Header Ads Widget

சனி ஞாயிறுகளிலும் பணம் சம்பாதிக்கும் வழி இதோ!!


பங்குசந்தையை பொறுத்தவரை கால நேரம், களம், சூழல் என அனைத்தும் முதலீடு செய்ய முக்கிய ஒன்று. சில காலங்களில் பங்குகள் மற்றும் பங்குகள் சார்ந்த mutual fund இல் முதலீடு செய்ய ஏற்ற நேரம் இருக்கும் அச்சமயத்தில் இதை செய்தால் நல்ல வெற்றி கிடைக்கும். 

ஆனால் பல சமயங்களில் இத்தகைய வாய்ப்பு நமக்கு கிடைக்காது அந்த நேரங்களில் நாம் பங்குகளில் முதலீடு செய்வதால் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கும் அதே சமயம் நாம் மாத மாதம் கிடைக்கும் பணத்தை முதலீடு செய்ய ஆர்வமாக இருப்போம். 

அந்த ஆர்வத்தில் பங்குகள் அல்லது mutual funds உச்சத்தில் இருக்கும் முதலீடு செய்தால் லாபம் வர வாய்ப்பு குறைவு மேலும் தற்போது போல ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் சந்தை வேகமாக சரியும் 50% மேல் வீழ்ச்சி உறுதி உதாரணத்திற்கு இப்போது இருக்கும் இந்த நிலைமை சிறந்து எடுத்துக்காட்டு இத்தகைய பிரச்சனையை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதையும் இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்க போகிறோம்.


வாய்ப்புக்காக காத்திருத்தல்

பங்குசந்தை உச்சத்தில் இருக்கும் போது நாம் நம் பணத்தை வைத்து கொண்டு சும்மா இருந்தால் அந்த பணம் வேலை செய்யாது என்ற கவலை இருக்கலாம் ஆனால் சும்மா இருக்கும் பணத்தை வேலை செய்ய வைத்து நல்ல வாய்ப்பு வரும் போது முதலீடு செய்ய ஒரு சிறந்த வழியாக Liquid Funds உள்ளது ஆம் Liquid Funds பற்றி தான் நாம் பேச இருக்கிறோம்.

Liquid fund

கடந்த இரண்டரை ஆண்டுகளாக இதை பற்றி நாம் பேசி வருகிறோம் அதே சமயத்தில் நம் சந்தை கடந்த இரண்டரை வருடமாக பெரிதாக performance செய்யாமல் தான் உள்ளது. 

சரியாக 2024 இல் மார்கெட் ஒரு உச்சத்தை தொடும் போது இதை பற்றி விவாதிக்க ஆரம்பித்தோம் தற்போது மார்கெட் சரிய ஆரம்பிக்கும் போது அதை உபயோகிக்க ஒரு சிறந்த வழியாக இருந்து வருகிறது. 

இரண்டரை வருடம் மார்கெட் உச்சத்தில் ஆசை படாமல் சரியான நேரத்திற்காண காத்திருந்தது தற்போது பெரும் பலனை அளிக்கிறது. நாம் இதுவரை காத்திருந்த நாளுக்கான வட்டி மற்றும் நம் மூலதனம் மட்டுமில்லாமல் குறைந்த விலையில் அதிக எண்ணிக்கையில் பங்குகளை வாங்க இது மிகவும் ஏற்ற வழியாக எனக்கு தெரிந்தது. 

மேலும் இதை பற்றி விளக்க வேண்டும் என்ற முடிவு ஏன் வந்தது என்றால் தொடர்ந்து இதை பற்றியான கேள்விகள் வந்த வண்ணம் உள்ளது அதனால் ஒரு முறை இதை பற்றி விளக்கினால் எப்போது யாருக்கு தேவையோ எளிமையாக தெரிந்து கொள்ள முடியும் அதே நேரத்தில் இதை பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு புரிதல் ஏற்பட வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

Liquid Fund பலன்கள்

பங்குகளில் அதிக லாபம் அதிக Risk இருக்கும் ஆனால் Liquid Funds குறைந்த Risk குறைந்த லாபம் இருக்கும். சனி ஞாயிறு என அனைத்து நாட்களிலும் நம் பணம் வளர ஒரு ஏற்ற வழி.

Liquid fund fixed deposit போன்ற ஒன்று தான் இரண்டிலும் கிட்டதட்ட ஒரு அளவான வட்டி தான் கிடைக்கும் சில சிறிய வங்கிகள் மற்றும் NBFC இல் வட்டி கூடுதலாக கிடைக்கும். 

ஆனால் அதே நேரத்தில் குறிப்பிட்ட கால அளவுக்கு முன் பணத்தை வெளியே எடுத்தால் பிறகு அதில் வரும் லாபம் குறையும் அதற்கு தனியாக ஒன்று முதல் ஒன்றரை சதவீதம் வரை இருக்கும் ஆனால் அதே நேரத்தில் நமக்கு தேவையான போது பணத்தை வெளியே எடுக்கும் வசதி liquid fund இல் இருக்கும். உதாரணத்திற்கு ரூபாய் 50000 க்குள் வெளிய எடுத்தால் சில AMC உடனே நமது வங்கி கணக்குக்கு அனுப்பி விடுவார்கள். 50000 மேலே செல்லும் போது T+1 ஆக இருக்கும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

யாருக்கு சரி

ஒரு குறிப்பிட்ட காலத்தில் நமக்கு பணம் தேவைபடும் சில மாதங்களில் ஏதாவது ஒரு அவசர தேவை ஏற்படலாம் அதை முன்கூட்டியே முடிவு செய்து இருப்பவர்களுக்கு பயன்படலாம்.

இடைக்கால திட்டம் உள்ளவர்களுக்கு இது சரியாக இருக்கலாம். அது என்ன இடைக்கால திட்டம் வீடு lease க்கு செல்பவர்கள் கார் வாங்க திட்டம் போடுபவர்கள். 

என்னை போல பங்குகளை வாங்க சரியான நேரத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்கள் சுருங்க சொன்னால் ஒரு இரண்டு முதல் மூன்று ஆண்டு கால தேவைகளுக்கு கூட இதை நாடலாம் குறிப்பாக எனக்கு அவ்வபோது சந்தையில் வாய்ப்பு கிடைக்கும் அப்போது இதில் இருக்கும் பணத்தை சுலபமாக எடுத்து பயன்படுத்த உதவியாக இருக்கும். 

எடுத்துக்காட்டாக, தற்போது மார்கெட் சிறிதளவு மேலே சென்று விட்டது முதலீடு செய்ய வைத்திருந்த பணம் சேமிப்பு கணக்கில் சும்மா இருக்க கூடாது அதுவும் நமக்காக வேலை பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த மாதம் மட்டும் இரண்டு முறை உபரி பணங்களை Liquid Funds இல் தான் நான் வைத்திருக்கிறேன். மீண்டும் என்று வாய்ப்பு வருகிறதோ அன்று இதிலிருந்து மீண்டும் Equity நோக்கி செல்லும் அல்லது ஏதாவது பணம் தேவை ஏற்படும் போது அதற்கு நான் பயன் படுத்தி கொள்ளவும் உதவியாக இருக்கும்



Liquid Fund தேர்வு?

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள் எந்த Liquid Funds சிறந்தது என்பது தான். பொதுவாக Liquid Funds Risk மிகவும் குறைவு அதற்காக ஆபத்து முற்றிலும் இல்லை என்றெல்லாம் கூற முடியாது இங்கேயும் Risk இருக்கு என்ன என்று பார்ப்போம்.

ஒட்டுமொத்தமாக இந்த ஃபண்ட் பொறுத்தவரை 6.5 சதவீதம் வரை return எதிர்பார்க்கலாம் ஆனால் இதில் சில funds 7.5 சதவீதம் வரை தொடர்ந்து வழங்கும் இது ஏன் என்ற கேள்வி வரலாம் நாம் பேசாமல் இதை தேர்ந்தெடுக்கலாம் என்ற எண்ணம் கூட வரலாம்.

இப்படிபட்ட அதிக லாபம் வருவதற்கு காரணம் தரும் குறைவான அதிக வட்டி தரும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து நமக்கு return அதிகமாக தருவார்கள் சில மேலாளர்கள் இப்படிபட்ட தரம் குறைவான கடன் பத்திரங்கள் எப்போதாவது ஒரு நாள் பெரும் ஆபத்து ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும். 

அதிக லாபம் தர முடியாத இடத்தில் நான் தருகிறேன் என்று யாராவது சொன்னால் நாம் அப்போதே சுதாரித்து விட வேண்டும் இல்லை இதில் கிடைக்கும் கொஞ்ச வருமானமும் பாதிக்க வாய்ப்பு அதிகம். 

இந்த liquid fund பொறுத்தவரையில் NAV தினமும் சிறிதளவு ஏறிக்கொண்டே இருக்கும் தரமற்ற கடன் பத்திரங்கள் அதிக லாபம் தரும் fund இல் இருந்தால் என்றாவது ஒரு நாள் கடன் பத்திரம் வழங்கிய நிறுவனம் நொடிந்து போனால் அதன் தாக்கம் நமது NAV இல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் பெரிதாக NAV சரியும் நமது லாபம் முற்றிலும் வீணாகி விடும் அதனால் சரியான தேர்வு மிகவும் முக்கியம்.

அடுத்து இன்னொரு வழி தேர்வு செய்ய என்ன என்பதை சொல்கிறேன்

  • தேர்ந்தெடுக்கபடும் ஃபண்ட் பொறுத்தவரை குறைந்தது 5 வருட history நமக்கு தெரிய வேண்டும்

  • கிரெடிட் குவாலிட்டி மிகவும் முக்கியம் 90 சதவீத சொத்துக்கள் AAA OR A1+ ஆக இருப்பது நல்லது

  • கடன் பத்திரம் அளிப்பவர் தனிப்பட்ட அளவு வரம்பு 10 சதவீதம் மேல் இருக்க கூடாது. 

  • அரசாங்கம் ஆக இருந்தால் பிரச்சனை இல்லை அவர்கள் கடனை எப்படியும் திரும்ப செலுத்தி விடுவார்கள்.

  • முக்கிய ஒன்று நம்மை பொறுத்தவரை EXPENSE RATIO 0.15% க்குள் இருக்க வேண்டும்

இவைகள் முக்கிய விஷயங்களாக நாம் எடுத்து கொள்ளலாம்.

போதிய அளவில் நான் Liquid Funds பற்றி விவரித்துள்ளோம் Liquid Funds தானே இதில் என்ன பிரச்சனை இருக்க போகிறது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கலாம் அவர்களுக்கு இப்போது தெளிவாக புரிந்திருக்கும்.

மேலும் Liquid fund எப்படி தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி தொடர்ந்து கேட்பவர்களுக்கும் எந்த ஃபண்ட் வாங்க வேண்டும் என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கும் அதற்கான விடை கிடைத்திருக்கும் இதனால் மேற்கொண்டு யாரிடமும் என்னை உட்பட எதை வாங்க வேண்டும் என்ற கேள்வி கேட்காமல் சுயமாக வாங்க ஒரு நம்பிக்கை பிறந்திருக்கும் என்று நம்புகிறேன். மேற்கொண்டு சந்தேகங்கள் இருந்தாலும் அதை ஆராய்ந்து கேள்வியை கேளுங்கள் மீண்டும் விவரிப்போம்.

இறுதியாக Liquid Funds என்னுடைய அனுபவத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்துள்ளது கையில் வரும் சேமிப்பை இதில் செலுத்தி சனி ஞாயிறு கிழமைகளில் கூட பணத்தை வளர செய்து அவர் வளர்ந்த பணத்தை சரியான நேரம் சரியான பங்குகளில் முதலீடு செய்யவும் IPO போன்றவைகளில் பங்கு பெறவும் ஏதாவது அவசர தேவை வந்தால் அதை சமாளிக்கவும் மிகவும் உதவியாக இருந்தது. 

சில சிறிய வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணத்தை ஒரு குறிப்பிட்ட தொகை வைத்திருந்தால் 7% வரை வட்டி கிடைக்கும் என்பார்கள் ஆனால் சேமிப்பு கணக்கில் வைப்பதில் உள்ள ஒரு சிக்கல் என்ன என்றால் அந்த பணத்தை நாம் செலவு செய்ய வாய்ப்பு அதிகமாக இருக்கும் மேலும் லட்ச கணக்கில் பணம் இல்லாதவர்களுக்கு ஒரு மாற்று வழியாகவும் liquid fund செயல்பட்டு வருகிறது. 

என்னை பொறுத்தவரை Retail investors- க்கு ஒரு அருமையான product இதை சரியாக பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது. என்பதை புரிந்து செயல்பட்டால் நமது சேமிப்பு திறன் உயரும் நிதிமயமான வாழ்க்கை நமக்கும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் செலவை குறைத்து சரியான வகையில் அவ்வபோது கையில் கிடைக்கும் பணத்தை வைக்க நல்ல இடமாக நான் கருதுகிறேன். 

மேலும் இது என்னுடைய அனுபவம் மற்றும் கருத்து மட்டுமே இது அனைவருக்கும் பொருந்தும் என்பதில்லை அதனால் முடிவு உங்கள் கையில் உங்களுக்கு ஏற்றத்தை நீங்கள் தான் அடையாளம் காண வேண்டும் என்பதையும் இப்பதிவில் மூலம் கூறி கொள்கிறேன்.





Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

25 Comments

  1. Thank you for detailed information on Liquid fund bro 🙌🏻🙌🏻🙌🏻

    ReplyDelete
  2. வணக்கம் சார்,

    உங்கள் ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான சிந்தனைகளையும் பயனுள்ள கருத்துகளையும் கொண்டதாக அமைந்து, வாசிப்பவர்களின் மனதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    நீங்கள் பகிரும் ஒவ்வொரு பதிவையும் நான் தவறாமல் படித்து வருகிறேன். அவை அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், ஒவ்வொன்றிற்கும் பின்னூட்டம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், சில நேரங்களில் அதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல், தாங்கள் அறிந்ததை தங்களோடு மட்டும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கும் எடுத்துரைத்து, அவர்களும் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்படுவது உண்மையிலேயே போற்றுதலுக்குரியது.

    உங்கள் எழுத்துக்களையும் ஆலோசனைகளையும் சரியான முறையில் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துபவர்கள், தங்களது வாழ்வில் நிச்சயமாக முன்னேற்றத்தை அடைவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

    உங்கள் அர்ப்பணிப்பும், சமூக அக்கறையும், அறிவைப் பகிரும் மனப்பான்மையும் பாராட்டத்தக்கவை. இதற்கு என்ன பாராட்டு சொல்வது என்று தெரியவில்லை. மனமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள்.

    வாழ்க! வளர்க! மேலும் பல சிறந்த கட்டுரைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி எண்ணற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றிட வாழ்த்துகள்.

    நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  3. Superb article bro. Well explained. Thanks..

    ReplyDelete
  4. Good content, bro. Just one small suggestion: there are quite a few missing commas and full stops in several places. If you fix the punctuation, the article will be much easier and more enjoyable to read.

    - Kumaresan.

    ReplyDelete
  5. Superb bro, well explained. I am waiting for this(Even though you explained in your video's, but this is perfect]. Thanks a lot.

    ReplyDelete
  6. மிகச் சரியான தெளிவான விளக்கம் நண்பா🙏🏼🙏🏼

    ReplyDelete
  7. Great bro, good explanation about liquid fund. Did you analysis about kotak 811 account it has plan called active money, seems that one also good option, please check and share your input if possible 🙏

    ReplyDelete
  8. Bro, Can you please share your thought on arbitrage funds and comparison between liquid and arbitrage funds.

    ReplyDelete
  9. Thanks bro. நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். உங்களால் தான் Liquid Fund என்று ஒன்று தெரியும். அனைத்து Stocks உம் உச்சத்தில் இருக்கும் போதே liquid fund இல் பணத்தை போட்டு வைத்தேன். அது தற்போது TCS ITC HDFC reliance போன்ற பங்குகள் வாங்க சரியான நேரத்தில் பயன்பட்டது.

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல்கள்

    ReplyDelete
  11. Vanakkam 🎉🎉🎉. Helpful thoughts and good article

    ReplyDelete
  12. Money athigama vachiruguravaga park panna vendiya nalla place and good explanation bro...thanks 👍

    ReplyDelete
  13. Thank you nice information - very much satisfying

    ReplyDelete