Ola electric நிறுவனத்தை பற்றி தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம். இதை பதிவு செய்வது தொடர்பாக பல முறை யோசித்து போடலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்த பின் போடலாம் என்ற முடிவை எடுத்து வந்துள்ளேன் மேலும் இது வெறும் ஒரு பதிவாக இருக்க போவதில்லை மேற்கொண்டு சில பதிவுகள் வரும் காலத்தில் வருவதை உறுதி செய்கிறேன்.
Electric 2W:
முதன் முதலாக எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவில் பெரும் விற்பனையை சந்தித்த நிறுவனம் ola electric தான் பிறகு போட்டி அதிகமானது. இவர்கள் பல இடத்தில் சறுக்க தொடங்கினர். விற்பனை சுமார் ஒரு மாதத்திற்கு 45000 என்ற அளவில் இருந்து வெறும் 5000 என்ற அளவிற்கு சுருங்கியது. இதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பே முதல் காரணம்.
Service இல் ஏற்பட்ட குறைபாடு அதை சரி செய்ய நிறுவனம் பெரிதாக முனைப்பு காட்டவில்லை இதனால் தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வந்து விற்பனையில் பெரும் அடி ஏற்பட்டது.
Service ஒழுங்கா செய்யாதற்கு பல காரணங்கள் உண்டு, வாகனங்களின் உதிரிபாகங்கள் எளிதாக கிடைக்கவில்லை உதாரணத்திற்கு ஒரு service request வந்துள்ளது என்றால் அதற்கான பொருளை கைவசம் வைக்காமல் ஆர்டர் செய்வது அது கைக்கு கிடைக்க பல வாரங்கள் ஆனது இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இரண்டாவது, இந்த electric துறை புதிது என்பதால் சரியான technician போதிய அளவில் முன்னேற்பாடு செய்யாதது ஒரு பெரிய தவறாக இருந்தது. நுகர்வோரின் பிரச்சினையை சரியாக தீர்க்காதது ஒரு பெரிய காரணம்.
மூன்றாவது, இத்தகைய பிரச்சனையை நிறுவனம் முன்கூட்டியே முன்வந்து கவனிக்க தவறியது மிகப்பெரும் தவறு இந்த பிரச்சனை வருட கணக்கில் பெரிதாகி கொண்டே போனது சமூகவலைதளங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியது.
எல்லாம் கை மீறி போன பிறகு நிறுவன தலைமை உள்ளே வந்தது அதுவும் Government உள்ளே வந்து நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்த பிறகு தான் அதையும் செய்ய ஆரம்பித்தார்கள்.
நான்காவது, இந்த service பிரச்சனை வெறும் ola நிறுவனம் மட்டுமில்லாமல் Iqube, chatak, ather, போன்ற நிறுவனங்களிலும் ஏற்பட்டது ஆனால் அவர்கள் அதை திறமையாக கையாண்டனர் சமூக வலைதளங்களில் அவர்கள் அவர்களின் வண்டிகளை நன்றாக marketing செய்தார்கள்.
ஆனால் அதையும் ola செய்ய தவறியது இதன் விளைவு மற்ற நிறுவனங்களின் வளர்ச்சியிலும் Ola நிறுவனத்தின் வீழ்ச்சியிலும் எப்படி பங்காற்றியது என்பதை பார்த்து வருகிறோம். நிறுவனத்தின் தவறுகளை எனது கண்ணோத்தில் பார்த்தோம். அதை எவ்வாறு சரி செய்து வருகிறார்கள் என்பதை மேலும் பார்ப்போம்.
Ola second phase:
முதலில் service, இங்கு இருந்து ola அவர்களின் தவறுகளை சரி செய்ய ஆரம்பித்துள்ளனர். Hyper service மூலம் விரைவாக service கொடுக்க நிறுவனம் தயாராக உள்ளது. 80% service backlogs முழுமையாக clear செய்து உள்ளது.
Ola second phase:
முதலில் service, இங்கு இருந்து ola அவர்களின் தவறுகளை சரி செய்ய ஆரம்பித்துள்ளனர். Hyper service மூலம் விரைவாக service கொடுக்க நிறுவனம் தயாராக உள்ளது. 80% service backlogs முழுமையாக clear செய்து உள்ளது.
மேலும் சில சேவை center இல் same day delivery என்னும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. (இந்த same day delivery இல் எனது வாகனம் service செய்யப்பட்டது என் அனுபவம்).
உதிரி பாகங்கள் இருப்பை உறுதி செய்தல், முன்னர் customer பிரச்சினைகளை சொன்ன பிறகு தான் உதிரி பாகங்கள் ஆர்டர் செய்யப்பட்டு அது கைக்கு கிடைத்து வாகனங்கள் சரியாக வார கணக்கு மாத கணக்கில் காலம் ஏற்பட்டது.
ஆனால் தற்போது உதிரிபாகங்கள் முன் கூட்டியே தயாராக இருக்கிறது இதன் மூலம் விரைவான service வண்டிகளுக்கு கிடைக்கிறது இதன் மூலம் service backlogs பெரிய அளவில் இல்லாமல் இருக்கிறது. இது பெரும் முன்னேற்றம் என்பது என் பார்வை.
அடுத்து Ola நிறுவனம் செய்ய தவறியது சமூக வலைதளங்களில் அவர்களின் products ஐ விளம்பர படுத்துவது தற்போது அதை நிறுவனம் கண்டறிந்து social media influencer கொண்டு விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். விரைவில் நாம் பார்ப்போம் இதற்கு முன் குறைகளை கூறி வந்த influencer கள் இனி நிறைகளை கூறுவதை.
இது மிகவும் முக்கியம் இதற்கான செலவை எந்த ஒரு நிறுவனமும் செய்தே ஆக வேண்டும் இல்லை என்றால் போட்டி நிறுவனங்கள் நொடி பொழுதில் முடித்து விடும் என்பதை உணர்ந்து கொண்டார்கள் என்று நம்புகிறேன்.
தற்போது சர்வீஸ் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றி பார்த்துள்ளோம் எதிர்கால வளர்ச்சி திட்டம் தொடர்பாக நாம் பார்ப்போம்.
Gigafactory:
நிறுவனம் தனது செலவை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது அதில் ஒன்று தான் பேட்டரி செல் தயாரிப்பு. சொந்தமாக பேட்டரி செல் தயாரிப்பதின் மூலம் இவர்களின் மார்ஜின் வெகுவாக உயரும். இத்தகைய பேட்டரி செல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதனால் லாப அளவு சுருங்கும் வாகனங்கள் விலை உயரும் ஆனால் சொந்தமாக தயாரிப்பதின் மூலம் இவை தடுக்கப்படும்.
தற்போது சர்வீஸ் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றி பார்த்துள்ளோம் எதிர்கால வளர்ச்சி திட்டம் தொடர்பாக நாம் பார்ப்போம்.
Gigafactory:
நிறுவனம் தனது செலவை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது அதில் ஒன்று தான் பேட்டரி செல் தயாரிப்பு. சொந்தமாக பேட்டரி செல் தயாரிப்பதின் மூலம் இவர்களின் மார்ஜின் வெகுவாக உயரும். இத்தகைய பேட்டரி செல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதனால் லாப அளவு சுருங்கும் வாகனங்கள் விலை உயரும் ஆனால் சொந்தமாக தயாரிப்பதின் மூலம் இவை தடுக்கப்படும்.
மேலும் இவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் இந்த பேட்டரி செல் உற்பத்தி இருந்து உள்ளது எப்படி என்று தெரியுமா? நிறுவனம் அதன் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தாமல் பேட்டரி செல் மீது கவனம் செலுத்தியதால் வாகன பிரிவு service மற்றும் புது மாடல்களை அறிமுகப்படுத்துவதில் தாமதம் செய்தார்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
உதாரணம் S1 sports விற்பனைக்கு வரும் என்று சொல்லிய கால அளவை தாண்டி இன்னும் வராதது. மேலும் Ola electric இன் அடுத்த Gen S2 ரக வாகனங்கள் இன்னும் அறிமுகபடுத்தாமல் இருப்பது போன்றவைகள்.அதே நிறுவனத்தில் Ather Hero TVS போன்ற இரண்டாவது மாடலை களம் இறக்கி குறிப்பிடதக்க வெற்றியை அடைந்து உள்ளனர்.
S2 மாடல் அறிமுகம் Ola electric ஐ பொறுத்தவரை வெற்றியை தேடி தரும் என்பது என் எண்ணம் பொறுத்து இருந்து பார்போம்.
Ola பங்கு விலை உயர்வு:
சமீபத்தில் Ola நிறுவனத்தின் பங்கு விலை இரட்டிப்பாக மாறியது. இதற்கு காரணங்கள் நாம் மேலே விவரித்துள்ளோம் மேலும் முக்கிய காரணத்தை பார்ப்போம்.
நிறுவனம் அதன் லாபத்தை அடைவதில் மிகவும் துரிதமாக செயல்படுகிறது. அதற்கான திட்டம் என்ன என்றால் ஒரு மாதத்திற்கு 15000 வண்டிகளை விற்க வேண்டும் அது தான் தற்போது ola electric இன் இலக்காக உள்ளது.
Ola பங்கு விலை உயர்வு:
சமீபத்தில் Ola நிறுவனத்தின் பங்கு விலை இரட்டிப்பாக மாறியது. இதற்கு காரணங்கள் நாம் மேலே விவரித்துள்ளோம் மேலும் முக்கிய காரணத்தை பார்ப்போம்.
நிறுவனம் அதன் லாபத்தை அடைவதில் மிகவும் துரிதமாக செயல்படுகிறது. அதற்கான திட்டம் என்ன என்றால் ஒரு மாதத்திற்கு 15000 வண்டிகளை விற்க வேண்டும் அது தான் தற்போது ola electric இன் இலக்காக உள்ளது.
ஒரு காலத்தில் 40000 வண்டிகளை விற்பனை செய்தது ஆனால் தற்போது 15000 வண்டிகளை விற்க போராடி வருகிறது. கடந்த சில மாதங்களாக விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது 5000 யூனிட் விற்று ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டது மேலும் சில மாதங்கள் 10000 யூனிட்டுக்கு கீழே விற்பனை செய்து வந்தது ஆனால் தற்போது முன்னேற்றம் காணப்படுகிறது.
15000 வண்டிகளை விற்று வருகிறது விற்பனை கூடி வருகிறது இதை சரியாக செய்து ஒவ்வொரு மாதமும் 15000 அல்லது அதற்கு மேற்பட்ட வண்டிகளை விற்பனை செய்தால் நிறுவனம் ebita அளவில் லாபத்தை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.
இதன் காரணம் தான் நிறுவன பங்கு விலை 20 ரூபாயிலிருந்து 45 ரூபாய்க்கு உயர காரணம். ஆனால் விற்பனை தொடர்ந்து உயர வேண்டும் அதை நாம் கண் காணிக்க வேண்டும் Q1 காலாண்டில் நிறுவனம் 45000 வண்டிகளை target ஆக கொண்டு செயல்பட்டு வருகிறது அதை அடைவார்கள் என்றும் நம்புகிறேன் அவர்களின் செயல்பாடு மூலம். இப்போது நாம் வாகன விற்பனையை பற்றி பார்த்துள்ளோம் அடுத்து பேட்டரி செல் பிரிவை பார்ப்போம்.
Battery giga factory:
Battery தயாரிப்பு வாகன விற்பனையின் மார்ஜின் அளவை பெருக்குவது மட்டுமில்லாமல், அதை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதையும் Ola electric நோக்கமாக கொண்டுள்ளது.
Battery giga factory:
Battery தயாரிப்பு வாகன விற்பனையின் மார்ஜின் அளவை பெருக்குவது மட்டுமில்லாமல், அதை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதையும் Ola electric நோக்கமாக கொண்டுள்ளது.
இது மிகவும் கடினமான ஒன்று தான் இதை எப்படி சாதிக்க போகிறார்கள் என்பதை கவனமாக பார்க்க வேண்டும். இது போக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டம் போட்டுள்ளது நிறுவனம். அது போக வீடுகளுக்கு inverter விற்பனை செய்தும் வருகிறது ஆனால் இப்பிரிவு வளரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை ஆனால் கவனிக்க வேண்டியது நம் கடமை.
தற்போது ola electric giga factory capacity 2.5Gw ஆக உள்ளது இதை 6Gw ஆக உயர்த்த திட்டம் போட்டுள்ளது. மேலும் தற்போது QIP மூலம் பணத்தை திரட்டி முதலீடும் செய்து வருகின்றனர். இதெல்லாம் தாண்டி நாட்டின் முதல் லித்தியம் செல் தயாரிப்பாளராக Ola நிறுவனம் உள்ளது.
பங்கில் முதலீடு:
Ola நிறுவனத்தில் Motilal போன்றவர்கள் பெரும் Risk எடுத்து முதலீடு செய்துள்ளனர். பல பெரும் நிறுவனங்கள் IPO க்கு பிறகு நிறுவன பங்கை விற்று வெளியேறினர்.
பங்கில் முதலீடு:
Ola நிறுவனத்தில் Motilal போன்றவர்கள் பெரும் Risk எடுத்து முதலீடு செய்துள்ளனர். பல பெரும் நிறுவனங்கள் IPO க்கு பிறகு நிறுவன பங்கை விற்று வெளியேறினர்.
ஆனால் மோதிலால் போன்றவர்கள் குறைந்த விலையில் மாற்றதை எண்ணி உள்ளே வந்துள்ளனர். பங்கு முதலீடு என்பதே மிகவும் ஆபத்தானது ஆனால் நாம் எடுக்கும் முடிவு நாம் போடும் உழைப்பு போன்றவைகள் நமக்கு வெற்றியை தேடி தரும் என்பதை விட நல்ல அனுபவத்தை தரும் அதை மறுக்க முடியாத ஒன்று.
மேலும் இது பங்குசந்தையை பொறுத்தவரை மிகவும் ஆபத்தானது இதனால் என்னுடைய முடிவை பொது காலத்தில் சொல்வது தவறானது அதனால் நான் அதை இங்கு விளக்க முடியாது. Zomato 40 ரூபாய்க்கு இருந்த போது அதை மிகவும் கீழ் தனமாக சிலர் விமர்சித்தார்கள் ஆனால் இன்று அதை பற்றி வாயை திறக்க யோசிக்கிறார்கள்.
விமர்சனம் செய்யலாம் ஆனால் விரிவாக நிறுவனத்தின் நன்மை தீமைகளை விளக்கி அதில் உள்ள உண்மை தன்மையை அறிய வைத்து செய்யப்படும் விமர்சனம் வரவேற்கத்தக்கது ஆனால் அதே நேரத்தில் நம் விருப்பு வெறுப்புகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு செய்யப்படும் விமர்சனம் பயன்களை உண்டாக்காது என்பது என் கருத்து.
பங்குசந்தையை பொறுத்தவரை பங்கில் எடுக்கும் முடிவை விட தேடல் மிக முக்கியம் இந்த தேடல் முடிந்த பிறகே முடிவு என்பது பிறக்கப்படும் என்பது என் புரிதல் அப்படிப்பட்ட தேடல் உடன் ஆன புரிதல் இந்த பதிவில் இருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் தேடல் தொடரவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கமே தவிர பங்குகளை வாங்கவோ விற்கவோ சொல்வது நோக்கம் இல்லை மேலும் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் பற்றியும் இந்த பதிவில் இடம் பெற்றிருக்காது.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

16 Comments
❤️❤️❤️
ReplyDeleteSuper bro hour analysis
ReplyDeleteThank for your update
ReplyDeleteThank you for your article
ReplyDeleteThanks bro
ReplyDeleteThanks a lot.
ReplyDeleteThank you bro 🙏🏻
ReplyDeleteThank you.
ReplyDeleteUseful information brother
ReplyDeleteThanks bro..
ReplyDeleteGood
ReplyDeleteSuper article bro
ReplyDeleteRead you article, clear analysis..Thank you bro, keep it..
ReplyDeleteThanks for detailed analysis. Its very clear
ReplyDeleteThank you brother
ReplyDeleteவணக்கம் சகோ
ReplyDelete