நாம் இதற்கு முன் பல sector நிறுவனங்களை பற்றி விவாதித்துள்ளோம் இன்னும் பல செக்டார்களை விவாதிக்காமல் கடந்து சென்று உள்ளோம் ஆனால் காலம் இப்போது வாய்ப்பை நமக்கு தந்து உள்ளது அதை சரியாக பயன்படுத்த வேண்டிய நேரம் இது அவ்வாறு பயன்படுத்தி வெற்றியாக மாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
அப்படி இந்த நாளில் நாம் பார்க்க இருக்கிற sector Realty Sector தான் மேலும் இது ஒரு சிறிய பதிவு தான் ஆனால் தொடர்ந்து இந்த துறையை பற்றி நாம் அலசி ஆராய்ந்து பார்க்க போகிறோம்.
நீங்களும் என்னுடன் இந்த பயணத்தில் உடன் இருப்பீர்கள் புதிய விஷயத்தை ஆவலுடன் கேட்பீர்கள் என்று எண்ணுகிறேன். இருப்பீர்கள் தானே??
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் சில நாட்கள் முன்பு வரை சந்தை பெரிது சரிந்து வந்ததை நாம் பார்த்தோம் அதில் இந்த realty sector-ம் பெரிய சரிவை சந்தித்து வந்தது அப்போது இதை பற்றி நாம் அவ்வபோது விவாதித்தோம்.
குறிப்பாக ரெண்டு நிறுவனங்கள் ஒன்று DLF மற்றொன்று LODHA நம் கண்பார்வையில் உள்ளது நாம் சில ஆண்டுகளுக்கு முன் DLF பற்றி பேசியுள்ளோம் நமக்கு பரிட்சயமான நிறுவனமும் கூட தான்.
ஆனால் Lodha பற்றி பெரிதாக நாம் பேச வில்லை இதுவும் முன்னணி நிறுவனம் இந்தியாவை பொருத்தவரை அதனால் இனி தாமதம் ஆக விட கூடாது.
அதனால் முதலில் விரைவாக Lodha மற்றும் DLF நிறுவனத்தின் முக்கிய விஷயங்களை பற்றி பார்ப்போம்.
அதில் முதன்மையான ஒன்று நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாபம் அளவு நீங்கள் screener ஐ திறந்து பார்த்தால் உங்களுக்கு தெரியும் அதில் உள்ள வித்தியாசங்கள்.
Lodha நிறுவனம் வருமானம் அடிப்படையில் பார்க்கும் போது இந்தியாவின் முதன்மையான realty நிறுவனம் என்று தான் கூறவேண்டும் ஏனெனில் DLF ஐ விட அதிக அளவில் வருமானத்தை ஈட்டி வருகிறது.
அதே போல் என்ன தான் வருமானம் அதிகமாக இருந்தாலும் லாபம் அடிப்படையில் பார்க்கும் போது DLF ஐ விட குறைவாக தான் உள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. என்ன என்பதை பார்க்கலாம்.
Lodha developer ஐ பொறுத்த வரையில் இது வரை அவர்கள் பெரும் அளவில் கவனம் செலுத்தும் இடம் ரெசிடென்சியல் மட்டுமாக உள்ளது.
அதுவும் குறிப்பாக மும்பை, புனே, மற்றும் பெங்களூர் போன்ற பெரும் நகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது அதை விரிவுப்படுத்தும் வகையில் national capital regional இல் அடி எடுத்து வைத்து உள்ளனர்.
ரெசிடென்சியல் பொறுத்தவரை luxury, premium, மற்றும் நடுத்தர பிரிவு போன்றவற்றில் இயங்கி வருகின்றனர். இது தான் தற்போது நிறுவனத்தின் பெரும் பகுதி வருமானதை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் DLF ஐ பொறுத்தவரை முற்றிலும் வேறுபட்டு வருகிறது Lodha பெரிதும் பங்கு பெறாத பகுதியில் வருமானத்தை ஈட்டும் யுக்தியை கொண்டு உள்ளது.
ரெசிடென்டியல், கமர்ஷியல், வாடகை போன்ற நிலையான வருமானத்தை கொண்டுள்ளது உதாரணத்திற்கு Retail mall, commercial lease, office lease போன்ற பல்வேறு வழிகளில் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் நிலையான வருமானத்தையும் அதிக லாபத்தையும் தருகிறது. செலவுகள் குறைப்பு போன்றவை லாப விகிதங்களை உயர்த்துகிறது Lodha உடன் ஒப்பிடும் போது.
மேலும் Lodha உடன் ஒப்பிடும் போது கடன் சுமை குறைவு மேலும் முற்றிலும் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் முயற்சியிலும் DLF நிறுவனம் உள்ளது. இதனால் கடனுக்கான வட்டி செலவு குறைவு லாப அளவு அதிகமாக உள்ளது.
இப்படி பட்ட பல வகையான வணிகங்கள் மற்றும் கடன் சுமை குறைவு போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் அதிகமாக வருமானம் ஈட்டும் lodha வை லாப அளவில் DLF முந்தி வெற்றி பெற்று உள்ளது.
இப்போது இந்த நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் பற்றி நீங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஒப்பீட்டில் உங்களுக்கு மிகவும் சிறந்த நிறுவனமாக DLF தெரிந்திருக்கும் ஆனாலும் நான் ஏன் Lodha மீது ஆர்வம் கொண்டுள்ளேன் என்பதை அறிய ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எதிர்ப்பார்ப்புடன் இருங்கள் அடுத்த பதிவில் அதற்கான பதில் நண்பர்களுக்கு கிடைக்கும்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

21 Comments
Interesting Brother. We are waiting for next part and will travel along with you
ReplyDeleteSuper bro
ReplyDeleteநன்றி நண்பரே 🙏
ReplyDeleteஎங்களை நீண்ட நேரம் காக்க வைக்க வேண்டாம்! விரைவில் Lodha பற்றி அறிய ஆவல்
ReplyDeleteDetailed analysis of best reality stocks very much helpful to entering this sector thank you brother 🙏🏼
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper hero
ReplyDeleteநன்றி தம்பி, LODHA பரிசீலிப்பதற்கான காரணத்தை அறியக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ReplyDeleteஉங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி Bro
Great explanation bro... Lodha Data centre business laym irukkanga
ReplyDeleteThank you bro🎉 waiting for good level
ReplyDeleteThanks for information brother
ReplyDeleteBro last dip i consider lodha
ReplyDeleteSuper bro waiting
ReplyDelete🎉🎉❤️
ReplyDeleteSuper information
Super bro. Interesting. Quick aa next chapter aa release panunga. Romba delay pannirathinga...
ReplyDeleteநல்ல கட்டுரை பதிவு சகோ😍. மிக்க நன்றி.❤️ உங்கள் பயணத்தைத் தொடருங்கள், நாங்கள் ஆதரவளிக்கிறோம்.🙏
ReplyDeleteThank you
ReplyDeleteInteresting bro..
ReplyDeleteTill now we are not focused on this sector
Appreciate you hard work Bro in this Interesting content! Eagerly waiting for Part 2
ReplyDeleteThankyou bro for this 2 companies. Waiting for right opportunity to enter in this sector.
ReplyDelete