இந்த பதிவில் இந்தியாவின் பிஸ்கெட் மார்கெட்டை பற்றி தான் பார்க்க போகிறோம். எதற்கு இந்த துறையை தற்போது நாம் கையில் எடுத்தோம் என்றால் பங்குச்சந்தையில் புதிதாக களம் இறங்க இருக்கும் நிறுவனத்தை பற்றிய புரிதல் உண்டாக தான்.
இப்போது பிஸ்கெட்க்கு என்று தனியாக ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் இருக்கும் என்றால் அது Britannia நிறுவனம் தான் கூடவே ITC உள்ளது.
ஆனால் அது வெறும் பிஸ்கெட் மற்றும் கொண்ட நிறுவனம் இல்ல இப்போது britannia-க்கு போட்டியாக வர இருக்கும் parle நிறுவனத்தை பற்றியும் மற்ற நிறுவனங்களின் போட்டி தன்மை பற்றியும் விவரமாக பார்க்க இருக்கிறோம்.
Parle
என்ன தான் parle பங்குச்சந்தையில் நுழையாமல் இருந்தாலும் எல்லா வகையிலும் britanniaக்கு போட்டியாக இருக்க கூடிய நிறுவனம் parle தான் அவர்கள் IPO மூலம் வருவதற்கு முன் இந்த நிறுவனத் செயல் திறன் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம் என்று நான் கருதுகிறேன்.
Parle சந்தை நிலை
நமது இந்திய மார்கெட் சந்தையை பொறுத்தவரை இரு நிறுவனங்கள் பல ஆண்டு காலமாக இந்த biscuits விற்று வருகின்றன.
குறிப்பாக britannia 1892 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் வணிகம் செய்து வருகிறது. பல ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட நிறுவனமாக உள்ளது.
அதற்கு அடுத்த படியாக ஒரு பாரம்பரிய நிறுவனம் என்றால் அது parle தான் ஏனென்றால் இந்த நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1929 கிட்டதட்ட 100 ஆண்டை நோக்கி வருகிறது.
1929 இல் மும்பையில் Chauhan family இந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர். 1939 இல் பிஸ்கெட் தயாரிப்பை தொடங்கினர். அப்போது முதல் இப்போது வரை நிறுவனம் இந்திய சந்தையில் முக்கிய இடம் வகிப்பது குறிப்பிடதக்க ஒன்று.
Britannia மற்றும் Parle வேறுபாடு
இரண்டு நிறுவனங்களுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு நமது சந்தையில் என்ன என்றால் britaania பிரீமியம் சந்தையை கையில் வைத்துள்ளது கூடவே volume biscuitsகளையும் விற்று சந்தையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.
இதே parle பார்க்கும் போது Mass Market Brand-ஐ வைத்து கிராமங்களிலும் middle-class மக்கள் எளிதில் அணுகும் வகையில் விற்பனை செய்து வருகிறது அதிலும் குறிப்பாக parle-g brand.
இந்த parle-g சாப்பிடாத 90’s kid's விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவுக்கு இந்த பிராண்ட் நாடு முழுவதும் பரவி இருந்தது தற்போதும் அதே ஆதிக்கம் சந்தையில் இருந்து வருகிறது.
வருமானம்
Parle நிறுவனம் இன்னும் பங்குசந்தையில் list செய்யப்படாது ஆச்சரியப்படக்கூடிய ஒன்று தான் ஏனென்றால் சரிசமமாக britannia உடன் போட்டி போடும் அளவுக்கு வருமானம் இந்நிறுவனத்திற்கு உள்ளது.
Fy25 இன் முடிவின் படி, parle விற்பனையால் மட்டும் ஈட்டிய வருமானம் சுமார் 15569 கோடி ரூபாயாக உள்ளது.
Britannia fy25 இன் முடிவு படு 17943 கோடி பதிவு செய்துள்ளது.
இருவருக்கும் உள்ள வேறுபாடு வருவாயில் 2400 கோடி வரை வித்தியாசம் உள்ளது.
அடுத்து லாப அடிப்படையில் பார்க்கும் போது FY25 இல் வெறும் 980 கோடியாக உள்ளது ஆனால் britannia-வின் லாபம் அதே சமயம் 2178 கோடியாக உள்ளது இருவர் இடையில் உள்ள வித்தியாசம் மலையளவு அதிகம்.
இதற்கான முதல் முக்கிய காரணம் britannia-வின் பிரீமியம் தான். Parle வின் லாபம் குறிப்பாக fy25 இல் வருமானம் அதிகம் ஆகியும் லாபம் 39% வரை குறைந்துள்ளது.
போட்டி தன்மை
தற்போது நம் நாட்டில் இவர்கள் இருவர் மட்டும் இல்லாமல் இன்னும் சில முன்னணி போட்டியாளர்கள் உள்ளனர். அதில் அடுத்த பெரிய நிறுவனம் ITC தான் biscuit சந்தையில் புது போட்டியாளராக வந்து இப்போது கணிசமாக விற்பனையை உயர்த்தி போட்டியை ஏற்படுத்தி வருகிறது ITC.
ITC இடம் sunfeast, mom's magic, dark fantasy போன்ற முக்கிய பிராண்டுகள் நல்ல வளர்ச்சியை கொண்டுள்ளது. மேலும் இந்த பிராண்டுகள் 1000 கோடி விற்பனை பிரிவிலும் இடம் பெற்று மிகவும் வலிமையாக இருக்கிறது.
ஆனால் ITC-ஐ பொருத்தவரை சரியாக எவ்வளவு வருமானம் இதன் மூலம் ஈட்டுகிறார்கள் என்பது புரியாத புதிர் தனியாக அவர்கள் biscuit விற்பனை மூலம் வரும் வருவாயை தனித்து சொல்வதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக food business பிரிவில் 18000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இதை தாண்டி இன்னொரு முக்கிய நிறுவனம் oreo, Bournvita போன்ற biscuits Brand-களை உள்ளடக்கிய mondelez india நிறுவனம் உள்ளது இவர்களின் விற்பனை 12500 கோடியாக உள்ளது நான்காம் நிலை player ஆக இவர்கள் நம் சந்தையில் உள்ளனர்.
Market share
நம் நாட்டில் biscuit வணிகத்தை பொருத்தவரை britannia முதல் இடத்திலும், parle இரண்டாம் இடத்திலும், ITC மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இவர்கள் மூவரும் இச்சந்தையை கைவசம் வைத்துள்ளனர். சுமார் 70% market share இந்த மூன்று நிறுவனங்களிடம் உள்ளது தான் இங்கு குறிப்பிடதக்க விஷயம்.
இது போக இன்னும் சில சிறு சிறு regional brands இருந்து வருவதும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.
Parle IPO
தற்போது parle எந்த விலையில் தனது பங்குகளை IPO வில் விற்கும் என்பது புரியாத புதிர் மற்றும் இவர்களின் லாப அளவை எவ்வாறு உயர்த்துவர்கள் என்பதை நாம் இதன் பிறகு பார்த்து தான் நிறுவனத்தை எப்போது எப்படி அணுக வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இதை பற்றிய அனாலிசிஸ் விரைவில் அடுத்த படியாக உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை நான் உறுதியாக கொண்டு உள்ளேன் விரைவில் அதை பற்றி விவரிப்போம்.
இப்பதிவு உங்களுடைய கண்ணோட்டதை தெளிவாக்கி இருக்கும் என்று நம்புகிறேன். நிறுவனத்தை பற்றிய புரிதல் அதிகமாகியிருக்கும் என்றும் நம்புகிறேன் உங்கள் கருத்துக்கள் மிகவும் முக்கியமானது அதை கீழே பதிவி செய்யுங்கள்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

30 Comments
Bro super analysis. Hats off to your efforts bro
ReplyDeleteNice bro
ReplyDeleteSuper bro
ReplyDeleteThanks bro for your information.
ReplyDeleteNice review
ReplyDeleteNice bro
ReplyDeleteValue information
ReplyDeleteGood information bro
ReplyDeleteNice bri
ReplyDeleteNice article bro
ReplyDelete🎉🎉
Super bro. Unga presentation super.
ReplyDeleteVanakkam bro 🎉
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteRO,
ReplyDeleteParle biscuits ₹1000 crores ku mela vikkama expire aagi market la kedakku nu oru talk odittu irukkey... Parle company image damage aagudhu la, sales adi vaangaadha ???
👍🙏
ReplyDeleteExcellent 👌
ReplyDeleteDetailed information regarding biscuit industry super 👌
ReplyDeleteVery good information thanks for your efforts bro 👍🏻
ReplyDeleteParle ku ievalo petiya mark irrukunu iepa dhan theriuthu
ReplyDeleteSuper bro
ReplyDeleteSuper bro..
ReplyDeleteNice bro..
ReplyDeleteTHANKS BRO.
ReplyDelete👍🙂
ReplyDelete❤️❤️❤️
ReplyDelete❤️❤️❤️
ReplyDeleteGood information
ReplyDeleteThank you bro 🙌🏻
ReplyDeleteSuper bro
ReplyDeleteSuper bro... Thanks bro....
ReplyDelete