Header Ads Widget

Tatamotors Downfall Started?? Future share news

 


சமீபத்தில் TATA MOTORS நிறுவனத்திடம் இருந்து வந்த ஒரு பெரிய அறிவிப்பு என்னை மிகவும் சிந்திக்க வைத்துள்ளது. அந்த சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த கட்டுரை. 

இதை படிப்பதற்கு முன் ஒரு நினைவூட்டல் இந்த பதிவில் எந்த பங்கை பற்றியும் பரிந்துரைப்பது நோக்கம் இல்லை இந்த பதிவின் முக்கிய நோக்கம் என்ன என்றால் நிறுவனத்தை பற்றியும் நிறுவனத்தின் நகர்வால் ஏற்படும் நிகழ்வுகளை பற்றியும் தான் இருக்க போகிறது. மேலும் இது என்னுடைய புரிதல் மட்டுமே என்பதை இங்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.


Tata Motors JLR

இந்த கட்டுரையில் நாம் இந்திய சந்தையை பற்றி பெரிதாக பார்க்க போவது இல்லை 90 சதவீதம் உலக சந்தையை மையமாக கொண்டு தான் அமைய போகிறது என்பதையும் நினைவில் கொள்ளவும். 

Tata Motors தலைமையில் இருந்து பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது அதை பார்க்கும் போது பெரிய பதற்றம் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது இவர்கள் எடுத்த இந்த முடிவு சிறிது அளவு மாறினாலும் பெரிய இழப்பை சந்திக்க வாய்ப்புகள் அதிகம். என்ன முடிவு என்ற கேள்வி இருக்கலாம் விவரமாக விவரிப்போம்.


JLR PROFITS

இந்த fy26 இல் Tata motors இன் JLR JLR பிரிவு நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. Fy26 இல் 2400 கோடி ரூபாய் நஷ்டம் முழு வருடத்தில் ஏற்பட்டுள்ளது இதற்கு பல காரணங்கள் உள்ளன ஆனால் பல செய்திகளிலும் வந்து கொண்டிருக்கும் செய்தி சைபர் அட்டாக் முதல் முழு காரணமாக பேசப்படுகிறது. 

ஆனால் இவர்களின் விற்பனை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளதை பெரிதாக பேசுவது இல்லை அல்லது நம் பார்வைக்கு வருவது இல்லை. 

மேலும் அமெரிக்காவில் Tariff இவர்களின் லாப அளவை குறைத்துள்ளது இது ஒரு காரணம் சீனாவில் வரி அது ஒரு காரணம் என பல காரணங்களை அடுக்கி கொண்டே போனாலும் இவை அனைத்தையும் தாண்டி விற்பனையில் மந்த நிலை “இல்லை இல்லை” போட்டியின் காரணமாக விற்பனை சரிந்து உள்ளது என்பது தான் பொருத்தமாக இருக்கும் முழுதாக படியுங்கள் இதில் உள்ள நுட்பம் உங்களுக்கு புரியும்.


PROFIT And LOSS

கடந்த ஆறு வருட லாப நட்ட கணக்கை நாம் முதலில் பார்ப்போம் ஏன் என்றால் இதை மறுசீரமைக்க தான் புது திட்டம் போட்டுள்ளது நிறுவனம். இரண்டாவதாக, வாகன விற்பனை எண்ணிக்கை இதுவும் மிக முக்கியம் ஏன் என்றால் இதிலும் மறுசீரமைப்பு நடக்க இருக்கிறது. 


P&L

Fy21 - 11,150 Crores (loss)

Fy22 - 8631 Crores (loss)

Fy23 - 630 Crores (loss)

Fy24 - 27,300 Crores (profit)

Fy25 - 22,050 Crores (profit)

Fy26 - 2520 Crores (loss)

ஆறு ஆண்டுகளில் Fy24, FY25 இரண்டு ஆண்டுகள் நல்ல லாபத்தை நிறுவனம் பதிவு செய்துள்ளது. மற்ற நான்கு ஆண்டுகளில் இந்த நடந்து முடிந்த ஆண்டு உட்பட நஷ்டம் அதிகரித்துள்ளது. 

Fy21 இல் Covid பேரிடர் நாம் கண்டோம் அதனின் பாதிப்பு இருந்தது ஆனாலும் அந்த வருடம் விற்பனை சிறப்பாக இருந்தது காரணம் சீனாவில் ஏற்பட்ட V shape Recovery மேலும் வரி சமந்தப்பட்ட மாற்றங்கள் காரணமாக நஷ்டம் இருந்ததே தவிர மற்ற படி சிறப்பாக செயல்பட்டிருந்தது JLR விற்பனை அதே சமயம் நிறுவனம் Defender புதுப்பிக்க மாடலை 2020 ஆரம்பத்திலே களம் இறக்கியது மற்ற மாடல்களுக்கான தேவையும் சீனா மார்கெட்டில் நன்றாக இருந்தது. 

அந்த வருடம் சுமார் 347,632 வாகனங்களை விற்பனை செய்தது Chery JV உடன் சேர்த்தால் 439,588 வாகனங்களை விற்பனை செய்து தற்போது வரை Covid காலத்தில் விற்ற விற்பனை தான் பெரிய அளவில் இருந்து வருகிறது JLR நிறுவனத்தை பொறுத்தவரை. 

Fy22 வில் chip தட்டுபாடு காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது அப்போது 2,94,000 வண்டிகளை விற்பனை செய்திருந்தது இது தான் ஆறு வருடங்களில் குறைவாக விற்பனையாகவும் இருந்து வருகிறது. 


Fy24 மற்றும் Fy25 உச்சம்

இந்த இரண்டு வருடம் தான் JLR பொற்காலம் Chery JV இல்லாமலே 4,00,000 வண்டிகளை விற்றது எந்த இடையூறும் இல்லாமல் லாபத்தை அள்ளியது. ஆனால் அது இப்போது படி படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 

நாம் தொடர்ந்து JLR விற்பனை பற்றிய பேசி வருகிறோம் மந்தமாக விற்பனை சென்று கொண்டிருக்கிறது என்று கூறினோம் FY26 இல் இது வெறும் 3,00,000 வண்டிகளாக குறைந்துள்ளது இதற்கு நாம் நிச்சயமாக முழு பழியையும் சைபர் அட்டாக் மேல் போட கூடாது அதற்கு முன்னரே விற்பனை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. 

இந்த விற்பனை வீழ்ச்சி அடைய முக்கிய காரணம் உண்டு அதை காணும் முன் நாம் இதற்கு முன் இருந்த விற்பனை அளவு அதிகமாக இருந்தது அல்லவா அதை பற்றி விவரிக்க வேண்டும் அப்போது புரியும் விற்பனை இப்போது ஏன் குறைந்துள்ளது.


JLR New models

குறிப்பாக பெரும் மாற்றத்தை சந்தித்த மாடல் defender தான் 2019 இல் அறிமுகமாகி 2020 இல் விற்பனைக்கு வந்தது தொடர்ந்து மற்ற models ஒன்றன் பின் ஒன்றாக வந்து விற்பனையை உயர்த்தி பிடித்தது. 

ஆனால் கடந்த ஆறு வருடமாக பெரிய மாற்றம் இல்லை இது விற்பனை தொய்விருக்கு பெரும் காரணம் மற்றும் வரும் காலங்களில் இந்த வருட இறுதி அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் புது மாடல்கள் களம் இறங்க வாய்ப்பு அதிகம் குறிப்பாக விற்பனை நிறுத்தப்பட்ட ஜாகுவார் கார்கள் விற்பனைக்கு வர உள்ளதும் குறிப்பிடதக்க விஷயம் முக்கிய விஷயமும் கூட. 

இது சந்தையில் எவ்வாறு வாடிக்கையாளர்களை கவர போகிறது என்பதை பொறுத்து வெற்றி அமையும். வெற்றியை பற்றி பார்த்தோம் இப்போது இருக்கும் பெரும் பிரச்சனை மற்றும் விற்பனை குறைவிற்கான காரணம் பற்றி பார்ப்போம். 

JLR ஐ பொறுத்தவரை மூன்று முக்கிய சந்தை உள்ளது அதில் முக்கியம் வாய்ந்த சந்தையாக சீனா உள்ளது மேலே நாம் விவரித்தோம் சீன சந்தையில் ஏற்பட்ட V shape Recovery fy21 விற்பனையை உயர்த்தியது என்று ஆனால் அந்த சந்தை இப்போது மிகவும் அபாயகரமாக இருக்கிறது. 

JLR இன் வளர்ச்சியும் வளர்ச்சி குறைவுக்கும் சீனா முக்கிய காரணம் 2020 ஆம் ஆண்டில் சீன நாட்டில் EV புரட்சி தலைதூக்க ஆரம்பித்து அது தான் முதற்கட்டம் அது படி படியாக வளர வளர JLR sales குறைய தொடங்கி விட்டன. 

Jlr மட்டும் இல்லாமல் பல பன்னாட்டு முன்னணி நிறுவனங்களும் பெரும் சவாலை சந்திக்க ஆரம்பித்தனர் சில நிறுவனங்கள் சீன சந்தையே வேண்டாம் என்று ஓட ஆரம்பித்தனர். 

2022 முதல் 2023 வரை வளர்ச்சி அசுர வேகத்தில் செல்ல தொடங்கியது 2024 முதல் தற்போது வரை உள்நாட்டு நிறுவனத்தின் விற்பனை உச்சத்தை தொட்டு உள்ளது இதே நேரத்தில் தான் JLR விற்பனை சரிய தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 


Europe Market

சீன சந்தை தான் கை விட்டு போகிறது என்று பார்த்தால் ஐரோப்பாவும் கை விட்டு போகும் நிலைமையில் தான் உள்ளது இங்கும் விற்பனை மந்தம் அங்கு பல முன்னணி நிறுவனங்கள் உள்ளது மேலும் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் வளர தொடங்க ஆரம்பித்து விட்டது. 

மேலும் europe நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க முடியாமல் அவர்களுடன் கூட்டணி அமைக்கும் பேச்சு வார்த்தையில் இறங்கி விட்டனர். சீனாவின் ஆதிக்கம் europe முழுவதும் பரவி விட்டது Uk வும் இதுக்கு விதி விலக்கு இல்லை அங்கயும் இதே கதை தான் அடுத்து அமெரிக்கா சந்தை தான் அதை இறுதியாக பார்ப்போம்.


JLR புதிய திட்டம்

Tata Motors JLR இன் புதிய திட்டம் தான் என்னை பெரிய பதற்றத்தில் தள்ளியது ஏன் என்றால் நிறுவனம் விற்பனை இன்னும் பெரிய அளவில் செய்வது பயன் இல்லை என்று கருதி உள்ளனர். 

பெரிய அளவில் விற்பனை செய்ய பல சலுகைகளை தர வேண்டிய நிலை உள்ளது காரணம் சீன நிறுவனங்களின் போட்டி தான். இதனால் மார்ஜின் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் தங்கள் திட்டங்களை மாற்றியுள்ளனர். 

JLR கை வசம் Luxury Car brands உள்ளது இதை பயன்படுத்தி நிறுவனம் வரக்கூடிய காலங்களில் விற்பனையை தானாக முன்வந்து குறைக்க திட்டமிட்டுள்ளது மேலும் கார்களின் விலைகளை உயர்த்தி அதிக மார்ஜின் லாபம் கொண்டு வர திட்டம் போட்டுள்ளது. 

சுருங்க சொன்னால் குறைந்த அளவில் விற்று அதிக லாபம் பெறும் யுக்தியை கையில் எடுத்துள்ளது. இது நாம் முன்னரே யூகித்த ஒன்று தான் ஜாகுவார் கார்கள் விலை உயர்ந்தும் Bentley போன்ற உயர் ரக கார்கள் உடன் போட்டி போடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்க ஒன்று. 

ஆனால் இந்த முறை எனக்கு பெரிய Risk ஆக தெரிகிறது இவர்கள் EV இல் இத்தகைய விஷயத்தை செய்ய போகிறார்கள் ஆனால் EV சந்தை நல்ல விலையில் ஏற்கனவே சீன நாட்டு நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்று போட்டியை தருகின்றனர். 

அது மட்டும் இல்லை உலகத்தில் விற்கபடும் 60 சதவீத EV வாகனங்கள் சீன நிறுவனங்களின் வண்டிகள் என்பதை நாம் உணர வேண்டும். Rolls Royce, mercedes,porche போன்ற நிறுவனங்களின் டிசைன் போலவே பாதி விலைக்கு மேலும் innovative ஆன technology இல் விற்பனை செய்து வருகின்றன இதனால் சீன மற்றும் ஐரோப்பா சந்தையை இழக்க வாய்ப்புள்ளதாக எண்ணுகிறேன். 

மேலும் இதே தவறை stellantis நிறுவனம் செய்தது விலையை பெரிதாக உயர்த்தி விற்பனை குறைந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த தவறை தற்போது நிறுவனம் திருத்தி வருகிறது இதே தவறு இங்கும் நடக்குமோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 

மேலும் North America JLR இன் இன்னொரு முக்கிய சந்தை Tariff போன்றவைகளை தவிர்த்து பார்த்தால் அமெரிக்காவில் Ev கார்கள் விற்பனை சரிந்து தான் வருகிறது அங்கு பெரும்பாலும் ice ரக கார்களை விரும்பி வாங்குகின்றனர். 

அங்கு premium EV விற்பனை பாதிக்கப்பட vaaipu இருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன். அதே போல அமெரிக்காவில் சீன வாகனங்கள் விற்க அனுமதி இல்லை இதை ஒரு வாய்ப்பாகவும் JLR மாற்றலாம் ஆனால் மிகவும் கடினம். 

இன்னும் பல விஷயங்கள் உள்ளன இந்த கட்டுரை தொடர வாய்ப்புள்ளது நேரம் கிடைத்தால் இறுதியாக விற்பனை அளவை குறைப்பதன் மூலம் cost cutting செய்ய முடியும் என்று நிறுவன தலைமை நம்புகிறது மேலும் விலையை உயர்த்தி பிரீமியமாக வண்டிகளை உருவாக்கி விற்பதன் மூலம் லாப வரம்பு உயர்ந்து லாபம் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர்.  

ஆனால் இதில் எனக்கு நம்பிக்கை இல்லை ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதற்காக நிறுவனம் சாதிக்காது என்பதில்லை இது என்னுடைய ஒரு எண்ணம் மட்டுமே. 

நான் வருங்காலத்தில் ஒரு தாக்கம் ஏற்படும் என்பதை நோக்கி இந்த நிறுவனத்தில் நுழைய ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்கி காத்திருக்க போகிறேன் நான் எதிர்பார்த்தது நடந்தால் மிகவும் முக்கியமான ஒன்றாக எனக்கு அமையும் நடக்காமல் நிறுவனம் வெற்றியை சந்தித்தாலும் எனக்கு மகிழ்ச்சியே என்று கூறி இப்பதிவை முடிக்கிறேன். 







Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூ

டிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.


Post a Comment

34 Comments

  1. Thank you for your deep analysis bro🙌🏻🙌🏻🙌🏻

    ReplyDelete
  2. Vera level la analysis panirukinga. Romba useful aa iruku.. romba thanks bro... Unga analysis aa enga koda share panrathuku.

    Enoda guess padi ninga sona mathuri nadaka thaa chance iruku.

    ReplyDelete
  3. Vanakkam 🎉🎉🎉 nanba. Thanks

    ReplyDelete
  4. Thanks for explaining Tata motors future plans bro. Keep growing

    ReplyDelete
  5. தெள்ளந் தெளிவாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

    ReplyDelete
  6. Super bro. TMPV, TMCV இரண்டிற்கும் காத்திருக்கிறேன். கிடைத்தால் வாங்குவேன். இல்லையென்றால் அடுத்த பங்கு பக்கம் போக வேண்டியது தான்.

    ReplyDelete
  7. தெளிவான தகவல்கள்.பலமுறை சைபர் தாக்குதல் தான் காரணம் என்று நிறுவனம் கூறுகிறது. ஆனால் உண்மை நிலவரம் வேறாக உள்ளது. சில காலம் நிறுவனம் புதிய வண்டிகளுக்கு விற்பனைய நிறுத்தியது தவறு என்று தோன்றுகின்றது

    ReplyDelete
  8. Detailed analysis about JLR. your long term view on Tata motors pv is 100% correct. I am holding from 2024. I am also eagerly waiting for averaging tatzmotors. Thanks thambi

    ReplyDelete
  9. Great efforts Thambi for bringing very much insightsfull Data's... 👌

    ReplyDelete
  10. Detailed information, needs to know all. Thanks Bro

    ReplyDelete
  11. congrats to your hard work bro...thanks a lot....❤️

    ReplyDelete
  12. Good analysis BRO. I am also waiting if it falls I will accumulate more count

    ReplyDelete
  13. 🎉🎉❤️ bro nice articles,
    We want more deeply analysed articles bro.

    ReplyDelete
  14. Useful information bro thank you ♥️

    ReplyDelete
  15. Vera level analysis bro ... Thank you so much

    ReplyDelete
  16. Very useful and interesting article thanks for the update bro

    ReplyDelete