Header Ads Widget

Utkarsh Small Finance Bank Financials, Growth & Future Outlook”

இந்த பதிவில் Utkarsh small finance bank இன் தற்போதைய நிலை எதிர்கால செயல்திட்டம் பற்றி தான் நாம் விரிவாக காண உள்ளோம். 

பங்குசந்தையை பொறுத்தவரை large Cap வங்கி பங்குகளை விட இத்தகைய small finance bank பங்குகளின் மதிப்பு மிகைப்படுத்தப்பட்டதாக இருந்து வந்தது ஆனால் என்னிக்கு அவர்களின் சொத்துக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதோ அதோடு இத்தகைய small finance bank-க்கு கிடைத்த பிரீமியம் மதிப்பு காற்றில் கரைக்கப்பட்டது. 

தற்போது பங்குகள் பெரிதளவில் சரிந்து அடிமாட்டு விலைக்கு வந்து நிற்கின்றன. இதில் வெறும் small finance bank-க்கு மட்டும் இந்த பிரச்சனை இல்ல சிறிய NBFCகளுக்கும் இதே பிரச்சனை தான் ஏன் என்றால் இவர்கள் அதிக வளர்ச்சிக்காக பாதுகாப்பில்லாத கடன்களை வழங்கி வந்தனர்.

அதன் விளைவு தற்போது வாரக்கடன் பிரச்சினை தலைவிரித்து ஆடுது இத்தகைய நிறுவனங்களில் தற்போதும் கூட சில NBFC மற்றும் small finance bank நிறுவனங்கள் இதே வகையான கடன்களை தரவே ஆவலாக உள்ளன.

ஆனால் இதே ரிஸ்க் மீண்டும் மீண்டும் ஏற்படும் இறுதியில் நிறுவனம் நொடிப்பு நிலைக்கு போக கூட வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலையை நாம் எவ்வாறு கையாள வேண்டும் எதை எல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

அத்தகைய உதாரணம் வேறு எதுவும் இல்ல நாம் ஏற்கவனே பேசிய இந்த utkarsh small finance bank தான் இவர்கள் பட்ட கஷ்டம் எதிர்கால திட்டம் என்ன என்பதை தெரிந்துகொண்டால் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறேன்.

நல்ல லாபத்தை குவித்து வந்த utkarsh கடைசி 5 காலாண்டுகளாக நஷ்டத்தை பதிவு செய்து வருகின்றனர். நல்ல லாபம் செய்யும் போது பங்கு மிகவும் பிரீமியம் மதிப்பில் பங்குச்சந்தையில் உச்ச விலையில் இருந்து வந்தது. 

ஆனால் என்று நஷ்டம் செய்ய ஆரம்பித்ததோ அன்றைக்கு ஆரம்பித்தது அழிவு காலம் பங்கு சும்மா 58 ரூபாயிலிருந்து வெறும் 10 ரூபாய்க்கு வந்து விற்பனையாகி வருகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு ஏதாவது கலங்கரை விளக்கம் தெரியுதா என்று பார்த்தால் நன்றாகவே தெரியுது. 

மேலும் நிறுவனம் கடந்த சில காலாண்டுகளுக்கு முன்னதாகவே தனது தோல்வியை ஒப்புக்கொண்டு பிசினஸை வேறொரு டிராக்கில் கொண்டு செல்ல ஆரம்பித்தனர் அதன் விளைவு நிறுவனத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படிப்பட்ட நிலையில் நமக்கு இத்தகைய மாற்றம் மிகவும் முக்கியமானது நிறுவனம் சொல்லியதை வெறும் வாய்வார்த்தயாக இல்லாமல் செயல்படுத்தியதற்கான ஆதாரம் வெளிப்படையாக தெரிவது நல்ல அறிகுறி. அப்படி என்ன செய்துள்ளனர்??

நிறுவனத்தின் நஷ்டம் பாதுகாப்பற்ற கடன்களை வழங்கியதன் மூலம் வந்தது நிறுவனம் முன்வந்து அத்தகைய வணிக அமைப்பில் இருந்து வெளிய வந்து பாதுகாப்பான கடன்களை வழங்க போவதாக அறிவித்தது அதுமட்டுமில்லாமல் நடைமுறையும் படுத்தியது.

தற்போது அவர்களின் மொத்த கடனில் பாதுகாப்பற்ற கடன் பெரிய அளவில் சரிந்துள்ளது. 

Q4 இல் மொத்த கடனில் JLG லோன் 37% சரிந்துள்ளது இத்தகைய கள் லோன்கள் தான் வாரக்கடன் ஏற்பட முக்கிய காரணமா இருந்தது. JLG லோன் என்பது 10 பேரை உள்ளடக்கிய குழுவிற்கு தரக்கூடிய கடனாகும். நான் jlg லோன் 29.5% உயர்ந்துள்ளது. 

இதில் பாதுகாக்கப்பட்ட கடன்களான வீட்டுக்கடன் வாகனகடன் நகைகடன் மதிப்புமிக்க நபர்களுக்கு வழங்கப்படும் கடன் ஜாமின் கடன் போன்றவை அடங்கும் இதனால் வாரக்கடன் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. JLG உடன் ஒப்பிடும் போது.

JLG கடன் மூலம் நிறுவனம் அதிக வட்டி வருவாய் பெற்று நல்ல லாபத்தை அடைய வாய்ப்புள்ளது ஆனால் அதில் இருக்கும் ஒரே பிரச்சனை வாரக்கடன். ஆனால் NON-JLG இல் அதிக வட்டி அதனுடன் ஒப்பிடும் போது கிடைக்காது ஆனால் மற்ற வங்கிகள் உடன் ஒப்பிடும் போது இவர்கள் வசூலிக்கும் வட்டி அதிகமாக இருக்கும் அதனால் வளர்ச்சி மெதுவாக வந்தாலும் நிலையானதாக இருக்கும். 

கடந்த காலாண்டில் வசூலிக்க முடியாத கடன்களை விற்றும் rights issue மூலமும் பணத்தை திரட்டி எதிர்கால வளர்ச்சிக்கு ரெடியாக வைத்துள்ளது. இந்த வசூலிக்க முடியாத கடன் சிறிது சிறிதாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெபாசிட் வளர்ச்சியும் போன காலாண்டு உடன் ஒப்பிடும் போது 12% வளர்ந்துள்ளது. பங்கும் நன்று கீழே விழுந்துள்ளது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஏற்ற மாதிரி பங்கு சரிவும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பிறகு நிறுவனம் வளர்ச்சி பாதையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கலாம்.

Utkarsh small bank என்ன சொன்னார்களோ அதை சரியாக செய்துள்ளனர் எதிர்காலத்தை உறுதி செய்துள்ளனர் மேல் கூறியவற்றை செய்து இதே போல மற்ற NBFC குறிப்பாக spandana, fusion போன்ற நிறுவனங்களில் இது நடந்துள்ளது என்று மறுமதிப்பாய்வு செய்யவேண்டும்.

இந்த பதிவில் விரிவாக NBFC மற்றும் small finance bank பற்றி என்ன பிரச்சனை திட்டம் செயல்பாடுகள் இதெல்லாம் விரிவாக பார்த்துள்ளோம் இன்னும் பல விஷயங்கள் உள்ளன நாம் மேலோட்டமாக சிலவற்றை பார்த்துள்ளோம். இது உங்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கும் என்று எண்ணுகிறேன் கீழே கேள்விகள் மற்றும் கருத்துகளை பதிவு செய்யுங்கள். இது போல இன்னும் பல பதிவுகளை நாம் வருங்காலத்தில் காண்போம். 






Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

29 Comments

  1. Thank you bro 🎉 Planning to enter in small quantities post Q4 results🙌🏻

    ReplyDelete
  2. What is your opinion about this bank bro

    ReplyDelete
  3. 🎉🎉
    Good article, we need Asian paints article too bro

    ReplyDelete
  4. Great insight—thanks for the details!

    ReplyDelete
  5. நல்ல தகவல்களை வழங்கியதற்கு நன்றி

    ReplyDelete
  6. Bro, further aa utkarsh small finance bank pathi update aa inga artical aa share panunga bro

    ReplyDelete
  7. Very nice analysis and thanks bro

    ReplyDelete
  8. Very Useful Information brother. I have 300 shares currently. I bought them in the IPO at ₹25. After listing, I sold 50% of my shares at ₹56, recovering my invested amount with profit. I decided to hold the remaining shares for the long term. The price went up to ₹70, but now it has come down to ₹11.

    ReplyDelete
  9. இந்தப் பங்கின் மீது தற்போது கவனம் செலுத்தலாமா

    ReplyDelete
  10. This stock focus right time

    ReplyDelete