AI ஆல் பெரும் இழப்பை சந்திக்கும் என்று எதிர்பார்ப்பில் நமது நாட்டின் ஐடி பங்குகள் மட்டுமில்லாமல் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றன பங்கின் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது மதிப்பீடு மிகவும் விரும்பதக்க இடத்தில் உள்ளது இந்த நிலையில் நாட்டின் பெரும் ஐடி நிறுவனமான tata consultancy services (TCS) நிறுவனத்தின் results வந்துள்ளது.
இந்த காலாண்டில் இவர்களின் செயல்திறன் எவ்வாறு உள்ளது அச்சுறுத்தும் AI மூலமாக எவ்வளவு வருமானம் ஈட்டி உள்ளனர் என்பதை அறிவோம்.
Q4 results
Tcs இன் results எவ்வாறு வருமோ என்ற கவலை அதிகமாக இருந்தது ஆனால் இந்த கவலை இப்போது இல்லை நிறுவனம் அதை அவர்களின் இந்த காலாண்டு முடிவுகள் மூலம் தீர்த்துள்ளது.
இந்த காலாண்டில் 13718 கோடி ரூபாய் லாபம் எட்டியுள்ளது. போன காலாண்டில் இது 10657 கோடியும் போன வருடம் இதே மாதத்தில் 12224 கோடி ரூபாயாகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக இந்த காலாண்டில் TCS நிறுவனத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறியது.
மேலும் 31 ரூபாய் டிவிடெண்ட் ஆக தரப்போகிறது இந்த FY26 இல் 110 ரூபாய் தந்துள்ளது. கடந்த 5வருடத்தில் மட்டும் 457 ரூபாய் டிவிடெண்ட் தந்துள்ளது TCS.
மொத்த வருமானம் 70000 கோடியை தாண்டியது. இந்த நான்காம் காலாண்டில் மட்டும் TCS 12 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆர்டர்களை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது போன காலாண்டு உடன் ஒப்பிடும் போது 29% வரை இப்படிப்பட்ட AI ஆக்கிரமிப்பு இருக்கும் என்ற நிலையில் காண்ட்ராக்ட் மதிப்பு உயர்ந்திருப்பது நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
மேலும் fy26 இல் 40.7 பில்லியன் டாலர் வரை காண்ட்ராக்ட் கைவசம் வைத்துள்ளது. AI பயம் உச்சத்தில் இருந்தாலும் கூட காண்ட்ராக்ட் வந்து கொண்டே இருப்பது நாம் கவனிக்க வேண்டும் தேவையற்ற பயத்தை அடிப்படையாக கொண்டு முடிவு எடுத்தால் நஷ்டம் நமக்கே அதனால் முடிவும் மிகவும் கவனமாக யோசித்து எடுக்க வேண்டும்.
அடுத்து இந்திய முதலீட்டாளர்கள் ஏன் உலகமே நினைக்கும் விஷயமான AI இந்த நிறுவனத்தை முடித்து விடும் என்பது தான்.
ஆனால் அது நடக்காது என்பதை நாம் பல முறை சொன்னாலும் TCS இந்த காலாண்டில் நிரூபித்துள்ளது. AI மூலம் மட்டும் TCS 2.3 பில்லியன் டாலர்கள் இந்த நிதியாண்டில் வருமானத்தை எட்டியுள்ளது.
இது போக openai nvidia போன்ற நிறுவனங்களுடன் கூட்டாண்மை மற்றும் AI Data center முதலீடு நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியை நமக்கு காட்டுகிறது.
ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக இருந்தது நீண்ட காலத்தில் பார்க்கும் போது ஒரு பொன்னான வாய்ப்பு போல் தோன்றுகிறது.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

11 Comments
Good to see the AI revenue numbers !!!
ReplyDeleteTCS result analysis super very clearly said worthy investment for future thank you 🙏🏼
ReplyDeleteSuper bro
ReplyDeleteThanks you for your information bro
ReplyDeleteநம்பிக்கைதரும்விளக்கம்
ReplyDeleteThanks 😊
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteThank you 🎉
ReplyDelete👍
ReplyDeleteDeep review
ReplyDeleteGreat bro. Superb explanation
ReplyDelete