Header Ads Widget

52 வார சரிவில் இருக்கும் Reliance பெரும் வாய்ப்பு!!



 


பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட பெரும் மாற்றம் நடப்பதற்கான காலம் நெருங்கி விட்டது. என்ன மாற்றம் நடக்க போகிறது?? 

Reliance நிறுவனத்தின் New Energy Business ஆட்டத்தில் நுழைய தயாராக உள்ளது. அதில் வெறும் ஒரு பிரிவை பற்றி தான் விரிவாக பார்க்க போகிறோம்.

அது தான் பேட்டரி தயாரிப்பு பிரிவு இந்த ஒரு பிரிவை பற்றி விவரிக்கவே பல விஷயங்கள் உள்ளன நாம் இப்பதிவில் சில முக்கிய அம்சங்களை மற்றும் காணலாம். 


Reliance Share Performance (2020-2026)

Reliance நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பாக 2020 முதல் தற்போது வரை பங்கு சந்தையில் பெரிய அளவில் விலை ஏற்றத்தை காணாத ஒரு நிறுவனமாக உள்ளது. 

2020 முதல் 2026 வரை ஆறு வருடங்களில் வெறும் 77% லாபத்தை தான் தந்துள்ளது இது மிகவும் குறைவு பங்குசந்தையில் Market Cap அடிப்படையில் பார்க்கும் போது Number one நிறுவனமாக தொடர்ந்து இருக்கும் இத்தகைய நிறுவனம் Return அடிப்படையில் மிகவும் பின்தங்கி உள்ளது நாம் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று தான். 

பங்கின் விலை மாற்றத்தை பற்றி விவரித்தோம் அதே நேரத்தில் நிறுவன வளர்ச்சி மிகவும் முக்கியம் அல்லவா அதை பற்றியும் பார்த்தால் நிறுவனத்தின் உண்மை தன்மை நமக்கு தெளிவாக தெரியவரும்.


Reliance financial performance (2020-2026)

மேலே நாம் Reliance நிறுவன பங்கின் performance பற்றி பார்த்தோம் இப்போது financial performance பற்றி பார்ப்போம். 

2020 ஆம் ஆண்டில் reliance நிறுவனத்தின் வருமானம் 596,679 கோடியாக இருந்தது தற்போது 2026 இல் அது 1,055,780 கோடியாக உள்ளது கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது இந்த ஆறு வருடத்தில் மேலும் லாபம் 39,880 கோடியாக 2020 இல் இருந்தது 2026 இல் 95,754 கோடியாக உயர்ந்து உள்ளது. 

லாப வளர்ச்சி என்று பார்க்கும் போது இரட்டிப்பிக்கும் மேல் உயர்ந்து நல்ல வளர்ச்சியை தந்துள்ளது 1 லட்ச கோடி லாபம் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 

இத்தகைய காலகட்டத்தில் jio platforms, rcpl, இன் பங்களிப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதை நாம் மறக்க கூடாது. சரியாக jio platforms 2016 இல் அறிமுகபடுத்தபட்டது. 

அறிமுகப்படுத்த அடுத்த ஆண்டிலே அதாவது 2017 இல் முதல் லாபத்தை நிறுவனத்திற்கு அளிக்க ஆரம்பித்தது அப்போது வெறும் 500 கோடி ரூபாய் தான் லாபம் ஆனால் தற்போது வெறும் ஒரு காலாண்டில் 7000 கோடிக்கும் மேலான லாபத்தை தரும் ஒரு பிரிவாக மாறியுள்ளது வளர்ச்சியை நம் கண் முன்னே காட்டுகின்றன. 

இந்த பிரிவில் கடும் போட்டி இருந்தது பெரிய கடன் வாங்கி மற்றும் பங்குகளை விற்று வளர்த்த Jio இன்று 10 வருடங்களில் பெரும் வளர்ச்சியை தந்து IPO க்கு தயாராக உள்ளது. 

இது போக rcpl அதுவும் ஒரு காலாண்டில் சுமார் 3000 கோடிக்கும் மேலான லாபத்தை தந்த வண்ணம் உள்ளது இதன் வளர்ச்சியும் மிகவும் அசுர வேகத்தில் உள்ளதை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். 

நிறுவனம் 2020 இல் இருந்து தற்போது வரை எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதையும் பங்கின் விலை பற்றியும் புதிய தொழிலின் பங்களிப்பை பற்றியும் பார்த்தோம். அடுத்து புதிதாக Reliance நிறுவனத்தின் ஒரு பெரும் பிரிவாக வர போகும் தொழிலை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கிறோம்.


Reliance New Energy 

இதை நாம் அவ்வபோது வீடியோக்களில் விவரித்துள்ளோம் தற்போது இந்த பிரிவை பற்றி விரிவாக பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது அடுத்த வளர்ச்சிக்கான அடி எடுத்து வைக்கபட்டுள்ளது. 

New Energy Business பொறுத்தவரை பல பிரிவு இருந்தாலும் நாம் முதலில் பார்க்க இருக்கும் பிரிவு battery தான் பெரும் மாற்றம் இந்திய சந்தையில் நிகழ இருக்கிறது அதை பற்றி விரிவாக பார்ப்போம்.


Battery Giga Factory 

இந்தியாவில் தற்போது பேட்டரி தொழிலில் பல நிறுவனங்கள் உள்ளன அதில் Exide மற்றும் Amara Raja முக்கிய நிறுவனங்கள் குறிப்பாக Exide இந்த துறையில் தலைவனாக உள்ளது. 

ஆனால் அது வெறும் தற்போதைய நிலவரம் தான் இது தலைகீழாக இன்னும் சில மாதங்களில் மாற இருக்கிறது. 

Reliance இப்பிரிவில் பெரும் முதலீடு செய்துள்ளனர் அப்படிப்பட்ட இப்பிரிவு இந்த வருடம் இரண்டாம் பாதியில் வெற்றிகரமாக open செய்ய உள்ளது.


Projects Details

Project இன் கட்டுமானம் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது factory உபகரணங்கள் நிறுவப்பட்டு வருகிறது அதிக பட்சமாக இந்த மாத இறுதிக்குள் இந்த பணி நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்க்கிறேன். சோதனை ஓட்டம் அடுத்த மாதம் முதலிலே ஆரம்பிக்கப்படும். 

மேலும் ஜூலை மாதம் இறுதிக்குள் முதல் கட்ட உற்பத்தி ஆரம்பிக்கப்படும் பின்னர் படி படியாக டிசம்பர் இறுதிக்குள் முழு வீச்சில் உற்பத்தி இருக்கும் என்று நம்புகிறேன். 


Battery வகைகள்

இரண்டு வகையான பேட்டரிகள் reliance Giga Factory இல் தயாரிக்கப்பட உள்ளது.

Lithium ion phosphate 

Sodium-ion batteries

lithium-ion phosphate வகையான battery reliance நிறுவனத்தின் US இல் துணை நிறுவனத்தின் உதவியில் தயாரிக்கப்படுகிறது. 

இந்த வகையான பேட்டரி செல்கள் battery storage systems மற்றும் electric vehicles-க்கு தேவையான மற்றும் தொழில் துறைக்கு சார்ந்ததாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Sodium-ion batteries ஐ பொறுத்தவரை லித்தியம் தட்டுபாடு ஏதாவது வந்தால் அதை சமாளிக்க இந்த வகையான பேட்டரிகளை தயாரிக்க உள்ளது. 

Lithium தட்டுபாடு ஒரு பெரும் பிரச்சனையாக எதிர்காலத்தில் வரலாம் அதை கருத்தில் கொண்டு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் sodium ion battery எதிர்காலத்தில் பல நிறுவனங்கள் பெரிய அளவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 

இதன் விலை குறைவு போன்ற பல காரணங்கள் உள்ளன. இந்த battery உருவாக்க உதவியாக UK வில் உள்ள Faradion என்ற ஒரு நிறுவனத்தை கையகப்படுத்தியது குறிப்பிடதக்க விஷயம். 

மேலும் பேட்டரி பிரிவில் புது தொழிநுட்பத்தை இந்திய உற்பத்தியில் கொண்டு வர சீன நிறுவனமான மற்றும் உலகின் மிகப்பெரும் battery உற்பத்தியாளர் ஆன CATL உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Giga factory 

Giga factory என்ற பெயரிலேயே இவர்கள் எவ்வளவு பெரிதாக இப்பிரிவை கொண்டு வர இருக்கிறார்கள் என்பதை உணரலாம். ஆரம்ப capacity சுமார் 40GW அளவில் அமைய உள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப 100GW இலக்கை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தற்போது நாட்டில் உள்ள பெரும் நிறுவனங்களும் சரி எதிர்காலத்தில் வர இருக்கும் நிறுவனங்களின் திட்டமும் சரி இதை விட குறைவு தான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். 

Amara raja வின் திட்டம் 17GW என்ற அளவு தான் உச்ச வரம்பு டாடா AGARTAS பொறுத்தவரை கூட இந்த அளவு பெரிதாக இல்லை. 

டாடா AGARTAS பற்றி நாம் அடுத்த பதிவில் மெதுவாக காணலாம் ஏனெனில் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் இல்லை. 

அடுத்து இன்னொரு சுவாரசியமான விஷயம் என்ன என்றால் சீனாக்கு வெளியில் உலக அளவில் மிகப்பெரிய battery manufacturer ஆக reliance நிறுவனம் அமைய உள்ளது. 

இத்தகைய விஷயங்களை எடுத்து சொல்ல தமிழில் நம்மை விட்டால் வேறு யாரும் இல்லை. 


நாட்டின் பேட்டரி தேவை

நம் இந்தியாவை பொருத்தவரை Power sector இல் பெரும் முதலீடு செய்து வருகிறது. 

எதிர்காலத்தில் அமைய இருக்கும் Data center முக்கிய காரணம். அதனை கருத்தில் கொண்டு solar,wind என பல பிரிவுகளில் உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது மேலும் தற்போது உற்பத்தி செய்யப்படும் power பெரிதளவில் வீணாகி வருகிறது இதை சரிசெய்ய BESS battery energy storage systems solar,wind, traditional power project அருகே அமைக்க திட்டம் போட்டுள்ளது bess பெரிய ஒரு துறையாக மாறி வருகிறது இதை சரியாக Reliance பயன்படுத்தி கொள்ளும் இதை தாண்டி cellphone towers Data centers க்கு தேவையான பேட்டரிகள் தேவைகள் கணிசமாக உள்ளது. 

உள்நாட்டு தேவையை தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டம் உள்ளது. இப்படிபட்ட பெரும் தேவையை சரியாக பயன்படுத்தி இந்த துறையில் Reliance வளரும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது.


Government Subsidy 

இந்த பேட்டரி உற்பத்திக்கு அரசும் பெரிய அளவில் உதவி செய்து வருகிறது subsidy scheme மூலமாக உடனே அம்பானிக்கு அரசு ஆதரவாக செயல்படுகிறது இது அம்பானி அரசு என்ற முடிவுக்கு போக வேண்டாம் டாடா ஓலா Exide உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் subsidy scheme பொருந்தும். 

தற்போது நம் நாடு பேட்டரிக்கு சீனா போன்ற நாடுகளை தான் நம்பி உள்ளது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உள்நாட்டு தேவையை மனதில் கொண்டு இந்தியா தன்னிறைவு அடைய இத்தகைய திட்டத்தை கொண்டு வந்துள்ளது மிகவும் வரவேற்க தக்க விஷயம்.


New Energy battery

இந்த கட்டுரையில் நாம் Reliance New Energy Business இன் வெறும் ஒரு பிரிவை பற்றி மட்டுமே பேசியுள்ளோம் இன்னும் இந்த பிரிவில் பல துறைகள் உள்ளன அதை பற்றி எல்லாம் பின்வரும் பதிவில் பார்ப்போம் இதே போல Technology பிரிவிலும் பல மாற்றங்கள் உள்ளன அதையும் நாம் பார்ப்போம் இதற்கு முன் டிஜிட்டல் பிரிவில் jio hotstar பற்றி பேசி உள்ளோம். இனி Ai சார்ந்த விஷயங்களை பற்றி விரிவாக வரும் நாட்களில் பார்ப்போம். 


வளர்ச்சியில் பங்களிப்பு

முன்னதாக 2020 முதல் 2026 வளர்ச்சி பற்றி மேலே விவரித்தோம். Jio platforms, RCPL போன்ற புதிய தொழில்கள் Reliance நிறுவனத்தின் லாபத்தை எவ்வாறு உயர்த்தியது என்று பார்த்தோம். அதே போல் வருங்காலத்தில் New Energy And AI எவ்வாறு வளர்ச்சியை தரும் என்பதை பார்க்க இருக்கிறோம்.


பதிவின் இறுதியாக ஒரு நிறுவனம் கடந்த கால performance பார்த்து செய்யப்படும் முதலீடு சரியான முதலீடு இல்லை எதிர்காலத்தை நோக்கிய நம் பார்வையே மிகவும் முக்கியம். 

நிறுவன பங்கு விலை வளர்ச்சி நன்றாக முன்னதாக இல்லாமல் இருந்தாலும் நிறுவன அடிப்படை வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை பார்த்தோம் சந்தை இவ்வளவு காலம் இதை கண்டுகொள்ளாமல் இருக்கலாம் ஆனால் ஒரு காலம் வரும் அந்த காலத்தை நோக்கியே என்னுடைய முதலீட்டு பயணம் இருக்கும் என்பதை இப்பதிவின் மூலமாக தெரியப்படுத்த நினைத்தேன் புரிதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். 

இப்பெரும் நிறுவனத்தை பற்றி பேச இந்த ஒரு கட்டுரை போது இது போல இன்னும் பல கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்க போகிறது. இந்த பதிவில் நிறுவனத்தை பற்றிய பிசினஸ் எதிர்காலத்தை நாம் படித்து அறிந்து இருப்போம் இதில் மற்றபடி பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றல் சம்பந்தமான எந்தவித தகவலும் இல்லை அது இப்பதிவின் நோக்கமும் இல்லை. 







Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

36 Comments

  1. Vanakkam 🎉🎉🎉 . Thanks So much. Clearly explained about reliance for future development and decision making.

    ReplyDelete
  2. நிறுவனங்களின்செயல்முறை ஆய்வுகளைசிறப்பாகசெய்து உள்ளீர்கள்தொடரட்டும் நல்லமுயற்ச்சி!

    ReplyDelete
  3. Verum buy & sell pathi mattum ielama company business function pathi pesu irtukiga. Good brother

    ReplyDelete
  4. Arumayana pathivu bro....very useful

    ReplyDelete
  5. Excellent article really reliance is doing big

    ReplyDelete
  6. Thankyou for the analysis bro.Great work!

    ReplyDelete
  7. சிறப்பான முறையில் ஆய்வு செய்து கட்டுரையாக தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. Very good research and analysis bro.. Really hatsoff you posting kind of article in detail... Keep it up..Thanks a lot and we support always..😍🫶

    ReplyDelete
  9. Detailed analysis ku nandri bro, waiting for other segments too

    ReplyDelete
  10. ரிலையன்ஸ் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் வளர்ச்சிகள் காமன் மேனுக்கு புரியும் வகையில் கட்டுரை எழுதியதற்கு மிக்க மிக்க நன்றி பிரதர்❤️❤️

    ReplyDelete
  11. Super bro. Nalla information. Bro reliance energy sector la next chapter um article aa podunga bro.

    ReplyDelete
  12. 🎉🎉❤️
    Bro article is nice bro.

    ReplyDelete
  13. MUKESH AMBANI'S PROFIT MAKING STRATEGY BEHIND VANTARA WHICH IS NOT KNOWN TO COMMAN PERSON

    This is what known to us..

    Mukesh Ambani’s business strategy behind Vantara focuses on leveraging Reliance Industries vast resources to create a large-scale, world-class animal rescue, rehabilitation, and wildlife conservation center. Vantara aims to blend advanced technology, partnerships, and philanthropy for impactful biodiversity conservation in India while aligning with Reliance’s increasing ESG (environmental, social, and governance) commitments.

    Vantara is not designed as a profit-making venture but as a strategic vehicle for:

    1.Enhancing Reliance’s social license to operate, especially as environmental compliance tightens in India.

    2.Building goodwill with the public, policymakers, and global organizations.

    3.Differentiating Reliance from other corporates that limit social responsibility to donations, by directly running a world-class, operationally intense conservation project.

    This approach positions Reliance at the intersection of business influence,
    philanthropy, and future-facing ESG strategy, setting it apart both in India and globally.

    What it is in reality?

    Firstly What is Carbon Credit?

    A carbon credit is a tradable certificate or permit that represents the right to emit one metric ton of carbon dioxide or an equivalent amount of another greenhouse gas. These credits are generated by projects that reduce, avoid, or sequester greenhouse gas emissions, such as reforestation or renewable energy projects. Companies or organizations can buy carbon credits to offset their own emissions, helping them meet regulatory limits or voluntary climate goals. The credits are verified and certified under recognized standards, ensuring their authenticity and effectiveness in mitigating climate change. Carbon credits play a key role in creating financial incentives for reducing global greenhouse gas emissions


    With over 3,000 acres of green cover, new forests, water bodies, and restored habitats, VANTARA is designed to sequester large quantities of atmospheric CO₂, qualifying it as an eligible project under India’s new Carbon Credit Trading Scheme and international standards like Verra and Gold Standard.

    Each acre of afforested or restored land can generate carbon offsets which are then verified, certified, and sold on emerging carbon markets.
    For example, it is estimated VANTARA could produce around 18,000–19,000 credits per year, valued at about $30 each, by registering plantations and biodiversity projects as “carbon assets

    Ambani is pre-empting regulation as India formalizes its carbon credit market, Reliance is positioned as a frontrunner in large-scale, verifiable offset generation

    Vantara is far more than a philanthropic animal sanctuary—it is central to Ambani’s plan to create and monetize carbon assets, offset Reliance’s emissions, and turn environmental stewardship into a scalable, profitable enterprise.

    ReplyDelete
  14. Super bro...hats off your hard work bro...thanks a lot...❤️

    ReplyDelete
  15. Super bro really big update for me it's give much lessons to understand more about reliance. Thank you so much for details article.

    ReplyDelete
  16. Reliance இல் அருமையான புரிதல் ஏற்படுத்தியதற்கு நன்றி bro. I Eagerly waiting for bulk investing in any corrections.

    ReplyDelete
  17. Thanks for very very useful information brother

    ReplyDelete
  18. வணக்கம் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சிறந்த முறையில் கட்டுரை அமைந்துள்ளது நன்றி வணக்கம்

    ReplyDelete
  19. Thank you for sharing this insightful article

    ReplyDelete
  20. யூ டிபில் நீங்கள் விளக்குவதும் அதைவிட ஒவ்வொரு பங்கை பற்றியும் தெளிவாக இங்கு விளக்கி உள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete