முதலீட்டில் அனைவருக்கும் உள்ள ஒரு ஆசை என்ன என்றால் எப்படியாவது ஒரு கோடி என்ற இலக்கை அடைய வேண்டும் என்பது தான் சொல்ல போனால் சில காலங்களாக அது இன்னும் அதிகரித்துள்ளது எங்கு திரும்பினாலும் ஒரு கோடி என்ற இலக்கை எவ்வாறு அடைவது என்பதை பற்றிய விளக்கங்கள் உள்ளதையும் பார்த்து வருகிறோம்.
இந்த ஆசை சரியா என்று கேட்டால் சரி தான் எத்தனை பேர் இந்த இலக்கை அடைய முடிவு செய்கிறார்களோ அவர்கள் வாழ் நாளில் அடுத்த கட்டதை நோக்கி நகர ஆரம்பித்து விட்டனர் என்றே கூறலாம் ஆனால் இந்த இலக்கை அடைவது சுலபமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பது தான் என் பதில் பல சிக்கல்களையும் இன்னல்களையும் கடக்க வேண்டும் பல விஷயங்களை நாம் தியாகம் செய்ய வேண்டும் அவ்வளவு கடினமான பாதை தான் இந்த ஒரு கோடி என்ற இலக்கு அந்த இலக்கை ஒரு சாதாரண Middle class நபர்கள் அடைய ஒரு மூன்று வழி உண்டு அதை பற்றி நாம் பார்ப்போம் மேலும் என்னுடைய திட்டத்தை பற்றியும் கீழே விவரிக்கிறேன்.
1 கோடி இலக்குஇந்த இலக்கை அடைய சுலபமான மூன்று வழிகள் உள்ளன. ஒரு கேள்வி வரலாம் என்னது சுலபமா? மேலே அவ்வளவு பில்ட் அப் கொடுத்தியே அதெல்லாம் பொய்யா என தோணலாம் பொறுமையாக கேளுங்கள் புரிதல் ஏற்படும்.
உண்மையில் இந்த ஒரு கோடி இலக்கை அடைவது சுலபம் தான் தொடர்ந்து முதலீடு செய்வதால் கண்டிப்பாக இந்த இலக்கை அடைய முடியும் அதில் சந்தேகம் இல்லை ஆனால் அதற்கான காலம் தான் இங்கே பெரிய முக்கியமான ஒரு விஷயம் ஆக உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு உடன் என்ன என்ன வழிகள் உள்ளது எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை நாம் இப்போது பார்ப்போம்.
மூன்று வழிகள்இந்த மூன்று வழிகள் தான் பெரும்பாலும் தேர்வு செய்ய கூடிய ஒன்றாக இருக்கிறது.
5000 ரூபாய் மாத முதலீடு என்று நாம் நம் பயணத்தை தொடங்கினால் 1 கோடி இலக்கை அடைய எவ்வளவு காலம் எடுக்கும்? அதை பார்ப்போம்.
முதலில் பங்குசந்தைபங்குசந்தையில் SIP மாதம் 5000 ரூபாய் செய்வதன் மூலம் ஒரு கோடியை அடைய முடியுமா நிச்சயம் அதற்கு மேலும் முடியும் எடுக்கும் காலம் சுமார் 25.5 ஆண்டுகள் வரை இருக்கும்.
கேட்கும் போதே கண்ணை காட்டுகிறதா கணக்கு பார்த்தபின் எனக்கும் அப்படி தான் இருந்தது. 12% return என்ற அடிபடையில் பார்க்கும் போது இவ்வளவு கால அளவு ஏற்படும். இதில் நாம் செய்த முதலீடு 15,30,000 ஆக இருக்கும் கிடைக்கும் வருமானம் ஒரு கோடி ஆகும் ஆனால் பங்குசந்தை ஒரு ஆபத்தான இடம் இங்கு நாம் நீண்ட காலத்திற்கு SIP தொடங்க நினைத்தால் நமக்கு அதை பற்றிய புரிதல் இல்லாத ஒரு நிலை இருந்தால் நிச்சயமாக ஒரு ஆலோசகரை கேட்டு நம் சந்தேகங்களை உறுதி செய்து அதன்பின் தொடங்குவது சிறப்பு.
2) கோல்ட்
தங்க முதலீடு கால காலமாக நம் முன்னோர்கள் முதல் தற்போது நாம் முதற்கொண்டு செய்து வரும் ஒரு பழமையான முதலீடு தங்கம் தான் தொடர்ந்து உயர்ந்து கொண்டும் ஒரு நம்பிக்கையான முதலீடு வகை என்று கூறலாம்.
தங்கத்தில் முதலீடு செய்து ஒரு கோடியை அடைய எவ்வளவு காலம் எடுக்கும் என்றால் 29 ஆண்டுகள் வரை எடுக்கலாம். அதே மாதம் 5000 தான் இங்கேயும் மொத்தமாக 29 ஆண்டுகள் நாம் 17,40,000 வரை முதலீடு செய்திருப்போம் பங்குசந்தை முதலீட்டுடன் ஒப்பிடும் போது நமது இலக்கை அடைய ஒரு நான்கு ஆண்டு காலம் அதிகமாக ஆகலாம். ஆனால் தங்கம் தங்கம் தான் பாதுகாப்பான முதலீடு வகையில் முக்கிய மற்றும் முதன்மையான ஒன்று.
3) PPF
இருப்பதிலேயே மிகவும் வட்டி குறைவு இங்கு தான் 7.1% Return எதிர்பார்க்கலாம் இங்கும் இதே 5000 தான் மாத முதலீடு வருடம் ஒரு முறை நாம் 60000 என்று முதலீடு செய்தால் ஒரு கோடியை அடைய 37 வருடங்கள் ஆகும்.
இந்த பிரிவில் முதலீடு செய்தால் இதை அனுபவிக்க நாம் இருப்போமா என்பதே சந்தேகம் தான் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?? எனக்கு சுத்தமாக இல்லை. இந்த மூன்று வழிகளில் எது உங்களுக்கு சரியானதாக உள்ளது என்ற கருத்தை பதிவிடுங்கள்.
சரி ஒரு கோடியை அடைய இருக்கும் மூன்று வழிகளை நாம் இப்போது பார்த்தோம் இந்த மூன்று வழிகளில் எது என்னுடைய தேர்வு ஆக இருக்கும் என்று பார்த்தால் எதுவுமே இல்லை அதற்காக இதை நான் வெறுக்க மாட்டேன்.
இதிலும் என்னுடைய முதலீடு இருக்கும் மிகவும் குறைந்த அளவில் கவனம் செலுத்துவேன் ஆனால் இந்த வழிகளை நான் பயன் படுத்த மாட்டேன். நான் நம்புவது SIP என்ற திட்டத்தை அல்ல SIP முக்கியம் தான் ஆனால் இதை என் முதன்மையான திட்டமாக நான் கருத மாட்டேன்.
என் வழியாக நான் தேர்ந்தெடுத்தது சரியான ஒரு கால நேரம் தான் இது தான் என்னை உயர்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது சரியான நேரத்திற்கு காத்திருப்பது மற்றும் சரியான நேரம் வரும் போது சரியாக முதலீடு செய்வது நம் வளர்ச்சியின் வேகத்தை உயர்த்தும் என்று எண்ணம் எனக்கு உள்ளது இது ஏதோ இப்போது தோன்றியது அல்ல என் பயணம் ஆரம்பிக்கும் போதே இது தான் என் வழி என்று தேர்ந்தெடுத்து அதில் பயணத்தை தொடங்கி விட்டேன்.
உங்கள் வழியில் போகும் போது எவ்வளவு காலம் எடுக்கும் என்ற கேள்வி வரலாம் தெரியாது என்பது என் பதில் ஆனால் வளர்ச்சி என்பது எதிர்பார்க்காத நேரத்தில் ஏற்படுவது சராசரியாக மாத மாதம் தொடர்ந்து SIP செய்வது ஒரு அருமையான விஷயம் தான் ஆனால் அது போதுமானதா என்று என்னை கேட்டால் நிச்சயமாக இல்லை என்பது தான் என் பதில்.
நாம் ஒரு 30 வயதில் ஆரம்பிக்கிறோம் 60 வயதில் 1 கோடி என்ற இலக்கை அடைந்தால் அது அந்த கால கட்டத்தில் போதுமானதாக இருக்குமா என்றால் இருக்காது என்பதே உண்மை அப்போது இருக்கும் விலைவாசி உயர்வு பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தது.
சரி இந்த விலைவாசி உயர்வு அதெல்லாம் தாண்டி 60 வயதில் வரும் பணம் கொண்டு நமது இளமையை திரும்பி அனுபவிக்க முடியுமா நிச்சயம் முடியாது இது ஒரு பெரிய குறை இங்கே இந்த 5000 என்ற ரூபாயை நாம் உயர்த்தி கொண்டே போனால் வேகமாக 1 கோடி இலக்கை அடையலாம் ஆனால் ஒரு சாதாரண middle class மக்களுக்கு இது கடினமான ஒன்று செலவுகள் புதுசு புதுசா வரும் உண்மை தானே இல்லை என்று சொல்வீர்களா நீங்களே கமெண்ட்-ல் சொல்லுங்கள்.
வேகமான வளர்ச்சி
வேகமான வளர்ச்சி சத்தியமா நிச்சயம் சாத்தியம் ஆனால் இதை சரியாக நாம் செய்யா விட்டால் பெரும் இழப்பு உறுதி பெறும் வளர்ச்சியை அடைய நம் உழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள் நம்முடைய உழைப்பே நம்மை வேகமாக உயர்த்தும்.
அவ்வாறு தொடர்ந்து உழைத்து சரியான முடிவுகளை சரியான காலத்தில் நாம் எடுத்தால் நமது வெற்றி மிகவும் வேகமாக இருக்கும் மற்ற முதலீடுகளை விட இந்த வகையான முதலீடு செய்ய பொறுமை மிகவும் அவசியம்.
பொறுமை இழந்தால் அனைத்தையும் இழந்து விடுவோம் சிலருக்கு videos 2 நிமிடத்தில் பார்த்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் வீடியோவின் நீளம் அதிகமாக இருந்தால் அதில் உள்ள கருத்துகளை கூட கேட்க பொறுமை இல்லாத ஒரு நிலை தான் உள்ளது அவசர உலகத்தில் அவசரப்பட்டால் வளர்ச்சி ஏற்படாது நாம் அதே நிலையில் தொடர்ந்து இருக்க நேரிடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
என்னுடைய பார்வை நல்ல வேலைகள் செய்து பணம் அதிகமாக சம்பாதிப்பவர்கள் பற்றியது அல்ல எவ்வளவு தான் வேலை செய்தாலும் வருடங்கள் ஆனாலும் சம்பளம் பெரிதாக உயராது இங்கு 40 வயது ஆனால் நல்ல சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது அது ஒரு சில துறை மற்றும் தனிப்பட்ட சில நபர்கள் மட்டும் தானே தவிர எல்லோருக்கும் கிடைக்காது. அதனால் அப்படிப்பட்ட நபர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும் இறுதியாக பொறுமையுடன் திட்டங்களை தீட்டி சரியான நேரத்திற்கு காத்திருந்து செய்யும் முதலீடு வெற்றியை தரும் அதே சமயம் SIP சில சமயங்களில் உதவியாக இருக்கும் அதுவும் ஒரு பகுதி தான் என்பதை மறக்க கூடாது எதை எப்போது செய்வது என்பது தான் முக்கியம் அதை அறிந்து கொள்ள தொடர்ந்து இது போன்ற பல விஷயங்களை இந்த வலைத்தளத்தில் நாம் காண்போம் புரிதல்களை ஏற்படுத்தி கொள்வோம் தொடர்ந்து ஒன்றாக பயணிப்போம் உங்கள் Retail Options……
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.
22 Comments
Super bro
ReplyDeletePatience
ReplyDeleteWell said, thanks brother 😊
ReplyDeleteSuper bro. Naa direct stock and MF nu 2 layum invest pandra. Ipo current aa IT index la thaa 2 days once 100 SIP panitu iruka.
ReplyDelete52 week low ku pona apo 200 to 300 nu SIP panitu iruka.
IT sector aa porutha alavu direct stock la invest panalam. Aaana continues down fall aachu na oru stage la amount irukathu. So antha sector la matum intha decision.
Pakalam, ... .
Bro ninga sona aparam nanga irukarathu ila. Bajaj electronic pathi. Unga time la athayum add pani oru article potingana engaluku romba useful aa irukum.
Super bro
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteNike pathi article poduratha sonnigale, podu ga brother.
ReplyDeleteBro, I agree with your thought process and I'm happy to grow along with you. You are a bit different and understand the issues faced by middle-class people. I have also been following your channel for the last one and a half years, really happy about it.
ReplyDeleteநல்ல தகவல் மிக்க நன்றி ♥️
ReplyDeleteNalla padhivu
ReplyDeleteதெளிவாக மற்றும் விளக்கமாக சொல்லியதற்கு நன்றி
ReplyDeleteUsed gemini to translate. Worth the reading😇
ReplyDeleteSuper bron
ReplyDeleteThanks bro
ReplyDeleteSuper bro really useful information
ReplyDeleteஅருமை நண்பா
ReplyDeleteThanks for ur knowledge and ur hardwork
ReplyDeleteThank you bro
ReplyDeleteMSTC Ltd - Why giving 71% returns in 3 months ? It is just handling scrap, correct ? Can you look into this RO ? Are there any future opportunities ?
ReplyDelete🎉🎉❤️
ReplyDeleteIn my view PPF is best investment,
Since it has no risk and tax free.
Bro what is your view about lic policy
Since many are mocking lic policy holders,by saying your money is gone
Can you make a article on lic policy and make clear view on that.
What is the actual return look in lic policy.
It may educate many.
👍
ReplyDeleteஅற்புதமான பதிவு. முதலீட்டில் பொறுமை, தொடர்ச்சியான கற்றல் மற்றும் சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாக பகிர்ந்துள்ளீர்கள். பலருக்கும் இது ஊக்கமும் விழிப்புணர்வும் அளிக்கும். தொடர்ந்து சிறந்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள்!
ReplyDelete