கடந்த பதிவில் DLF மற்றும் LODHA இரண்டு நிறுவனங்களை பற்றி ஒப்பிட்டு பார்த்தோம் மேலும் இந்த பதிவில் ஏன் Lodha நிறுவனம் மீது என் ஆர்வம் சென்றுள்ளது என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம் மேலும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் விவரமாக பார்க்க இருக்கிறோம்.
Lodhaவை பொருத்தவரை எதிர்கால திட்டங்கள் மிகவும் பிரகாசமாக உள்ளது. வெறும் திட்டங்கள் மட்டும் அல்ல அதை செயல்ப்படுத்த தேவையான நிதி சக்தியும் நிறுவனத்திடம் உள்ளது. மேலும் அவர்களின் திட்டங்கள் என்ன என்பதை இப்போது விரிவாக பார்ப்போம்.
தற்போதைய நிலை
Lodha நிறுவனம் தற்போதும் பெரும் அளவில் residential project மீதே கவனத்தை செலுத்தி வருகிறது மேலும் இந்த பிரிவில் மற்றும் 20400 கோடி விற்பனையும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை தாண்டி இன்னும் பல பிரிவுகளில் நுழைய உள்ளது.
குறிப்பாக rental income முக்கிய பிரிவு இரண்டாவது data center business மிகவும் முக்கியமானது அதை தாண்டி அவர்களிடம் நில வங்கி மிகவும் அதிகமாக உள்ளது அதை சார்ந்தும் திட்டம் பயங்கரமாக தீட்டியுள்ளது.
நிலவங்கி திட்டம்
நாம் ஏற்கனவே data center business பற்றி பேசியுள்ளோம் அதனை செயல்படுத்தும் திட்டதை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
நமது முன்னோர்கள் பெரும்பாலும் விலை குறைவாக சிட்டிக்கு அப்பால் நிலத்தை வாங்கி போட்டிருப்பார்கள் ஒரு 10 அல்லது 15 வருடத்தில் பல மடங்கு வளர்ச்சியை அளித்திருக்கும் .
அதே போல தான் ஒரு காலத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனமான Lodha developer கிட்டதட்ட 5000 ஏக்கர் வரை நிலத்தை மகாராஷ்டிராவில் வாங்கி போட்டுள்ளது இப்போ அந்த நிலத்தின் மதிப்பு வருட வருடம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.
வளரும் முதலீடு
Lodha developers palava city உலகத்திலேயே இதுவும் ஒரு பெரிய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரத்தில் ஒன்று.
இந்த palava city இல் ரெசிடென்டியல் டவுன்ஷிப் இல் இருந்து இண்டஸ்ட்ரியல் மற்றும் டிஜிட்டல் ஹப் ஆக உருமாற உள்ளது.
இந்த palava city நகர் புரத்தின் முக்கியமான சந்திப்பில் உள்ளது மேலும் 5000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் முதல்கட்டமாக 300 acre பரப்பளவில் ரெசிடென்டியல் project நிறைவேற்ற பட்டுள்ளது.
மேலும் பிரீமியம் வில்லா மற்றும் அபார்ட்மெண்ட் வரும் அடுத்த நிதி ஆண்டில் அமைக்க திட்டம் போட்டுள்ளது. அதை தொடர்ந்து ஏழு பள்ளிக்கூடங்கள் 4 லட்சம் square feet கொண்ட office space, 400 படுக்கை வசதி கொண்ட juniper hospital அடுத்த காலாண்டில் அமைய உள்ளது.
Palava data center
கடந்த 2024 இல் Amazon மற்றும் st telemedia இருவரும் நிலத்தை வாங்கி உள்ளனர் நிலத்தை விற்றது சிறப்பம்சம் இல்லை இதில் உள்ள முக்கிய குறிப்பு AWS 38 ஏக்கர் நிலத்தை சுமார் 450 கோடிக்கு வாங்கி உள்ளனர் 2024 இல் ஒரு ஏக்கர் விலை அப்போது 11.8 கோடியாக இருந்தது.
அதன்பிறகு stt 24 acre நிலத்தை வாங்கியது 2025 இல் சரியாக amazon வாங்கி ஒரு வருடம் கழித்து வாங்கியுள்ளனர் ஆனால் ஒரு வருடத்தில் நிலத்தின் மதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாக மாறியது ஓர் acre 20.8 கோடிக்கு வாங்கி உள்ளது 24 acre-க்கு 500 கோடி கொடுத்துள்ளது.
தற்போது ஒரு acre இன் விலை 70 கோடியாக இருப்பதாகவும் தகவல். இதன் மூலம் அவர்கள் செய்த முதலீடு பெரும் வளர்ச்சியை எட்டி உள்ளது. இதனை அறுவடை செய்ய நிறுவனம் தற்போது தயாராக உள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை land bank கை வசம் உள்ளதாக மதிப்பு செய்யப்பட்டுள்ளது.
Lodha திட்டம்
இனி மேற்கொண்டு நிலங்களை கையகப்படுத்துவதை முற்றிலுமாக குறைக்க திட்டம் போட்டுள்ளது. அவர்கள் வசம் உள்ள நிலத்தை monetization அதாவது விற்பனை மூலம் பணத்தை திரட்ட முடிவு செய்துள்ளது இதன் மூலம் கணிசமாக வருமான உயர்வை எதிர்பார்க்க முடியும்.
ஆனால் இதெல்லாம் நாளைக்கு நடந்து விடாது இதற்கான கால அளவு அதிகமாக இருக்கும் அதை நாம் இன்னும் கணக்கீடு செய்ய வேண்டும் செய்வோம்.
இறுதியாக Data center
தற்போது வந்த தகவலின் படி Lodha developers 1gw Data center power shell ஐ அமைக்க திட்டம் போட்டுள்ளது. Power shell என்றால் என்ன என்ற கேள்வி இருக்கலாம். Power shell என்பது Data center facility இதில் அத்தனை வசதிகளும் இருக்கும்.
ஆனால் இந்த facility குள்ளே server rack இருக்காது GPU இருக்காது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வெறும் ஓடு போல தான் இதை வாடகைக்கு edukum நிறுவனம் மாற்ற விஷயங்களை செய்து கொள்ளும். இதன் மூலமும் வருவாய் வளர்ச்சியை அடைய வழி வகுக்கும்.
அடுத்து நேரடியாக data center அமைக்கவும் திட்டம் இட்டுள்ளது இதை பற்றி நாம் முன்னரே கூறியுள்ளோம். மகாராஷ்டிரா அரசுடன் மும்பைக்கு அருகில் 1.3 லட்ச கோடி ரூபாய் முதலீடு செய்து 2.5Gw Data center அமைக்க ஒரு mou கையெழுத்து போட்டு உள்ளது.
இதில் 30000 கோடி மதிப்பிலான mou கடந்த 2025 இல் கையெழுத்தானது மேற்கொண்டு ஒரு லட்ச கோடி ரூபாய் mou தற்போது கையெழுத்தானது.
இதனால் 16000 வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் மும்பை அதன் data center Market share ஐ தக்க வைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
முழுவதுமாக Lodha developers இன் வருங்காலத்தை பற்றி விரிவாக பார்த்துள்ளோம். ஆனால் இது மட்டும் போதாது இன்னும் பல விஷயங்கள் உள்ளன இது ஒரு சின்ன பகுதி தான் மேலும் Lodha பற்றியான பாகங்கள் மூன்று நான்கு என்று தொடரும். நல்ல ஒரு இடத்தை Lodha அடையும் வரை பொறுமை காப்பதும் மிகவும் அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும் நண்பர்களே.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

31 Comments
கட்டுரை 3 ம் பகுதிக்கு காத்துக் கொண்டிருக்கிறோம்
ReplyDeleteThanks for the information brother
ReplyDeleteThanks bro, I eagerly waiting for your next chapter .... ❤️
ReplyDeleteThanks for the Lodha series bro ♥️
ReplyDeleteஆஹா ஆஹாநுணுக்கமான ஆய்வு
ReplyDeleteஉங்க விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் பல நண்பா
ReplyDeleteThanks for compiling all the important info and for reference at one place bro.. Appreciate your detailed work for gathering info which we couldn't find anywhere .! Keep up the good work bro 👍 waiting for more info & insights from you
ReplyDeleteYes bro we'll wait
ReplyDeleteThanks for information
ReplyDelete🎉🎉❤️
ReplyDeleteThanks for information 👍
ReplyDeleteSuper analysis since in bangalore North I could see lot of lodha developers buildings bangalore la datacenter varundhanu theriyala bro just my analysis bro
ReplyDeleteAppreciate your efforts bro 💯
ReplyDelete❤️❤️❤️
ReplyDelete👍 thanks
ReplyDeleteThank you bro 🎉🎉
ReplyDelete“Is this a good time to focus on buying Hero MotoCorp, or should I wait for a better entry?”
ReplyDeleteWaiting for next parts bro
ReplyDeleteThanks for the information. Very useful ..
ReplyDeleteArticle informative bro, helpful.. appreciate your efforts bro,keep it up!!!
ReplyDeleteThanks bro
ReplyDeleteUse full content. In Ashok ley land your view was right.
ReplyDeleteMeanwhile I never forget about HDFC, ASIAN PAINT, POLYCAB
Last but not least OLA ELECTRIC.
Your rocking bro.
I am following your channel in the name of Enter for Fun!!!
Simply super. Purunchuka easy irruku unga article.
ReplyDeleteதெளிவான தகவல்கள்.
ReplyDeleteGood to know. Thanks
ReplyDeleteGreat job bro it's useful
ReplyDeleteGreat information bro
ReplyDeleteNice bro
ReplyDeleteThanks a lot bro. You are providing valuable information, which is helping us to identify and understand specific stocks. and makes us rich... thanks a lot
ReplyDeleteValuable information 😀
ReplyDeleteThankyou for the detailed information bro
ReplyDelete