Header Ads Widget

IPL விளம்பரம் செய்தும் விற்காத OG King Tata Sierra



சமீப காலங்களில் நல்ல வளர்ச்சியை தந்த Auto sector பங்குகள் தற்போது சரிவை சந்தித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம் சரியான இடத்திற்கு வருவதற்கு காத்துக்கொண்டும் இருக்கிறோம். அப்படி பார்க்கும் போது சில முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. 

அதில் Maruti Suzuki நிறுவனம் முதன்மையான நிறுவனம் இரண்டாவது Tata motors 2 வருடங்களாக சரிந்து கொண்டு தான் இருக்கிறது மூன்றாவது hyundai நிறுவனம் IPO விலைக்கு மீண்டும் வந்துள்ளது மேலும் இந்நிறுவனத்தில் வருங்கால திட்டம் மிகவும் அருமையானது அதை பற்றி நாம் விவரிப்போம்.

அடுத்த பதிவில் நான்காவது mahindra நிறுவனம் நல்ல வளர்ச்சியை கொடுத்த நிறுவனம் பங்கு விலையிலும் சரி அடிப்படையிலும் சரி கலக்கி வரும் நிறுவனம் இவை அனைத்தும் சரிவுகளை நோக்கி வந்து கொண்டிருப்பது சிறப்பான விஷயம் நம்மை பொறுத்தவரை மேலும் சந்தையும் மிகவும் வலுவில்லாமல் காணப்படுவது இதை இன்னும் உறுதி படுத்துகிறது. 

இத்தகைய சூழ்நிலையில் நிறுவனங்களை கவனமாக பின் தொடர்வது அவசியம் என்று கருதுகிறேன். அதன் வெளிப்பாடு தான் இந்த பதிவு. 

நடந்து முடிந்த ஏப்ரல் மாதம் வாகன விற்பனையில் முக்கிய மாதம் இந்த மாதத்தில் அனைத்து நிறுவனங்களும் அதிரடியை காட்டியது போல இருக்கலாம் ஆனால் உண்மையான மற்றும் சில நிறுவனங்களில் உள்ள சிக்கல்களை பற்றி நாம் பார்க்க இருக்கிறோம். ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.


விற்பனை விவரம்


Maruti Suzuki 

ஏப்ரல் மாதத்தில் வழக்கம் போல முன்னணியில் உள்ள நிறுவனம் Maruti Suzuki தான் 1,87,704 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது.

மேலும் கடந்த வருடம் April 25 இல்  1,38,704 ஆக உள்ளது ஒப்பிடும் போது 35% வளர்ச்சி அதிகரித்துள்ளது. 

March 2026 உடன் ஒப்பிடும் போது 1,66,219 ஆக உள்ளது மேலும் 13% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இன்னொரு முக்கிய விஷயம் என்ன என்றால் நிறுவனத்தின் மார்கெட் பங்கு சென்ற வருடத்தில் 39.2% ஆக இருந்தது தற்போது இந்த ஏப்ரல் மாதத்தில் 42.5% ஆக உயர்ந்து உள்ளது. 3.3% மார்கெட் பங்கு அதிகரித்துள்ளது. 


Tata Motors

இரண்டாம் இடத்தில் Tata motors உள்ளது 59000 வண்டிகளை விற்று இரண்டாம் இடத்தை கெட்டியாக பிடித்துள்ளது. சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது 30% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

ஆனால் சென்ற மாதமான மார்ச் உடன் ஒப்பிட்டால் விற்பனை 66,192 வாகனங்களாக உள்ளது 11% வரை விற்பனை குறைந்துள்ளது. 

நாம் கவனிக்க வேண்டும். Tata motors இன் சந்தை பங்கு சற்று அதாவது 0.6% உயர்ந்து 13.4% ஆக உள்ளது.


Mahindra & Mahindra 

மூன்றாம் இடத்தில் மஹிந்திரா நிறுவனம் உள்ளது 56,331 வண்டிகளை விற்று Tata motors உடன் போட்டியில் மிகவும் அருகில் உள்ளது. 

Tata மற்றும் Mahindra இரு நிறுவனங்களுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் 2669 வாகனங்கள் மட்டுமே அடுத்த மாதம் காத்திருந்து பார்ப்போம் முந்துமா என்று.

Maruti மற்றும் Tata உடன் ஒப்பிடும் போது வளர்ச்சி குறைவு தான் போன வருட விற்பனை 52,330 ஆக உள்ளது வெறும் 7.6% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 6.5% சரிந்து உள்ளது. 

Mahindra-க்கு இந்த மாதம் சறுக்கல் தான் 2.1% சந்தை பங்கு குறைந்து ஒட்டுமொத்தமாக டாடா விடம் தோற்றது. 14.8% லிருந்து 12.8% ஆக குறைந்துள்ளது.


Hyundai 

நான்காவது இடத்தில் Hyundai நிறுவனம் உள்ளது 51,902 வண்டிகளை விற்று 17% வளர்ச்சியை சந்தித்துள்ளது இருந்தும் ஒரு பயன் இல்லை சென்ற வருடம் இதே மாதமும் நான்காம் இடம் தான் இந்த வருடம் நான்காம் இடம் தான். 

Hyundai நிறுவனம் சென்ற மார்ச் மாதத்தில் 55,064 வாகனங்களை விற்பனை செய்து உள்ளது இந்த மாதத்தை ஒப்பிட்டால் 5.7% சரிவு. 

Mahindra-வை விட hyundai பரவாயில்லை என்று சொல்லி கொள்ளலாம் 12.6% லிருந்து 11.7% குறைந்துள்ளது மாற்றம் 0.8% ஆகும்.




யாருக்கு வளர்ச்சி 

சுருக்கமாக முதல் நான்கு நிறுவனங்களின் விற்பனையை YOY And MOM பார்த்தோம். 

இதில் ஒட்டு மொத்தமாக Maruti Suzuki நிறுவனம் விற்பனையில் அசத்தி உள்ளதை பார்த்தோம் ஆனால் பங்கு விலை 24% சரிந்துள்ளது.

Tata motors விற்பனையில் பாதிப்பு எதுவும் இல்லை பெரும் வளர்ச்சி Maruti போல இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக இழப்பு இல்லாமல் முடிந்துள்ளது.

ஆனால் mahindra மற்றும் Hyundai நிறுவனம் விற்பனை இந்த மாதம் சற்று சோர்வடைந்துள்ளது என்று சொல்லலாம். 


டாப் 25 கார்கள் 

இவ்வளவு நேரம் நிறுவனங்களின் மொத்த விற்பனை பார்த்தோம் இது பொதுவானது. ஆனால் இனி நாம் பார்க்க இருப்பது தனிப்பட்ட மாடல்களை பற்றி தான் இது தான் மிகவும் முக்கியம் அதை பார்ப்போம் குறிப்பாக இரு நிறுவனங்களின் பிரச்சினைகளை பற்றி நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

டாப் 25 இல் நீங்கள் எதிர்பார்த்தத நிறுவனம் தான் உள்ளது அது தான் Maruti Suzuki. அதிகமாக விற்பனை செய்யப்பட்ட 25 கார்களில் 11 கார்கள் Maruti Suzuki நிறுவனத்தின் கார் தான் எவ்வளவு பெரிய விஷயம் அதுமட்டுமில்லாமல் no.1 கார் மாடலாக Dzire உள்ளது. மேலும் முதல் 10 இடங்களில் 6 மாடல்கள் maruti Suzuki இன் கார்கள் தான். 


Fake HYPE

அடுத்து சில பங்குசந்தை நிபுணர்கள் பொய்யான கதைகளை கூறி Tata motors மேல் ஒரு ஈடுபாட்டை அதிகரிக்க செய்யும் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். 

அது என்ன என்றால் Mahindra நிறுவனத்திடம் Tata motors போல மாடல் இல்லை என்றும் வெறும் ரெண்டு மாடல் கார்களை வைத்து காலம் ஓட்டி கொண்டு இருக்கிறார்கள் என்று அவ்வபோது வசைபாடியும் வருகிறார்கள். 

ஆனால் அதுவா உண்மை நிச்சயம் இல்லை வெறும் ரெண்டு மாடல்களை மட்டும் நம்பி காலத்தை ஓட்டுவது tata motors தான் இந்த மத விற்பனையில் டாப் 25 இல் வெறும் இரண்டு கார்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. 

ஒன்று punch நல்ல வரவேற்பை பெற்று  இரண்டாம் இடத்தில் உள்ளது அடுத்து Nexon முதல் இடத்தில் இருந்து தற்போது ஏழாம் இடத்தில் உள்ளது இதை தவிர வேறு வண்டிகள் எதும் டாப் 25 இல் இல்லை. 

குறிப்பிட்டு சொல்ல போனால் OG king என்று எங்கு திரும்பினாலும் IPL, YouTube தளங்களில் பல influencer கொண்டு விளம்பரம் செய்தும் Sierra விற்பனையில் சரிந்து உள்ளது. 

இது எனக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் இந்த கார் hyundai இன் டாப் மாடல் ஆன creta உடன் போட்டிக்கு களம் இறக்கப்பட்டது.

மேலும் creta உடன் போட்டிக்கு வந்த Maruti நிறுவனத்தின் victoris விற்பனை அதிகரித்துள்ளது. 

Sierra மற்றும் victoris இரண்டும் புதியதாக creta-க்கு போட்டியாக களம் இறக்கப்பட்டது 13,701 வண்டிகளை விற்று 12% உயர்ந்துள்ளது. 

ஆனால் OG king Sierra 7316 வண்டிகளை மற்றும் விற்று 19% வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Tata motors பொறுத்தவரை ரெண்டு மாடல் தான் அட்டகாசாமா விற்று வருகிறது ஒன்று nexon அடுத்து punch என்பது புரியும். 

ஆனால் குறை சொல்ல பட்ட mahindra டாப் 25 இல் 5 வாகனங்கள் இடம் பெற்றுள்ளது மேலும் Maruti Suzuki-க்கு அடுத்த இடத்தில் உள்ளது கவனிக்க வேண்டிய விஷயம். 

இன்னும் சில மாதங்கள் நாம் sierra விற்பனையை கவனிக்க வேண்டும் தொடர்ந்து சாதிக்க முடியவில்லை என்றால் Tata-க்கு பின்னடைவு ஏற்படும். 

எதனால் பின்னடைவு என்ற கேள்வி வரலாம் Maruti நிறுவனம் Tata வின் punch-ஐ குறி வைத்து micro SUV launch பண்ண திட்டம் போட்டு உள்ளது. 




மேலும் mahindra நிறுவனம் Nexon-க்கு போட்டியாக ஒரு suv ஒன்றை களம் இருக்க போகிறது இது நடந்தால் டாடாவின் விற்பனை சரிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. 



மேலும் hyundai நிறுவனமும் punch-ஐ குறி வைத்து புது மைக்ரோ suv அறிமுக படுத்த திட்டம் போட்டுள்ளது. 




அதனால் இதை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது என்பது என் வாதம் கண்ணை மூடி கொண்டு நான் சொல்வது சரி என்று பங்குகள் பின்னால் போகாமல் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பது என் எண்ணம் மற்றும் முடிவு நான் தொடர்ந்து செய்வேன். 

இப்போது இந்த கட்டுரை எழுதி கொண்டு உள்ள நேரம் வரை மூன்று நிறுவனங்களின் Maruti, Mahindra, Hyundai நான்காவது காலாண்டு முடிவுகள் வந்து விட்டது இதில் பெரும் லாப வளர்ச்சி எங்கும் இல்லை. 

இன்னும் ஒரு நிறுவனம் அது tata motors மட்டும் தான் அதுவும் இந்த வாரம் வந்து விடும் என்னுடைய எதிர்பார்ப்பு சொதப்பலாக இருக்கும் என்று நம்புகிறேன் மேலும் புதிய வாய்ப்பு விரைவில் உண்டாகும் என்று நம்புகிறேன் results வந்த உடன் டாடா மோட்டார் பற்றி மேலும் நாம் விவாதிப்போம்.






Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.


Post a Comment

12 Comments

  1. Hyundai Launching micro SUV is unnecessary, since they already have i10 Nios.

    ReplyDelete
  2. Dude first update aa translate option aa add pannunga english ku. Eluthu kuti padika kastama iruku😭😶

    ReplyDelete
  3. Article read bro, good analysis and helpful...Thanks for sharing..keep it up bro❤️

    ReplyDelete
  4. Good effort and good analysis

    ReplyDelete