Header Ads Widget

Can JIO Hotstar beat Youtube and Instagram in India?

Google மற்றும் Meta உடன் போட்டி போடும் Jio.


இந்தியாவில் google மற்றும் Meta உடன் போட்டி போட கூடிய இடத்தில் இருக்கும் ஒரே நிறுவனம் jio வாக உள்ளது. எந்த துறையில் இந்த போட்டி என்ற கேள்வி இருக்கலாம் அது வேறு எதுவும் இல்லை விளம்பர துறையில் தான் இப்படிபட்ட போட்டி உருவாகி உள்ளது. 

Google Meta நிறுவனத்தின் முக்கிய வருமானத்தை இதற்கு முன் நாம் பேசியுள்ளோம். விளம்பரம் மூலம் தான் பெரும் பணத்தை இந்த இரண்டு நிறுவனங்களும் ஈட்டி வருகின்றனர். 

தற்போது அதற்கு போட்டியாக விளம்பர துறையில் உள்நாட்டு சக்தி உருவாகியுள்ளது. போட்டி எவ்வாறு இருக்கிறது என்ற வித்தியாசத்தை பார்ப்போம் மேலும் இந்த நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியை பார்ப்போம் jio வின் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் காண்போம்.

Google Meta-வின் பெரும் வருமானம் டிஜிட்டல் விளம்பரம் மூலம் தான் வந்து கொண்டிருக்கிறது இதில் google முக்கிய நிறுவனம் google search engine மூலமும் youtube மூலமும் விளம்பரம் திரையிடப்பட்டு வருமானம் ஈட்டி வருகிறது. 

Jio star-ஐ பொறுத்தவரையும் விளம்பரம் மூலம் பெரும் பணத்தை சம்பாதித்து வருகின்றனர். ஆனால் மொத்த வருமானமும் விளம்பரம் மூலம் வருவது இல்லை.

Jio star பொறுத்தவரை பல வழிகளில் வருமானம் வருகிறது அதாவது, subscription ஒரு முக்கிய வருமானம், இரண்டாவது TV விளம்பரம், மூன்றாவது Jio hotstar மூலம் டிஜிட்டல் விளம்பரம் இறுதியாக மிகவும் முக்கியமான பிரிவு விளையாட்டை ஒளிபரப்புவதன் மூலம் வரும் வருவாய். 

சமீபத்தில் Reliance நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வந்தது நாம் jio platforms, retail, o2c பிரிவுகளின் வருமானம் மற்றும் பணத்தை பார்த்தோம். பிறகு பார்ப்போம் என்று விட்டு வைத்தது இந்த டிஜிட்டல் பிரிவு தான் இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.

நடந்து முடிந்த fy26 இக்கான performace ஐ நாம் பார்ப்போம். 

முதல் காலாண்டு மிகவும் முக்கிய காலாண்டு ஏன் என்றால் IPL அதில் பெரும் பங்கு வகிக்கும் 

Q1 - 11,222 கோடி 

Q2 - 7,232 கோடி 

Q3 - 8010 கோடி 

Q4 - 9784 கோடி

IPL போலவே ICC international cricket போட்டிகளும் பார்வைகளை அதிகரித்து வருமானத்தை அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக fy26 நிதியாண்டில் 36,248 கோடி ரூபாய் மொத்த வருமானத்தை ஈட்டி உள்ளது. ஒரு ஆண்டு லாபமும் நல்ல வளர்ச்சியை அடைந்து உள்ளது சுமார் 3210 கோடி ரூபாயாக உள்ளது.


Google Meta Jio 

இன்னும் fy26 க்கனா வருமான பதிவுகள் Meta மற்றும் Google நிறுவனங்கள அறிவிக்கப்படவில்லை. ஆனால் fy25 அடிப்படையில் பார்க்கும் போது google - 34,742 கோடியும், Meta - 28000 கோடியாக உள்ளது. 

இதனுடன் ஒப்பிடும் போது jio star முக்கிய புள்ளியாக இந்த இடத்தில் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Google மற்றும் Meta நிறுவனங்களும் subscription வருமானத்தை கொண்டுள்ளது ஆனால் Jio போல விளையாட்டை மைய படுத்தி வருமானம் ஈட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் நாம் சென்ற வருடம் இதை பற்றி விவரித்துள்ளோம் ஐபிஎல் மூலம் பார்வையாளர்களை subscriptionக்குள் கொண்டு வருவதையே நோக்கமாக செயல்படுத்தி வருகிறது. தற்போது HBO Max உடன் ஒப்பந்தம் போட்டு அந்த content-களை jio hotstar செயலியில் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டது. 

இதனால் IPL பார்க்க வந்தவர்கள் மற்ற நிகழ்ச்சிகளை பார்க்கவும் உந்த படுகிறார்கள் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தக்க வைப்பது இவர்களின் திட்டமாக உள்ளது. 

இதை தொடர்ந்து AI தொழில்நுட்பத்துடன் பிற மொழி படங்களை தொடர்களை பல மொழிகளில் மொழி பெயர்க்கவும் திட்டமிட்டுள்ளனர் இது வழக்கமான AI voice இல்லாமல் சிறந்து இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது இத்தகைய மாற்றம் நிறுவனத்தை வளர்த்து எடுக்கும் என்று நம்புகிறேன். 

Disney இடம் இருந்து பங்குகளை வாங்கிய பிறகு Hotstar இன் வளர்ச்சி வேகம் எவ்வாறு உள்ளது என்பதை கண்கூட பார்த்து வருகிறோம் இதே சிறந்த மேலாண்மையின் எடுத்துக்காட்டு என்று நான் நினைக்கிறேன்.

இந்த பதிவில் யாரும் பேச முன்வராத reliance நிறுவனத்தின் குறிப்பிட்ட பிரிவை பற்றி விரிவாக பேசி இருப்போம் தொழிலின் மீதான புரிதல் உங்களிடம் இருக்கும் என்றும் நம்புகிறேன் இது பல முக்கிய படிப்பினைகளை உங்களுடன் பகிர்ந்து ஒரு நல்ல புரிதலை வளர்க்க வேண்டும் என்பதே என் நோக்கமாக உள்ளது. தகவலை படித்து விட்டு கீழே உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.



Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது. 

Post a Comment

14 Comments

  1. Thank you for detailed analysis on jio hotstar bro 🎉🎉🎉

    ReplyDelete
  2. Nice article bro...Reliance one of the best, tough competitor and business will grow in future as well, Agree..Thank you for the information.

    ReplyDelete
  3. ஒவ்வொரு ஆய்வுக்காகவும்உங்கள்நேரத்தையும்உழைப்பையும்செலவுசெய்கிறீர்கள்அதன்பலன்உங்களைபின்தொடரும்நண்பர்களுக்குகிடைக்கும் நன்றி

    ReplyDelete
  4. Really romba useful aa iruku bro. Ninga soldra mathiri intha content lam vera engayum paka mudiyathu. Romba useful aa iruku. Then ninga thaan Reliance pathi negative aa solama avanga business opportunity pathi clear aa solluringa. Thanks bro..

    ReplyDelete