ஏன் Power Sector வருங்காலத்தில் லாபத்தை அள்ளி தர போது??
நாம் பலமுறை Power Sector பற்றி விரிவாக பார்த்துள்ளோம் தற்போதைய Power தேவை உயர்வு பற்றியும் வருங்கால power தேவைகளை பற்றியும் இந்த power sector முன்னணி நிறுவனங்கள் பற்றியும் விவரித்துள்ளோம்.
மேலும் ஒரு சுவாரசியமான தகவல் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம் இதன் மூலம் இந்த Sector இன் எதிர்கால தேவை மாற்றங்கள் எப்படி இருக்கும் மற்றும் இந்த துறையின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.
Data Center மற்றும் POWER
வருங்காலத்தில் இது இரண்டும் பிண்ணி பிணைந்து இருக்க போகிறது என்பதில் மாற்றம் இல்லை. அதற்கு முன் இந்தியாவில் Power தேவைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது மின்னணு சாதனங்களின் பயன்பாடு நம் நாட்டில் இப்போ விரிவாக வளர்ந்து வருகிறது அதை சமாளிக்க solar, wind, traditional power உற்பத்தி தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இப்போது அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த தேவை இன்னும் பெரிய அளவில் உயர இருக்கிறது அதற்கு வழி வகுக்கும் இடத்தில் அமைய உள்ளது தான் Data centers. இந்த Data centers இன் Power தேவைகளை நீங்கள் கேட்டால் ஆடி போய் விடுவீர்கள் அந்த அளவுக்கு பவர் தேவை மிகவும் அதிகமாக இருக்க போகிறது.
இப்போதைய நிலையில் இருந்து பெரும் லாபத்தை மிக குறுகிய குறிப்பிட்ட காலத்தில் நமது நாட்டின் power producing நிறுவனங்கள் அடையும் என்பது என் எண்ணம் ஆக இருக்கிறது. ஏன் சொல்ல போனால் இப்போது இருக்கும் வருவாய் இரட்டிப்பு கூட ஆகலாம் என்று என்னுடைய எதிர்பார்ப்பு இருக்கிறது.
Data Center Power consumption
Data Center இன் Power தேவைகள் விண்ணை முட்டும் அளவுக்கு வளர இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. Data Center Current bill தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்க போகிறது நிலையான வருமான உயர்வை நிறுவனங்கள் அடையும் அதே நேரத்தில் நம் நாட்டில் Data centers தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்க போகிறது அதிலும் எவ்வகையான சந்தேகமும் இல்லை.
இதனால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரும் வருவாய் வளர்ச்சியை power உற்பத்தி நிறுவனங்கள் அடையும் இப்போது ஒரு உதாரணம் பார்ப்போம் 1gw Data center வருடத்திற்கு எவ்வளவு Power consume செய்கிறது என்பது எளிதானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே அது 1gw தான் ஆனால் இதற்கான கட்டணம் எவ்வளவு என்பது இங்கு முக்கிய அம்சமே கிட்டதட்ட 1.3 பில்லியன் டாலர்கள் வருடத்திற்கு மின் நுகர்வு கட்டணமாக செலுத்த வேண்டிய நிலையில் தற்போது உள்ளது.
ஒரு ஐந்து வருட அளவில் எடுக்கும் போது கட்டண செலவு மட்டும் எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கு போட்டு பாருங்கள் இது தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்க போகிறது. Data Center capacity நம் நாட்டில் உயர்ந்து கொண்டே இருக்கும் அதே சமயத்தில் power sector வளர்ச்சி உச்சத்தை அடையும் என்பது என் கணிப்பாக இருக்கிறது.
அதே போல் இதில் வெறும் power உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மட்டும் பயன் அடைவதில்லை பவர் உற்பத்தி செய்ய தேவையான பொருட்களை தயாரிப்பவர்கள் வருமானமும் உயரும் ஆனால் என்ன அந்த பகுதி ஏற்கனவே எங்கயோ உயரத்தில் போய் விட்டது.
அதனால் நான் செய்ய விரும்புவது நிலையான தொடர் வளர்ச்சியை தர கூடிய உற்பத்தி பக்கம் இருப்பது தான் இப்போது இருக்கும் சூழ்நிலையில் சரியாக இருக்கும் என்பது என் எண்ணம் மேலும் ஏதாவது ஒரு சரிவு வந்து ஒரு வாய்ப்பு கிடைத்தால் மற்ற பகுதிகளை பற்றி சிந்திக்க ஆரம்பிப்பேன் என்பதையும் சொல்லி கொள்கிறேன்.
Advanced Chips
இந்த Data centers ஐ பொறுத்தவரை சிப் தான் எல்லாம் இது தான் பெரிய அளவில் மின்சாரத்தை உறிஞ்சுகிறது. தற்போது புது powerfull ஆன Chip வந்த வண்ணம் உள்ளது உதாரணத்திற்கு பார்க்க வேண்டும் என்றால் NVIDIA வின் முந்தைய தலைமுறை சிப் மற்றும் தற்போதைய தலைமுறை chip பற்றி நாம் பார்க்க வேண்டும்.
முந்தைய தலைமுறை chips ஆன Blackwell Total Rack capacity கிட்டதட்ட 6000 எண்ணிக்கை அளவில் இருந்துள்ளது ஆனால் தற்போதைய தலைமுறையான vera Rubin அதே 1GW Data centers க்கு தேவையான rack அளவு பார்த்தால் வெறும் 3557 தான்.
இதனால் பவர் தேவை குறைய வேண்டும் அல்லவா?? ஏன் என்றால் ஹார்டுவேர் அளவு குறைவு அதனால் தேவை Power குறையணும் ஆனால் குறையாமல் அதே அளவில் இருக்க காரணம் இவ்வகையான சிப் மிகவும் சக்தி வாய்ந்தது இது பெரிய அளவில் மின்சாரத்தை பயன்படுத்த கூடிய ஒன்றாக இருக்க போகிறது. தொடர்ந்து இந்த இடத்தில் நடக்கும் மாற்றங்கள் மின்சார தேவையை உறுதிபடுத்தி கொண்டே இருக்க போகிறது என்பதில் ஐயம் இல்லை.
Data Center costs
முந்தைய தலைமுறை Blackwell server விலையை காட்டிலும் தற்போதைய தலைமுறை Vera Rubin விலை கணிசமாக உயர்ந்துள்ளது hardware தேவைகள் குறைந்த போதிலும் chip விலை கணிசமாக உயர்ந்துள்ளது இதனால் விலை பெரிய அளவில் உயர்ந்து உள்ளது.
Blackwell chip கொண்டு உருவாக்க படும் 1gw Data centers விலை சுமார் 40 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது இதுவே Vera Rubin பொருத்தவரை 47 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vera Rubin இல் மொத்தம் 3557 Racks இருக்க போகிறது இதில் ஒரு Rack க்கு ஆகும் செலவு மட்டும் சுமார் 9.1 மில்லியன் டாலர்கள் ஆகும்.
அது போக வருடங்கள் ஆக ஆக hardware depreciation costs மின்சார கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். இப்போது இதை நாம் விளக்க காரணம் ஒன்று இருக்கிறது இந்த data center business பெரிய அளவில் வருமானத்தை தரும் business என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இதை அனைவரும் எளிதாக செய்து முடியாது என்பதை மேற்கூறிய தகவல்கள் மூலம் அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இதை எதற்கு நான் அழுத்தமாக கூறுகிறேன் என்றால் இந்த Data center boom ஐ வைத்து பல நிறுவனங்கள் அறிக்கைகள் கொடுக்கலாம் நாங்க data center அமைக்க போகிறோம் என்று அப்போது இது போன்ற காரணங்களை காட்டி பங்கின் விலையை உயர்த்த பலரும் முன் வருவார்கள் எப்படியும் ஒரு பங்கு உயர்ந்த பின் தான் retail investors கண்ணுக்கு புலப்படும் அப்போது கதைகளை நம்பி ஒண்ணும் இல்லாத நிறுவனத்தில் பணத்தை போட்டு சிக்கலில் சிக்க வாய்ப்புகள் அதிகம் அதனால் இந்த துறையை பற்றி நீங்கள் நன்று அறிய வேண்டும் என்பதை முன் கூட்டியே உணர்த்த இதை நான் விளக்கி உள்ளேன்.
பெரும் நிறுவனங்களின் போட்டி
நமது நாட்டில் பல பெரும் நிறுவனங்கள் இந்த data center அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அதில் முக்கியமானவை Reliance, Tata குழுமம் TCS, Adani குழுமம், Airtel நிறுவனம் முக்கிய நிலையில் இருக்கிறது.
இதில் பெரிய advantage யாருக்கு இருக்கும் என்பதை பார்ப்போம். Reliance, Tata, Adani இந்த மூன்று பெரும் குழுமங்கள் இந்த துறையை இந்தியாவில் ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயம் இல்லை அதற்கான capacity இந்த நிறுவனத்தில் உள்ளது இதில் எது Best என்பதை பார்ப்போம்.
அதற்கு முன் நான் எது Best என்று சொல்லுவேன் என்று நீங்கள் கணித்திருந்தால் மாறக்கமால் கீழே பதிவிடுங்கள். Guess செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் ஆம் Reliance தான் உங்கள் மனதில் டக்குனு ஒரு எண்ணம் ஏற்படும் reliance ஐ இவன் விட மாட்டான் என்று ஆனால் அடுத்து வரப்போகும் தகவல்களை பார்க்கும் போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
என்னை பொறுத்தவரை இருக்க கூடிய விஷயங்களை உள்ளபடி சொல்லுவேன் எனக்காக செய்ய படும் research அதை அப்படியே இங்கு சமர்ப்பிக்கிறேன் இதில் எந்த சமரசமும் இருக்காது என்னை நானே ஏமாற்றி கொண்டால் இழப்பு எனக்கு தான் என்பதையும் தெரிய படுத்தி கொள்கிறேன் மேலும் இந்த பதிவு அந்த பங்கை வாங்கு என்ற பரிந்துரை இல்லை என்பதை உணர்த்த விரும்புகிறேன் நிறுவன மாற்றங்களை விளக்க எண்ணுகிறேன் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
சரி, ஏன் Reliance என்ற கேள்விக்கு பதில் இங்கு பார்ப்போம் இந்தியாவில் ஒரே இடத்தில் மிகப்பெரும் data center ஐ அமைக்க போகும் ஒரே நிறுவனம் Reliance மட்டும் தான் இது இந்தியாவை பொருத்தவரை மட்டும் இல்லாமல் உலகளவில் மிகப்பெரும் Single site பெரிய Data center ஆக அமைய உள்ளது. 3gw capacity இருக்க போகிறது ஜாம்நகர் பகுதியில் அமைய உள்ளது கவனிக்க வேண்டும்.
இந்த Data center க்கு தேவையான நிலம் இதர வசதிகளுக்கு பெரிய செலவு செய்ய வேண்டும் நாம் மேலே பார்த்தோம் இந்த Data centers க்கு மின்சார கட்டணம் ஒரு பெரிய செலவாக இருக்க போகிறது என்று ஆனால் மற்ற போட்டி குழுமத்தை காட்டிலும் மிக சிறப்பாக திட்டமிட்டுள்ளது Reliance நிறுவனம்.
என்ன திட்டம் இதன் மூலம் மின்சார தேவையை எவ்வாறு பூர்த்தி செய்யும் என்று கேட்டால் Reliance இன் New Energy Giga Complex பற்றி சென்ற பதிவில் விளக்கி உள்ளேன் பார்க்காத நண்பர்கள் சென்று படியுங்கள் புரியும் இந்த giga factory அருகில் தான் 3gw Data centers அமைக்க உள்ளது இதனால் என்ன பயன் என்று கேட்கலாம் reliance Kutch என்ற இடத்தில் உலகின் மிகப்பெரிய solar மின் உற்பத்தி மையத்தை உருவாக்கி வருகிறது இதன் அளவு கேட்டால் தலையே சுற்றி விடும் 5,50,000 ஏக்கர் பரப்பளவில் இந்த சோலார் project அமைந்து வருகிறது.
இதற்கு தேவையான சோலார் பேனல் reliance நிறுவனமே உற்பத்தி செய்து வருகிறது இதன் மூலம் ஒரு பெரிய அளவில் நிதி சேமிக்கப்படும் மேலும் அங்கு உற்பத்தி செய்யும் மின்சாரத்தை ஜாம் நகரில் உள்ள Giga Factory க்கும் Data centers க்கும் பயன்படுத்துவது தான் reliance திட்டம் இது முழுக்க முழுக்க Solar மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும்.
இதனால் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் மின்சார செலவு இல்லாமல் இருக்கும் இதன் விளைவு இவர்களின் லாபம் மற்ற நிறுவனங்கள் உடன் ஒப்பிடும் போது நான் சொல்ல வில்லை நீங்களே கற்பனை செய்து பாருங்கள் மார்ஜின் எந்த அளவிற்கு இருக்கும் வருவாய் எவ்வாறு இருக்கும் என்று இந்த மின்சாரத்தை அங்கிருந்து கொண்டு வர Transmisson line அமைக்கும் பணி நடந்து வருகிறது.
Tata Adani இருவருக்கும் இதே போல வாய்ப்பு இருக்கிறது ஆனால் அவர்கள் அமைக்க போகும் data center க்கு அவர்கள் பவர் சப்ளை செய்ய கூடிய இடத்தில் இருக்கா என்பதை கவனிக்க வேண்டும் அவ்வாறு இல்லை எனில் மற்ற power நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும் அப்போது மின்சாரத்திற்கான செலவு லாபத்தை குறைக்கும் எளிதாக Expansion நடப்பதில் பிரச்சனை ஏற்படும் என்பதை உணர்த்த விரும்புகிறேன்.
தற்போது வரை இந்த பிரிவில் reliance திட்டம் மிகவும் என்னை கவர்ந்துள்ளது. மேலும் இத்தகைய திட்டங்களை பெரும் நிறுவனங்கள் எவ்வாறு கையாளுகிறது என்பதை நாம் பார்த்தோம் இதே போல புதிதாக ஒரு நிறுவனம் இந்த infrastructure ஐ உருவாக்குவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதையும் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அதனால் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பது என் வேண்டு கொள் மேற்கொண்டு அடுத்த அடுத்த பதிவில் இந்த பதிவின் தொடர்ச்சியாக பல விஷயங்களை நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம். அதே போல மீண்டும் ஒரு முறை தெரிவித்து கொள்கிறேன் இந்த பதிவில் நீங்கள் எந்த நிறுவனத்தையும் வாங்க வேண்டும் விற்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் கிடையாது இந்த பதிவின் நோக்கமே நடக்கும் மாற்றங்களையும் நிறுவனத்தின் செயல்திறனையும் உங்களுக்கு தெரியப்படுத்துவது தான் தொடர்ந்து இது போல விஷயங்களை நாம் கற்று தெரிந்து கொள்வோம் தொடர்ந்து ஒன்றாக பயணிப்போம் உங்கள் Retail Options……
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது

21 Comments
Super update bro thank you
ReplyDeleteAppreciated for ur info bro.
ReplyDeleteSuper bro ♥️
ReplyDeleteThanks bro
ReplyDeleteஅருமையான பதிவு சகோ
ReplyDeleteThanks bro
ReplyDeleteThank you bro
ReplyDeleteThanks for detailed explanation. Appreciate it !!
ReplyDeleteNice explanation bro
ReplyDeleteVery very useful information brother
ReplyDeleteநன்றிகள் 🙏
ReplyDeletegood effort
ReplyDeleteuseful information bro
ReplyDeleteValuable research bro.keep it up
ReplyDeleteAll aspects are acceptable.
Thank you for information bro
ReplyDeleteSuper bro...thanks 👌
ReplyDeleteHats off your hard work bro....
ReplyDeleteArticle pathachu
ReplyDeleteSema analysis. Vera level la plan pandranga. Romba thanks bro.
ReplyDeleteBro oru doubt..
Reliance transmission line work poguthu nu sonninga la. Athu avangale own aa pandranga la. Ila vera company ku order koduthurukangala..
Thank you bro 🙌🏻
ReplyDeleteசிறந்த கட்டுரை நண்பரே.
ReplyDelete