Gold ETF முதலீடு இனி ஆபத்தா?? நமது பணத்தை பயந்து உடனே எடுக்க வேண்டுமா?? என்ற தீடீர் கேள்வி பலர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. இதை பற்றி நாம் தற்போது அறிந்து கொள்வோம்.
கடந்த சில மாதங்களாக Gold ETF இல் தொடர்ந்து சேமிக்கும் பழக்கத்தை சிறு குறு முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள்.
Gold ETF இன் வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது. பெப்ரவரி 2026 வரை சுமார் இந்தியாவில் உள்ள 25 Gold ETF இல் 1.83 லட்ச கோடி மதிப்பிலான தங்க சொத்துக்கள் உள்ளன மற்றும் 1.21 கோடி கணக்குகளும் உள்ளன.
இது தங்கத்தை ஆபரணமாகவும் காயின் வடிவிலும் வாங்குவதை விட Gold ETF மூலம் வாங்கும் ஆர்வம் பரவலாக சிறு குறு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ளது.
இதற்கு காரணம் விரைவாக மற்றும் எளிதாக முதலீடு செய்ய முடியும் என்ற ஒரு காரணமும் அதே போல விரைவாக விற்று பணத்தை திரட்டி கொள்ளும் வசதியும் உள்ளது முக்கிய காரணம்.
மேலும் பாதுகாப்பும் ஒரு படி மேலே என்பதை ஒப்பு கொள்ள வேண்டும். ஆனால் தற்போது ஓட ஆரம்பித்துள்ள பிரச்சனை ஒட்டு மொத்த Gold ETF முதலீட்டின் பாதுகாப்பை கேள்வி குறி ஆக்குவது மட்டுமில்லாமல் இத்தகைய முதலீட்டை கைவிடும் எண்ணம் முதலீட்டாளர்கள் மனதில் விதைக்கின்றனர்.
இதன் உண்மை தன்மை என்ன உண்மையிலேயே ஆபத்தா இல்லை உருட்டா என்பதை விரிவாக பார்ப்போம்.
என்ன பிரச்சனை
செபியின் புதிய விதிமுறை தான் இப்படிபட்ட கேள்வியை எழுப்பியுள்ளது. இதை பற்றிய புரிதல் தவறாக மக்களிடம் திணிக்கப்பட்டு வருகிறது.
செபியின் புதிய விதிமுறை என்னவென்றால் ஏப்ரல் 22, 2026 முதல் Gold ETF fund manager physical Gold இல் இருந்து exchange traded commodity derivatives (ETCD) இல் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் தற்போது வரை Gold ETF இல் 95 முதல் 100 சதவீதம் வரை physical Gold இல் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது ஆனால் புது விதியில் 50 சதவீதம் வரை future Contract இல் முதலீடு செய்யலாம் என்று வந்துள்ளது.
இதனால் நிதி மேலாளர் இதை செய்து எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் நஷ்டம் ஏற்படும் என்ற கவலை அதிகரித்துள்ளது. நியாமான கவலைகள் தான் ஆனால் இதை முதலில் செயல் படுத்த போகும் HDFC Gold ETF தெளிவான விளக்கம் தந்துள்ளனர் அது என்ன என்பதை பற்றி நாம் காண்போம்.
முதலில் HDFC Gold ETF பற்றி பார்ப்போம், பெப்ரவரி 28, 2026 இன் படி இந்த ETF இல் 15,262 கிலோ physical Gold bars உள்ளது இவை அனைத்தும் 99.5% மேலே சுத்தமான தங்கம் என்றும் இந்த மொத்த சொத்தின் 98.65 சதவீதம் தங்கமாக தான் உள்ளது மீதம் 1.35 சதவீதம் பணமாகவும் கடன் பாத்திரங்களிலும் உள்ளது.
இந்த பிரச்சனை குறித்து HDFC நிறுவனம் தெளிவாக தெரிவித்துள்ளது என்ன என்றால், ETF இல் 50% முழுவதுமாக future Contract பக்கம் செல்ல மாட்டோம் என்றும் அவசர கால கட்டத்தில் குறுகிய கால அளவில் மட்டுமே இதில் பங்கு பெறுவோம் என்றும் பெரும்பாலான சொத்துக்கள் physical Gold ஆக மட்டுமே தொடர்ந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் அவசரகாலம் என்றால் எப்போதாவது ஏதாவது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் physical Gold ஐ வாங்க அல்லது விற்க முடிய வில்லை எனில் மட்டும் future Contract பக்கம் குறுகிய காலத்திற்கு செல்வோம் என்றும் மீண்டும் இயல்பு நிலைக்கு அனைத்தும் திரும்பும் போது physical Gold மட்டுமே முதலீடு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு படி மேலே சென்று நாங்கள் தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுவது எங்களின் யுக்தி இல்லை என்றும் கூறினார்கள்.
இப்போது நன்றாக விளங்கி இருக்கும் என்று எண்ணுகிறேன் அதே சமயம் இப்படி இவர்கள் சொல்லிவிட்டு பிற்காலங்களில் மாற்றங்கள் செய்தால் என்ன செய்வது என்ற கேள்வி இருக்கும்.
அவ்வாறு நிறுவனம் தடம் மாறி செல்லும் போது அவர்கள் அளிக்கும் அறிக்கையில் நமக்கு தெரிய வரும் அப்போது நாம் அதிலிருந்து வெளியேறி அதை physical Gold ஆக மாற்றி கொள்ளலாம்.
பெரும்பாலும் சமூக ஊடகங்களில் மக்கள் மனதில் பயத்தை விதைத்து அதை பார்வையாக அறுவடை செய்யும் ஒரு யுக்தி உள்ளது அதை பலரும் செய்து பயத்தை சுயபயனாக மாற்றுகின்றனர்.
அதனால் பயத்தை தவிர்த்து முதலீட்டாளர்கள் உண்மை என்ன என்பதை ஆராய வேண்டும் என்பதை இந்த பதிவு உங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

18 Comments
அருமை
ReplyDelete🎉🎉❤️
ReplyDeleteRighty said super some YouTubers creating panic among investors but you’re views about gold ETF and stocks are really worth reading and with out profit motive thank you brother keep going brother 👍
ReplyDeleteThanks for information brother
ReplyDeleteCorrect analysis I also thought the same very useful article. 🤝
ReplyDeleteSuper article bro
ReplyDeleteLast time your article didn't open, this time it is open.
புரிந்துகொள்ள எளிமையானவிளக்கம்!
ReplyDeleteNalla pathivu nanba
ReplyDelete👌
ReplyDeleteReally very nice
ReplyDeleteThanks for clarifying details, brother.
ReplyDeleteNaa gold etf la invest panala. But intha news romba useful aa iruku. Thanks bro.
ReplyDeleteBro, oru small request. Ninga focus pandra small cal stocks aa video la discuss pana matinga, athu yean nu engalukku theriyum.
But inga ninga focus pandra stock aa oru artical aa post panunga. Like KNRC and Utkarsh mathiri. Ithu engaluku innum useful aa irukum.
HDFC Gold ETF is fine. In the following one crisis scenario, only 50% will be invested in ETCD. But what about other gold ETFs like SBI, Nippon?
ReplyDeleteநல்ல கட்டுரை பதிவு சகோ😍. மிக்க நன்றி.❤️🙏
ReplyDeleteமிகவும் தேவையான செய்தி. பலரும் பெருமளவில் முதலீடு செய்துள்ள தங்க ETFல் இது போன்ற புரளிகளை கிளப்பி விடும் youtuberகளின் புரளி வீடியோக்களை தடை செய்ய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் gold bond ல் புரளி கிளப்பி விடப்பட்டது. அதை நம்பி விற்று இருந்தால் நமக்கு தான் நட்டம். மிக்க நன்றி தம்பி
ReplyDelete👍
ReplyDeleteSuper
ReplyDeleteGreat article bro. Now a days many of the influencers and soo called analyst were creating panic and negative marketing among the general public, but in other way around they are making good returns. Need to start saving for future investment opportunity as you always says "Save money for bulk investment opportunity and don't spend on FOMO ". This fall is great lesson for me, because i don't have enough money to invest in good stocks at good value. Thanks for the continuous contributions towards our wellbeing. keep growing.
ReplyDelete