Auto sector நிறுவனங்களை பொறுத்த வரை தொடர்ந்து கணிசமான வளர்ச்சியும் கடும் போட்டியும் ஏற்படுத்தி வருகிறது. புது கார் மாடல்கள் தொடர்ந்து நாட்டில் அறிமுகமாகி வருகிறது அதில் பல முன்னணி நிறுவனங்கள் கவனம் செலுத்தும் இடம் SUV ரக கார்கள் மட்டுமே யாரும் சிறிய ரக கார்களை விரும்புவது இல்லை என்ற கருத்து இருந்தது அந்த கருத்தை நானும் ஏற்றேன் அந்த சூழ்நிலை தற்போது மாற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது போல தெரிகிறது. ஏன் என்ன மாற்றம் நடக்கின்றது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். மேலும் Auto sector பங்குகளின் தற்போதைய நிலைமையை பற்றியும் நாம் பார்ப்போம்.
இந்த மே மாதம் வாகன விற்பனை அசத்தலாக உள்ளது குறிப்பாக கடந்த வருடம் மே மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதிலும் இரண்டு முக்கிய நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
அதில் ஒன்று Maruti Suzuki மற்றொன்று Tata motors நிறுவனம் ஆகும். Mahindra நிறுவனத்தின் வளர்ச்சி இந்த நிறுவனங்களின் அளவுக்கு இல்லை. அதனால் தற்போது நாம் முதலில் இரண்டு நிறுவனங்களின் செயல் திறன் பற்றி பார்க்க இருக்கிறோம்.
முதலில் Maruti Suzuki,
இந்த மாத விற்பனையில் Maruti Suzuki நிறுவனம் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. சென்ற மாதமும் நிறுவனம் நல்ல விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 40% வளர்ச்சி அதிகரித்து உள்ளது பெரிய விஷயம் தான். ஆனால் சென்ற மாதமான April உடன் ஒப்பிடும் போது வளர்ச்சி குறைவு தான் 1.4% உயர்ந்து உள்ளது.
ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மாத மாதம் விற்பனை வளர்ச்சி double digit growth ஐ தராது என்பது தான். நிறுவனம் அதன் வளர்ச்சியை தக்க வைத்து தொடர்ந்து விற்பனையை பெருக்கி வருவது நல்லது ஏனெனில் விற்பனை சிறிதளவு உயர்ந்தாலும் கார் விலை உயர்வு மூலம் வருமானம் தொடர்ந்து கூடி வரும்.
மேலும் ஒவ்வொரு முழு வருடமும் மொத்த விற்பனை அளவு உயர்ந்தாலே பெரிய விஷயம் இது தான் உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் செய்து வருகின்றன.
சரி அடுத்து நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் சென்ற ஆண்டு Maruti Suzuki நிறுவனம் SUV விற்பனை பெரிதளவிற்கு இருந்தது மாறாக அவர்களின் உயிர் நாடியாக இருந்த small car விற்பனை ஒன்றும் இல்லாமல் போனது காரணம் SUV மோகம் ஆனால் இப்போது அது தலை கீழாக மாறியுள்ளது.
மீண்டும் முதல் தலைமுறை வாடிக்கையாளர்கள் சிறிய ரக கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள் என்பதை நமக்கு data சொல்கிறது. அதே நேரத்தில் Suv ரக கார்கள் விற்பனையும் சரிவு ஏற்படாமல் உயர்ந்து வருவது நிறுவனத்தின் வளர்ச்சி வருங்காலத்தில் நன்றாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
சிறிய ரக கார்கள் விற்பனை எவ்வளவு வளர்ச்சியை தந்துள்ளது ஒட்டுமொத்த விற்பனையில் இதன் பங்கு என அனைத்தையும் நாம் பார்ப்போம் ஏனெனில் இந்த சிறிய ரக கார்கள் சந்தையில் Maruti Suzuki நிறுவனத்திற்கு போட்டியே இல்லை அதனால இந்த வளர்ச்சி மிகவும் முக்கியம்.
Sales data
இந்த மே2026 இல் Maruti நிறுவனம் 242,688 வாகனங்களை மொத்தமாக விற்பனை செய்துள்ளது. இதே கடந்த மே2025 இல் விற்பனை 180,077 ஆக உள்ளது ஒப்பிடும் போது 35% வளர்ச்சி அதிகரித்து உள்ளது.
இது பெரும் வளர்ச்சி மொத்த விற்பனையில் domestic மட்டும் எடுத்தால் 40% வளர்ச்சி இது சாதாரண வளர்ச்சி இல்லை ஏன் என்றால் பெரிய எண்ணிக்கை அடிப்படையில் செயல்படும் நிறுவனம் இந்த விற்பனையை பதிவு செய்தது மிகப்பெரும் விஷயம்.
சிறிய volume செய்யும் நிறுவனங்கள் கூட இந்த வளர்ச்சியை எட்ட வில்லை ஆனால் Tata வின் வளர்ச்சியும் 41% உயர்ந்து உள்ளது இது ஒன்று தான் Maruti க்கு இணையான வளர்ச்சியை தந்துள்ளது வேறு எந்த நிறுவனமும் பக்கத்தில் கூட வர முடிய வில்லை.
தற்போது நாம் விற்பனையை segments ஆக விவரிக்க உள்ளோம் வேறு எந்த நிறுவனத்திலும் இது செய்ய முடியாது ஏன் என்றால் அனைவரும் பெரிதாக கவனம் செலுத்தி விற்பனை செய்யும் இடம் SUV ரகம் என்பதால்.
முதலில் நாம் Maruti Suzuki segments என்ன என்பதை பட்டியலிடுவோம் மேற்கொண்டு விவரிப்போம்.
- Mini
- Compact & Mid size
- Utility
- Vans
- Lcc
- OEM
- Export
mini
Alto and S-presso இந்த இரண்டு கார்களும் மினி category குள்ளே வருபவை. இந்த இரண்டு கார்களின் விற்பனையும் தொடர்ந்து சில மாதங்களாக உயர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் Alto பல வருடங்களாக தொடர்ந்து நம் சந்தையில் முதல் இடம் வகித்த கார் ஆனால் தற்போது அது சரிந்து விற்பனை தரையை தட்டி மீண்டும் எழுந்து வருகிறது.
கடந்த வருடம் மே மாதம் வெறும் 6776 கார்களை மட்டுமே விற்பனை செய்தது Maruti ஆனால் இந்த மாத. இது 147% உயர்ந்து 16275 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது சுமார் 10000 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன என்றால் மீண்டும் முதல் தலைமுறை வாடிக்கையாளர்கள் சிறிய ரக கார்களை விரும்புகின்றனர் என்பது தான். மேலும் தற்போது விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டுள்ளது EMI கொடியது என்றும் நம் சக்திக்கு உட்பட்டு வாங்குவோம் மிச்ச பணத்தை முதலீடு செய்வோம் என்ற எண்ணமும் மக்களுக்கு உருவாகியுள்ளது.
Compact & Mid size
இந்த பிரிவில் baleno, swift, Dzire, wagonr, Celerio போன்ற கார்கள் உள்ளன hatch ரக கார்களை பொருத்தவரை இவர்களிடம் உள்ள போர்ட்ஃபோலியோ மற்ற நிறுவனங்களிடம் இல்லை மேலும் உற்பத்தி திறன் அதிகரிப்பு விற்பனைக்கு பெரும் காரணமாக உள்ளது.
இந்த பிரிவில் 81,555 வாகனங்களை மே 2026 இல் விற்பனை செய்துள்ளது இது கடந்த வருடம் இதே மாதம் 68,736 ஆக இருந்து உள்ளது. இந்த பிரிவும் ஒரு காலத்தில் டாப் இல் இருந்த பிரிவு தான் Swift பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கே தெரியும் பலரின் கனவு காராக இருந்தது தொடர்ந்து இதுவும் முதல் இடத்தில் இருந்த ஒரு கார் பிறகு சரிந்து தற்போது மீண்டும் மீண்டு வருகிறது. டாப் 10 கார்களில் இந்த கார்கள் தற்போதும் இடம் பெற்றுள்ளன.
மேலும் முதல் ரெண்டு பிரிவுகளின் விற்பனை மட்டும் 97,830 வேறு எந்த நிறுவனமும் பக்கத்தில் கூட வர முடியாது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
Utility
Maruti SUV சந்தையை பொறுத்தவரையிலும் நல்ல விற்பனையை பதிவு செய்து வருகிறது. மேலும் இது ஒரு பெரிய மாற்றம் இந்த மாற்றத்தின் மூலம் நிறுவனத்தின் வருவாய் மற்றும் மார்ஜின் வளர்ச்சி கணிசகமாக உயர்ந்து உள்ளது.
இந்த மே மாதம் 79,267 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது கடந்த வருடம் இதே மாதத்தில் 54,899 மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. SUV Market பொருத்தவரை இதுவும் பெரிய வளர்ச்சி.
மேலும் புது வரவான Victoris விற்பனை களைகட்டி வருகிறது Hyundai நிறுவனத்தின் creta உடன் போட்டிக்கு களம் இறங்கிய Victoris விற்பனை தூளாக உள்ளது கடந்த மாதம் ஒரு 1500 யூனிட் இல் தான் பின்தங்கி இருந்தது தற்போது இந்த மாதம் எண்ணிக்கை இன்னும் வரவில்லை போட்டி சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Van
Eeco இப்பிரிவில் ஒரே வாகனம் தான் ஆனால் விற்பனை குறையாமல் இன்றும் உள்ளது சுமார் 13240 vs 12327 விற்பனை செய்துள்ளது. இப்பிரிவில் அடுத்த தலைமுறை வாகனத்தை எதிர்பார்க்கிறேன் விரைவில் களம் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
Lcv
super carry சாலைகளில் பார்த்திருப்போம் இந்த வாகனத்தை இது Tata ace உடன் ஒத்துப்போக கூடிய வடிவில் இருக்கும் Lcv. 3198 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது.
இதன் உடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 193,535 வண்டிகளையும், பயணிகள் வாகனம் மட்டும் 190,337 ஆக உள்ளது போன வருடம் 135,962 ஆக உள்ளது. கிட்டத்தட்ட 55000 வாகனம் அதிகமா விற்பனை செய்துள்ளது.
OEM
Toyota நிறுவனத்திற்கு 7239 வாகனங்களை rebatch அடிப்படையில் விற்பனை செய்து உள்ளது ஆனால் இதன் எண்ணிக்கை இந்த மாதம் குறைந்துள்ளது. கடந்த வருடம் 10168 ஆக இருந்த எண்ணிக்கை இந்த வருடம் 7239 ஆக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
Export
வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்வதில் Maruti Suzuki Muthal இடத்தில் உள்ளது சுமார் 41,914 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது jimny, evitara, fronx, போன்ற கார்களை ஏற்றுமதி செய்தும் வருகிறது. இந்த ஏற்றுமதியின் அளவு மற்ற சில நிறுவனங்களின் மொத்த விற்பனை கூட இந்த அளவுக்கு வராது.
ஓட்டு மொத்தமாக Maruti நிறுவனத்தின் விற்பனை மே மாதம் 242,688 ஆக உள்ளது கடந்த ஆண்டில் 180,077. 60000 வண்டிகள் அதிகமாக விற்பனை செய்துள்ளது.
ஆனால் இவ்வாறு நடந்தும் கூட நிறுவன பங்கின் விலை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது இது தான் பங்குசந்தை இவனோட character ஐ புரிந்து கொள்வது கடினம். 17000 ரூபாயிலிருந்து 13000 ரூபாயில் வர்த்தகம் ஆகிறது. ஆனால் மறுபுறம் நிறுவனத்தின் மதிப்பீடு சாதகமாக இல்லை தொடரும் போட்டி தன்மை வளர்ச்சியை தந்தாலும் ஒரு பயத்தை கண் முன்னே காட்டுகின்றன.
இந்த மதிப்பீடு குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளன என்று குறையும் என்று சொல்ல முடியாது ஆனால் தொடர்ந்து பின்தொடர்ந்து அவசியம் ஏதாவது இக்கட்டான சூழ்நிலை வரும் என்று எண்ணுகிறேன் அப்படி வரும் போது அதை பிடிக்க இந்த பதிவு உறுதுணையாக இருக்கும் மேலும் பல பதிவுகள் இது போன்று நாம் பார்ப்போம்.
அடுத்து Tata motors
இந்த நிறுவனத்தை பொறுத்தவரை பெரிதாக segments தேவை இல்லை ஒரு பிரிவு global விற்பனை JLR அதை பற்றியும் அதில் உள்ள விவரங்களை பற்றியும் பல முறை பேசியுள்ளேன். அதனால் domestic பிரிவை பார்ப்போம்.
இங்கு நாம் segment அடிப்பையில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை அதனால் ஒட்டுமொத்தமாக பார்ப்போம் இந்த மே மாதம் 59090 வாகனங்களை விற்றுள்ளது கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும் போது 41557 ஆக இருந்து உள்ளது சுமார் 42% வளர்ச்சியை தந்து உள்ளது.
ஆனால் போன மாதம் உடன் ஒப்பிட்டால் வளர்ச்சி இல்லை 59000 வண்டிகளை விற்றுள்ளது. வழக்கம் போல punch Nexon நல்ல விற்பனை தந்திருக்கும் Sierra விற்பனை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அடுத்து EV பொறுத்தவரை 10000 வண்டிகளை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது மஹிந்திரா ரெண்டாவது இடத்தில் உள்ளது ஆனால் Maruti மிகவும் குறைவு தான் போக போக விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம் புதிய ev கார்களை களம் இறக்க தயாராகி வருகிறது.
Tata motors நிறுவனம் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய்க்கு உயர்ந்து மீண்டும் சிறிது சரிந்துள்ளது இங்கு இன்னும் அழுத்தம் உள்ளது அதனால் தொடர்ந்து கவனிப்போம் பெரும் வாய்ப்பு ஒளிந்திருக்கிறது நேரம் சாதகமாக இருந்தால் அதை பிடிக்கலாம் பொறுத்து இருந்து பார்போம்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

30 Comments
Super bro.... Thank you...
ReplyDeleteThanks Brother
ReplyDeleteNandri
ReplyDeleteUnkala thakavaluku nanri. Unkal uzhaippu rompa athikam 💐💐💐🙏🙏
ReplyDeleteNandri Nanba.
ReplyDeleteBrother excellent analysis, very useful and valuable information
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் நண்பரே🙏🏼
ReplyDeleteGreat information bro 💯💯💯
ReplyDeleteNice information thank you so much
ReplyDelete🎉🎉❤️
ReplyDeleteNice article bro
👍
ReplyDelete"ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்ததற்கான மனநிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. சும்மா சொல்லக்கூடாது, அசத்திவிட்டீர்கள்! ஒவ்வொரு கருத்தும் ஆழமான சிந்தனையுடனும் சிறப்பான விளக்கத்துடனும் இடம்பெற்றுள்ளது. படிக்கும் ஒவ்வொருவருக்கும் புதிய பார்வையையும் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. தங்களின் அர்ப்பணிப்புக்கும் அறிவுப் பகிர்விற்கும் என் மனமார்ந்த நன்றிகள். வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்!"
ReplyDeleteSuper bro
ReplyDeleteGood job bro
ReplyDeleteசிறப்பான கட்டுரை. நிறுவனத்தை பற்றிய ஆழமான தகவல்கள்
ReplyDeleteVanakkam 🎉🎉🎉.
ReplyDeleteSegment wise data super bro.
Excellent 👍👍
சிறப்பான விரிவான கட்டுரை.., நன்றிகள்
ReplyDeleteNice information article
ReplyDeleteGreat effort! Good job, bro 👏🎉
ReplyDeleteThank you your information
ReplyDeleteBro, article valakam pola super. Romba detaild aa solirukinga. Unga first article kum ipo post pandra current articles kum continues aa improvement panite irukinga. Excelente bro.
ReplyDeleteThen, Bajaj electricals ku article poda ungalukku thevaiyana time eduthukonga. Nanga wait pandrom. Ninga soldra mathiri avasara padama porumaiya detailed aa analysis panni share panunga. We will wait for that.
Thanks bro....
👍🙏
ReplyDeleteThanks for useful information brother
ReplyDeleteThankyou for the detailed explanation. Informative 🙏
ReplyDeleteThanks
ReplyDeleteThanks bro
ReplyDeleteOru. Doubt yen perspective la mahindrakudadhan nalla on demand sales iruku na ma yen adha ivangaloda compare panala
ReplyDeleteContent is good bro puridhu but if possible mahindra pathi mudicha sollunga
Detailed analysis super brother thank you 🙏🏼
ReplyDeleteGood afternoon Bro, Hearing lot of expectations & fair value for CMR GREEN IPO . This is subscribed 37 times already & today is last date for subscription. If possible, jus check & cover in today's video bro .
ReplyDeleteIt's been quite sometime you discussed about any good IPO to apply .
Detailed information
ReplyDelete