Header Ads Widget

Tata motors commercial பங்குதாரர்கள் கவனத்திற்கு


அதிகரித்து வரும் சுற்றுசூழல் மாசுவடைவதை தடுக்க நாட்டில் மின்சார பேருந்துகள் பயன்பாட்டை அதிகரிக்க அரசு சலுகையை கொடுத்து வருகின்றன பல மாநில அரசுகள் மின்சார பேருந்தை இயக்குவதில் முனைப்பை காட்டி வருகின்றன. 

நடந்து முடிந்த 2026 நிதியாண்டில் நமது நாட்டில் 91574 Bus விற்பனையாகியுள்ளது அதில் 4158 Bus மின்சார மயமாக்கப்பட்டவை 2025 நிதியாண்டில் 3317 விற்பனையாகியுள்ளது. 

இதன் அடிப்படையில் பார்க்கும் போது EV BUS தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

இந்த EV பஸ்களை பாரம்பரிய நிறுவனங்களான Tata motors Ashok Leyland என்று இல்லாமல் புது நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன மேலும் சந்தையில் மேலோங்கி உள்ளன.

தற்போது எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு விற்பனை செய்துள்ளது போட்டி எவ்வாறு உள்ளது என்பதை விவரிக்க போகிறோம்.


Tata motors vs Ashok Leyland 

2025 ஆம் நிதியாண்டில் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த Tata motors நிறுவனம் fy26-ல் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

Fy2025-இல் 1058 Ev Bus விற்பனை செய்து 35.1 சதவீதம் Market share வைத்திருந்த Tata motors Fy2026-ல் வெறும் 178 electric Bus-களை மட்டுமே விற்றுள்ளது. விற்பனை சதவீதத்தில் 83 சதவீதம் சரிந்து பாதாளத்திற்கு சென்றுள்ளது.

Ashok Leyland switch:

மறுபுறம் FY25ல் வெறும் 413 Ev Bus விற்பனை செய்த Switch Fy2026ல் 1166 Ev Bus விற்பனை செய்து இந்த சந்தையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 

தற்போது நிறுவனத்தின் ev bus Market share 24.8 சதவீதம் கைவசம் கொண்டுள்ளது. 

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 2022ல் தான் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் Ashok Leyland இறங்கியுள்ளது. 

புது நிறுவனங்களின் போட்டி

Ashok Leylandஐ தொடர்ந்து புது நிறுவனங்கள் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகின்றன.

அதில் இரண்டாம் இடத்தில் JBM AUTO உள்ளது சுமார் 1149 ev bus விற்பனை செய்துள்ளது FY25 இல் வெறும் 353 எண்ணிக்கையில் மட்டுமே விற்றுள்ளது அதனுடன் ஒப்பிடும் போது நல்ல வளர்ச்சியை நிறுவனம் அடைந்துள்ளது. 

PMI electro நிறுவனம் 1147 EV Bus விற்பனை செய்து 22.76 சதவீதம் Market share-ஐ தனதாக்கியுள்ளது.

இந்த PMI mobility இன் வளர்ச்சியும் அபரிவிதமாக இருந்துள்ளது. Fy25ல் 482 ஆக இருந்த எண்ணிக்கை fy26ல் 1149 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் PMI mobility சீன நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதும் குறிப்பிடதக்க விஷயம் ஆகும்.

மற்றொரு நிறுவனமும் சீன நிறுவனத்துடன் கூட்டணியில் உள்ளது olectra green byd உடன் இணைந்து இருப்பது கூடுதல் போட்டி தன்மையை அளிக்கிறது. Fy26ல் 853 பஸ்களை விற்றுள்ளது. 

வரும் ஆண்டுகளில் மின்சார bus விற்பனை தொடர்ந்து உயரும் என்பது சமீப அரசின் ஆர்டர்களை பார்த்து நாம் தெரிந்திருப்போம். இந்த துறையில் நல்ல வளர்ச்சியும் நல்ல போட்டியும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அதே சமயம் இந்த EV Bus Market share பொறுத்தவரையில் தற்போது புது நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்தாலும் பாரம்பரிய நிறுவனங்கள் அதை வருங்காலத்தில் எளிதாக சமாளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

ஆனால் அதை மனதில் கொண்டு தற்போது Tata motors அல்லது Ashok Leyland-ஐ தேர்வு செய்வது நல்ல யோசனையாக இருக்காது.

அதுவும் தற்போது பலரும் TMCV-ஐ விரட்டி வாங்குவதை கண்டு வருகின்றோம் demeger-க்கு முன்பு எப்படி விரட்டி விரட்டி வாங்கி அடிபட்டார்களோ அதே அடி இதில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

மேலும் ev வாகனங்கள் விற்பனை TMCVல் சரிந்துள்ளது மேலும் அழுத்தையை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.





Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

11 Comments