
ReplyDeleteOk தொடர்ந்து ஒன்றாக பயணம் செய்வோம்
ReplyDeleteI agree your point super explanation step by step. We will continue with retail option always
ReplyDeleteSuper bro.
ReplyDeleteThanks bro
ReplyDeleteVanakkam 🎉🎉🎉 thanks bro
ReplyDelete🙏👍
ReplyDeleteநல்ல புரிதல் குடுத்து இருக்கு.. நன்றி ❤️ சகோ
ReplyDeleteThank you
ReplyDeleteNandri Bri
ReplyDelete