நாம் கற்ற பாடத்தை சிற்பம் போல் கல்வெட்டு போல் பதிவு செய்து கொள்வது மிகவும் நல்லது அதை தான் நான் இப்போது செய்து வருகிறேன் என்னுடைய வலைதளம் மூலம் என்னுடைய தவறு ஒரு பங்கை பற்றியது அதை நீங்களும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் வாருங்கள் அதை நாம் விரிவாக பார்ப்போம்.
செய்த தவறுகள்
ஒரு காலத்தில் குறிப்பாக கொரோனா காலகட்டம் மற்றும் 2022 ஒரு முக்கிய வருடம் நல்ல முதலீட்டிற்கு அப்படிப்பட்ட காலத்தில் பல நிறுவனங்கள் அடி மட்டத்தில் இருந்தது. அவ்வாறு அரசாங்க நிறுவனங்கள் பலதும் அடிமட்டத்தில் கண்டு கொள்ளாமல் கிடந்தன.
அச்சமயம் government பங்குகள் மீது ஆர்வம் செலுத்த ஆள் இல்லை அதற்கு பல காரணங்கள் உண்டு முதல் காரணம் இதில் பணத்தை முதலீடு செய்தால் நமக்கு லாபம் கிடைக்காது இப்படி பட்ட அரசாங்க பங்குகள் பெரிய ஏற்றத்தை தராது என்று எண்ணினார்கள்.
இரண்டாவது காரணம் PSU நிறுவன பங்குகள் மீதான முதலீடு ஆபத்து என்ற பிரச்சாரம் நடைபெற்றது இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
நாம் தொடர்ந்து PSU நிறுவனங்களை பற்றி விவாதித்துள்ளோம் அவ்வாறு இருக்கையில் நீங்கள் எவ்வாறு தவறு செய்திருப்பீர்கள் என்ற கேள்வி எழலாம் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக தவறான முடிவு நான் எடுத்தேன் அப்படிப்பட்ட தவறான முடிவு பெரும் வாய்ப்பை என்னிடம் இருந்து பார்த்தது இது ஒரு மிகப்பெரிய பாடமாக கருதுகிறேன்.
நான் உங்களிடம் பல முறை கூறியுள்ளேன் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்து வணிகத்தை வணிகமாக பார்க்க வேண்டும் என்றும் இந்த குரூப் சிறந்தது இந்த குரூப் சிறந்தது அல்ல என்று நாம் சந்தையை அணுகினால் நஷ்டம் நமக்கு தான் என்று படிப்பினை இந்த ஒரு தவறினால் கிடைத்து. அப்படிப்பட்ட பங்கு தான் indian bank அதே நேரத்தில் நான் union Bank வாங்கினேன் ஆனால் சிறந்த performance ஐ தந்த நிறுவனம் indian bank.
ஏன் இதை தொடவில்லை
பங்குச்சந்தையில் நுழையும் முன்னே இதை பற்றி அறியும் முன்னரே பள்ளியில் படிக்கும் போதே இந்தியன் வங்கியில் கணக்கு இருந்தது அவர்கள் கொடுக்கும் சேவை மற்ற அரசு வங்கிகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு தான் அப்படி பட்ட அனுபவம் எனக்கு உண்டு பலருக்கும் இருக்கும் என்று எண்ணுகிறேன்.
இப்படி பட்ட ஒரு காரணம் என் ஆழ் மனதில் படிந்து பின் நாளில் பங்குச்சந்தையில் நுழைந்த பிறகும் அறிவு வேலை செய்யாமல் முன்னொரு காலத்தில் கிடைக்க அனுபவம் தற்போது உள்ள மாற்றத்தை ஏற்க மனது மறுத்தது அதன் விளைவு பெரும் வாய்ப்பை தவற விட்டேன்.
இதன் மூலம் நான் கற்று கொண்ட பாடம் நடந்து முடிந்த காலத்தை மற்றும் கருத்தில் கொண்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க கூடாது என்பது தான். நிகழ் காலத்தில் எவ்வாறு செயல்படுகிறது எதிர்காலத்தில் வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை பார்க்க தவறியது மிகப்பெரும் தவறு அந்த தவறு அப்படிப்பட்ட பாடம் உங்கள் வாழ்க்கையிலும் ஏற்பட்டு இருக்கலாம் நீங்கள் அதை பற்றி யோசிக்காமல் இப்போதும் இருக்கலாம் ஆனால் அப்படிப்பட்ட உங்களை தற்போது இந்த பதிவு யோசிக்க வைக்கும் என்று எண்ணுகிறேன் உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
தற்போது இந்த இந்தியன் வங்கி கடந்த ஆண்டுகளில் எவ்வாறு செயல்பட்டது என்று பார்ப்போம்.
ஆறு ஆண்டு கால வளர்ச்சி
2020 கோவிட் சரிவில் வெறும் 42 ரூபாயில் இருந்தது வெறும் ஒரு நாள் இல்லை சுமார் இரண்டு மாத காலம் அதே விலையில் இருந்தது.
ஆனால் பல சிறு முதலீட்டாளர்கள் அதில் பங்கு பெறவில்லை உண்மையை சொல்ல போனால் பங்கு பெற விட வில்லை என்பது தான் மற்ற சிறு வங்கிகள் தான் அப்போது பேசும் பொருள் அதுவும் நன்றாக perform செய்துள்ளது ஆனால் PSU வங்கிகள் மட்டம் தட்டப்பட்டது தான் பெரும் தவறு அப்படி மட்டம் தட்டியதால் பலரும் PSU வங்கிகளை தற்போது வரை கண்டுகொள்ளாமல் தான் உள்ளனர்.
கடந்த 2020 இல் இருந்து தற்போது வரை சுமார் 1980% வரை உயர்ந்துள்ளது இப்படிபட்ட உயர்வு எந்த ஒரு பெரும் வங்கிகளிலும் நடக்கவில்லை hype ஏற்றப்பட்ட சிறு வங்கிகளிலும் ஏற்படவில்லை.
அதற்காக பெரும் வங்கிகளை கைவிட்டு நடுவில் உள்ள வங்கிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை இதையும் நாம் கூடவே சேர்ந்து கவனித்திருந்தால் ஒருபுறம் பெரும் நிறுவனங்கள் போர்ட்ஃபோலியோவில் ஸ்திர தன்மையை ஏற்படுத்தியிருக்கும் மறுபுறம் நல்ல வாய்ப்பையும் நழுவ விட்டிருக்க மாட்டோம் இதை தான் தற்போது எப்போதும் உங்களிடம் பகிர்ந்து வருகிறேன் இரண்டும் முக்கியம் என்று ஒரு சமநிலை கண்டிப்பாக வேண்டும் என்பது எனது புரிதல்.
சரி இப்போது நாம் 2020 காலகட்டத்தில் சுமாரி 4,20,000 ரூபாய் 10000 பங்குகளில் முதலீடு செய்துள்ளோம் என்று பேச்சுக்கு வைத்து கொள்வோம் அதனால் எவ்வளவு வளர்ந்திருக்கும் நம் முதலீடு என்று கற்பனை செய்தாலே தலை சுற்றிவிடும்.
தற்போது அதன் மதிப்பு 87,50,000 ரூபாயாக மாறி இருக்கும். கேட்கும் போதே தலை சுற்றுகிறதா இதை விட இன்னொரு விஷயம் இருக்கு அது தான் டிவிடெண்ட் இது மட்டும் சுமார் ஆறு வருடங்களில் 6,36,000 ரூபாய் நமக்கு கிடைத்திருக்கும் நாம் முதலீடு செய்த பணத்தை விட டிவிடெண்ட் அதிகமாக கிடைத்திருக்கும் இரண்டும் சேர்த்து பார்த்தால் 4,25,000 ரூபாய் சுமார் 94 லட்ச ரூபாய் இந்த ஆறு வருடங்களில் ஆகி இருக்கும்.
வங்கியின் செயல்பாடுகள்
சரி வெறும் பங்கு விலை மற்றும் தான் இப்படி வளர்ந்துள்ளதா என்ற கேள்வி இருக்கும் நிச்சயமாக இல்லை நிறுவனத்தின் செயல் திறன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
2020 இல் இந்தியன் வங்கி 862 கோடி மட்டுமே லாபத்தை பதிவு செய்துள்ளது ஆனால் 2026 இல் இதன் லாபம் மலையென உயர்ந்து சுமார் 11707 கோடி ரூபாய் ஆக உள்ளது.
ஆனால் பலரின் குற்றச்சாட்டு என்ன? Psu பங்குகள் பெரும் முதலாளிகளுக்கு பணத்தை கொடுத்து வங்கியை திவால் ஆக்கி விடுவார்கள் என்பது தான் ஆனால் உண்மை என்ன எத்தனை பொதுத்துறை வங்கிகள் அப்படி ஆகி உள்ளது என்று தேடி பாருங்கள் விடை உங்களுக்கே தெரியும்.
இந்த பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது வெறும் செவி வழி செய்திகளை நம்பி அதனை முதலீட்டு முடிவாக மாற்ற கூடாது என்பது தான் இப்பதிவின் முக்கிய நோக்கம் அவ்வாறு கண்மூடி தனமாக முடிவு செய்வதால் நாம் அடைவது இழப்பு மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய சூழ்நிலை மீண்டும் உருவானால் நீங்கள் எவ்வாறு யோசிக்க வேண்டும் என்பதை இப்பதிவில் விரிவாக கண்டுள்ளோம் நீங்கள் எப்படி செயல் ஆற்றுவீர்கள் என்பதை கருத்துகளாக பதிவிடுங்கள்.
Indian Bank Q4 முடிவு
தற்போது இந்தியன் வங்கி நிறுவனத்தின் Q4 Results ஐ நாம் பார்க்க உள்ளோம்.
இந்த காலாண்டை பொறுத்தவரை இந்தியன் வங்கியின் லாபம் பெரிதாக உயரவில்லை சென்ற காலாண்டுடன் ஒப்பிடும் போது வெறும் 5% மட்டுமே லாபம் உயர்ந்துள்ளது. (3103 கோடி vs 2956 கோடி) YOY
நிகர வட்டி வருமானம் வளர்ச்சி 11.3% உள்ளது (7109கோடி vs 6389கோடி) YOY
லாபம் சரிய முக்கிய காரணம் provision கணிசமாக உயர்ந்துள்ளது இந்த காலாண்டில் 1225 கோடி ரூபாயும் Q3 காலாண்டில் 857 கோடி ரூபாயாகவும் உள்ளது.
டிவிடெண்ட் இந்த காலாண்டில் மிகவும் அருமை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது இந்தியன் வங்கி 18.25 ரூபாய் அறிவிப்பு பங்கு முதலீட்டாளர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த பதிவில் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை சுருக்கமாகவும் மற்றும் நான் என்னை போல சிறு முதலீட்டாளர்கள் செய்யும் தவறுகளை பற்றியும் வருங்காலத்தில் இந்த தவறுகளை எப்படி கையாள வேண்டும் என்பதை பற்றியும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் இந்த பதிவு எப்படி உள்ளது என்ற கருத்தை கீழே பதிவு செய்யுங்கள் இன்னும் பல பதிவுகள் தொடர்ந்து உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ந்து தினமும் காலை மாலை நமது வலைதளத்தை பாருங்கள் இது போல இன்னும் பல விஷயங்கள் கற்று அறிவோம்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.



25 Comments
Thanks bro
ReplyDeleteThanks bro
ReplyDeleteSuper article bro
ReplyDeleteநன்றி மிகவும் பயனுள்ள தகவல்கள்
ReplyDeleteThank you
ReplyDeleteநன்றி நண்பரே 🙏
ReplyDeleteThanks for information brother
ReplyDeleteThank you bro
ReplyDeleteஅருமையான , அவசியமான பதிவு சகோ ! 2022'ல் பங்கு சந்தை நுழையும் போது power sector எதிர்காலம் கருதி வாங்கிய Power grid, NTPC , COAL india ஆகிய பங்குகளை சிறிது வாங்கினேன். ஆனால் PSU பங்குகள் பற்றிய பரப்புரை new investor ஆன என்னை பதட்டமடைய வைத்து , எல்லா பங்கையும் சொற்ப லாபத்திற்கு விற்றேன்.
ReplyDeleteஇப்போது வருந்தினாலும் அந்த பாடம் நினைவில் இருக்கிறது. தவறுகள் மட்டுமே நல்ல பாடம் கற்றுக் கொடுக்கிறது என்பதுதான் உண்மை
really teaching me lot bro
ReplyDeletevery useful information bro
ReplyDeletethanks bro
ReplyDeleteSuper bro
ReplyDeleteUse full content 👌
ReplyDeleteமிக்க நன்றி வாத்தியாரே உங்களுடைய அறிவுரைக்கு I Love ❤️ u
ReplyDeleteSuper bro. Ninga sonathu innum deep aa think pana vaikuthu. Athu share market layum sari, life layum sari...
ReplyDeleteBro, one small request. Utkarsh small finance bank pathi already oru artical poturukinga. Again inoru artical unga point of view la detailed aa analysis pani podunga.
Great and informative
ReplyDelete👍
ReplyDelete2020-2022 கையில் பெருமளவு பணம் (retirement money) இருந்த போதும் , 1993 முதல் பங்கு மார்க்கெட்டில் இருந்தாலும் பயம் காரணமாக வாய்ப்புகளை தவற விட்ட தருணம் அது. அருமையான படிப்பினையை தரும் கட்டுரை. நன்றி தம்பி
ReplyDeleteஅருமையான படிப்பினை 💯💯💯
ReplyDelete👍
ReplyDeleteSuper bro keep rock
ReplyDeleteNice update bro
ReplyDeleteCorrect bro 💯💯💯 thank you for sharing
ReplyDeleteVery good analysis thanks for the update 🤝
ReplyDelete