வரிசையாக நான்காம் காலாண்டு முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன இதில் இப்போது FMCG பங்குகளின் காலாண்டு முடிவுகளை பற்றி பார்க்க உள்ளோம் அதிலும் குறிப்பாக இன்று வந்த Jyothi Lab-ன் காலாண்டு முடிவை பற்றி தான் பார்க்க போகிறோம்.
Jyothi Lab உடன் செய்து மொத்தமாக நான் பின்தொடரும் 3 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வந்துள்ளது முதலில் Nestle வின் முடிவு மிகவும் அட்டகாசமாக இருந்தது வருவாய் வளர்ச்சி மார்ஜின் லாபம் volume என அனைத்திலும் அசத்தியது அதன் விளைவு பங்கின் மதிப்பீடு கூட பெரிதாக கண்டு கொள்ளாமல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
அடுத்து ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் முடிவு வந்தது அவர்களும் நல்ல வளர்ச்சியை பதிவு செய்தனர் இருந்தாலும் Nestle உடன் ஒப்பிடும் போது குறைவு தான் ஆனால் மார்ஜின் நிலை நிறுத்தப்பட்டது லாபம் அதிகரித்தது volume வளர்ச்சியும் இருந்தது.
ஆனால் தற்போது வந்த Jyothi Lab-ன் காலாண்டு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது மேலும் ஏன் இந்த காலாண்டில் லாபம் குறைந்தது மேலும் குறையுமா என்பதை பற்றி காண்போம்.
Jyothi Lab இன்றைய தினத்தில் காலை முதல் நல்ல ஏற்றத்தில் இருந்தது ஆனால் மாலை சந்தை நிறைவடையும் போது அந்த ஏற்றம் காணல் நீராக மறைந்தது காரணம் இன்று வந்த காலாண்டு முடிவுகள்.
இந்த காலாண்டில் லாபம் 12 சதவீதம் சரிந்து வெறும் 68 கோடி ரூபாய் லாபமாக பதிவு செய்துள்ளது.
வருவாய் பொறுத்தவரை Q3 உடன் ஒப்பிடும் போது 23 கோடி சரிந்து 717 கோடியாக உள்ளது.
இதில் முக்கிய பிரச்சனை மார்ஜின் தான் கடந்த 12 காலாண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த முறை இவர்களின் மார்ஜின் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாம் இரண்டு நாள் முன்பு ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைவர் கூறியதை பற்றி விவாதித்தோம் அவர் கூறியுள்ளதை மேற்கோள் காட்ட வேண்டியது இப்போது மிகவும் அவசியம் அவர் கூறியது input cost உயர்வால் நிறுவனங்கள் மார்ஜின் இழப்பை சந்திக்க நேரிடும் விலையை மேலும் குறைக்க முடியாத சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது.
இதனால் எங்களின் விற்பனை சிறப்பாக செயல்படும் மேலும் மார்ஜின் இதே அளவில் தக்க வைக்க கூடிய சக்தி hulக்கு உள்ளது என்று தெரிவித்தனர். அது தான் தற்போது நடப்பது போல் தெரிகிறது.
Jyothi Lab போன்ற நிறுவனங்கள் மார்ஜினை தியாகம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் input cost இதே போல தொடரும் என்பதை உறுதியாக கூற முடியாது மாற்றம் வரலாம் மேற்கொண்டு இரண்டு காலாண்டுகள் கடினமாக இருக்கலாம் என்பது எனது எண்ணம்.
மேலும் நிறுவனத்தின் தலைவர் என்ன கூறியுள்ளார் என்றால் விலை உயர்வு தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது இன்னும் சிறிது காலம் ஆகும் என்றும் அதுவரை மார்ஜின் மீதான அழுத்தம் தொடரும் என்றும் கூறினார்.
ஆனால் அதே சமயத்தில் நல்ல விஷயம் என்ன என்றால் நிறுவனம் தற்போது volume மீது கவனம் செலுத்தி வருகிறது. அதன் தாக்கம் இந்த காலாண்டில் ஏற்பட்டுள்ளது.
இந்த volume உடன் விலையை சரியாக கலந்து விட்டால் நிறுவனம் வருவாய் மற்றும் லாபம் தானாக உயரும் என்பது எனது நம்பிக்கை இது வெறும் நம்பிக்கை மட்டும் இல்லை இவர்களின் இந்த காலாண்டு விற்பனை ஒரு சான்று
நாம் சென்ற jyothi lab பதிவில் Fabric care நிறுவனத்தின் முக்கிய முதன்மையான பிரிவு என்று விவரித்துள்ளோம் இந்த பிரிவில் நல்ல விற்பனை வளர்ச்சியை அடைந்துள்ளது.
1. Fabric Care
value growth 14.4 சதவீதமும் volume growth 17.8 சதவீதமும் அடைந்து நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது இந்த பிரிவு நன்றாக வளர்ச்சியை செய்தது. குறிப்பாக தொடர்ந்து வளரும் liquid detergent இன் வளர்ச்சி அமோகம் ujala, henko, morelight-க்கு சந்தையில் strong growth-ஐ பதிவு செய்துள்ளது.
2. Dishwasher
ஆனால் அடுத்த பிரிவான dishwash பிரிவு வளர்ச்சி பெரிதாக இல்லை குறிப்பாக value growth இதில் இல்லை அதே சமயம் volume growth வெறும் 5 சதவீதம் தான் இது ஒரு முக்கிய காரணம் வருவாய் மற்றும் மார்ஜின் குறைவதற்கு காரணமாக உள்ளது.
3. personal care
மூன்றாவதாக personal care sope, handwash, toothpaste போன்ற பொருட்களின் விற்பனை வளர்ந்துள்ளது 20.1% value growth மற்றும் 20.8% volume growth பதிவு செய்துள்ளது. இது நல்ல செய்தி என்றாலும் இதன் வருமானம் நிறுவனத்தில் பெரிதாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு இல்லை ஆனால் இந்த வளர்ச்சி வருங்காலத்தில் பெரும் பங்கை வகிக்கும் என்று நம்புகிறேன்
நான்காவதாக insecticides, வருமான அடிப்படையில் மிகவும் சிறியது அதே போல வேறு 3 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
இறுதியாக வளர்ச்சி தடைபட்டாலும் இது விலை நிர்ணயம் மற்றும் input cost உயர்வால் ஏற்பட்டது இது வரும் காலாண்டுகளில் சரி செய்யப்படும் என்று எண்ணுகிறேன் விலை நிர்ணயம் விரைவில் முடிவு செய்யப்படும். அதன் பிறகு மீண்டு வரும் இந்த நிறுவனம் என்று நம்புகிறேன். இந்த காலாண்டு முடிவை பற்றி விரிவாக நாம் அறிந்து உள்ளோம் இதில் உங்கள் கருத்தை கேள்வியை கீழே பதிவு செய்யலாம்.


31 Comments
Good research
ReplyDeleteThank you for update bro 🎉🎉
ReplyDeleteGood information bro thanks bro
ReplyDeleteThanks for the update on jyothy labs it is very much useful.
ReplyDeleteGood research bro, i think we will accumulate slowly, is it right
ReplyDeleteThanks for information brother
ReplyDeleteGood useful information bro
ReplyDelete🎉🎉
ReplyDeleteWe can wait bro for this company.
Thanks for your valuable support
ReplyDeleteBro, Nice article. Please update about Raw Materials and its impact on profitability. thanks
ReplyDeleteGood analysis. Thanks for sharing information
ReplyDeleteGood information bro.
ReplyDeleteThanks bro.... ❤️. Superb analysis.
ReplyDeleteBro oru doubt, value growth and volume growth.. intha 2kum ena different nu konjam unga video la explain panunga bro.
Thanks for update bro
ReplyDeleteThankyou 🙏
ReplyDelete“This video really helped me understand ___, thank you!”
ReplyDeleteGreat article bro, your dedication is awesome
ReplyDeleteThankyou 🙏
ReplyDeleteThank you bro..
ReplyDeleteNice article bro
ReplyDelete👍 🙏
ReplyDeletethanks for update jyothi lab bro
ReplyDeleteNice bro
ReplyDeleteGood information
ReplyDeleteSuper bro.. excellent explanation 👏
ReplyDeleteNice detailed review.
ReplyDeleteGreat bro
ReplyDeleteSuper and thanks bro
ReplyDelete❤️❤️❤️
ReplyDeleteThank you bro ♥️ very useful information
ReplyDeletehope the situation will improve in near future
ReplyDelete