Header Ads Widget

Eli Lilly's Foundayo pill approved!! Novo Nordisk பிரச்சனை ஆரம்பம்??

Eli Lilly-ன் weight loss pill-க்கான ஒப்புதலை USFDA வழங்கியது அந்நிறுவன பங்கை ஒரே அடியாக தூக்கியது. 

இந்த approval பற்றி நாம் பலமுறை பேசியுள்ளோம். சரியாக எதிர்பார்த்த நேரத்தில் Lilly அதன் weight loss pill-ஐ அமெரிக்க சந்தையில் களம் இறக்கியது. 

இது Novo Nordisk-ன் Wegovy pill உடன் போடப்போகும் போட்டி பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.


Foundayo (pill)

முதலில் இந்த weight loss pill-ஐ பற்றி பார்ப்போம். இந்த pill-ன் molecule ஆன orforglipron Eli Lilly சொந்தமாக கண்டுபிடிக்கவில்லை மாறாக ஜப்பானை சேர்ந்த Chugai என்ற ஒரு மருந்து நிறுவனத்திடம் இருந்து global உரிமத்தை வெறும் $50மில்லியன் முன்பணமாக கொடுத்து 2018-ல் வாங்கியுள்ளனர். 

ஆனாலும் இதன் வளர்ச்சி zepboundக்கு இணையாக வருமா என்றால் சந்தேகம் தான் என்கின்றனர். 

இருந்தாலும் பல ஆய்வாளர்களும் இதன் விற்பனை 2030க்குள் $15பில்லியனை தொடும் என்றும் கணித்துள்ளனர். அவ்வாறு நடந்தால் இது மிகப்பெரும் வெற்றி என்று சொல்லலாம். 

ஏனெனில் மிக குறைந்த விலையில் வாங்கி உலகெங்கும் விற்பனை செய்து நல்ல லாபத்தை குவித்தால் சாதனை தானே இப்போது முதல் கட்டமாக அமெரிக்காவிலும் பிறகு 50 நாடுகளில் விற்பனை செய்ய திட்டம் செய்யப்பட்டுள்ளது. இந்த foundayo pill-ஐ Wegovy pill உடன் ஒப்பிடும் போது எவ்வாறு செயல்படும் என்பதை பற்றி பார்ப்போம்.


Foundayo vs Wegovy

இந்த foundayo Wegovy pill உடன் ஒப்பிடு செய்வதற்கு முன் zepbound weekly one shot pen உடன் ஒப்பிட்டால் இடை குறைப்பு மிகவும் குறைவு தான். 

ஆனால் பொதுவாக injection உடன் ஒப்பிட்டால் pill-ன் திறன் சற்று குறைவாக தான் இருக்கும்.

சந்தையில் Wegovy முதல் ஆளாக Weight loss pill-ஐ அதனுடைய பழைய பெயரிலேயே வெளியிட்டுள்ளது சாதகமா இருந்தாலும் வெளிவந்த 3 மாதத்திற்குள் போட்டியாளர் களத்தில் குதித்தது சற்று பின்னடைவு தான். 

இருந்தாலும் இந்த March மாதத்தில் மட்டும் 6,00,000 prescription-ஐ தாண்டி 

முன்னோடியாக இருக்கிறது. மேலும் Eli Lilly-ன் Foundayo வின் weight loss 12.4% ஆக உள்ளது Wegovy சுலபமாக இதை தாண்டி முன்னிலையில் உள்ளது. Wegovy உடன் Weight loss 16.6% ஆக உள்ளது. 

இந்தபோட்டி தற்போது Novo Nordisk-க்கு சாதகமா உள்ளது. இருந்தாலும் Eli Lilly-ன் பங்கு இன்று 5% வரை ஏற்றுள்ளது ஆனால் இதே போன்ற சூழ்நிலை Novo சந்தித்த போது பங்கும் பெரும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

இதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியவை சந்தையில் சில நேரம் இந்த மாதிரியான சரிவு ஏற்படலாம் ஆனால் நாம் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.




Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

16 Comments