Header Ads Widget

ITC in Trouble? Cigarette Sales Crash Explained!


GSTஆல் வந்த வினை சிகரெட் விற்கும் நிறுவன பங்குகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இரண்டு சிகரெட் நிறுவனங்களும் இப்போ தான் சரிவிலிருந்து சிறிது தலை தூக்கியது ITC 290 லிருந்து 300க்கும் மற்றும் Godfrey philips 1800 லிருந்து 2100 க்கும் வந்துள்ளது. ஆனால் வரப்போகும் காலாண்டு முடிவில் ஒரு தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ITC ஐ பொருத்தவரை இரண்டு பக்கமும் அடி என்பது உறுதி செய்யப்பட்டது. ஏனெனில் ஒரு பக்கம் விலைவாசி உயர்வு காரணமாக FMCG பிரிவிலும் ஒரு தாக்கம் ஏற்பட்டுள்ளது. 

மறுபுறம் சிகரெட் விற்பனை பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. 

தற்போது போர் நிறுத்தம் பங்கின் விலையை உயர்த்தினாலும் அடிப்படை பிரச்சனை இன்னும் தீரவில்லை என்பதை நாம் உணர வேண்டும் அதற்கு ஏற்றார் போல் செயல்படவேண்டும்.

தற்போது நிலவும் பிரச்சனை என்ன என்றும் இதை எவ்வாறு சமாளிப்பாளர்கள் என்றும் நாம் பார்ப்போம்.

இந்தியாவில் சிகரெட் விற்பனை GST உயர்த்தப்பட்டபின் மொத்த விற்பனை அளவு 3-5% வரை சரிந்துள்ளது இது குறிப்பாக மார்ச் மாத விற்பனையில் ஏற்பட்ட பாதிப்பு ஏப்ரல் மாதத்திலும் விற்பனை அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

குறிப்பாக இந்த விலை உயர்வு சிகரெட் விற்பனையின் பெரும் சந்தையான கிழக்கு இந்தியாவில் விற்பனை மிகப்பெரும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சிறிய சிகரெட் விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது ஆனால் வரி பெரியளவில் உயர்த்தப்பட்டது பெரிய சிகரெட்டுக்கு தானே என்ற குழப்பம் இருக்கலாம். 

ஆனால் சிறிய ரக சிகரெட்டை ரூபாய் 6 லிருந்து 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல 18 ரூபாய் சிகரெட் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதனுடன் ஒப்பிடும் போது விலை உயர்வு சிறிய சிகரெட்டில் விலை அதிகமாக உள்ளது இதனால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதே நேரத்தில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிகரெட் வெறும் 12 ரூபாய்க்கு தற்போது விற்கப்படுகிறது. இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் நிறுவனத்தின் திட்டத்தை பற்றி நான் புரிந்துகொண்டதை இங்கு கூறுகிறேன்.

தற்போது சிகரெட் விற்பனை சிறிது சரிந்தாலும் எதிர்காலத்தில் நல்ல மார்ஜின் பெற வழிவகை செய்யும் திட்டத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஏனெனில் 25 ரூபாய் வரியால் உயர்ந்த பிரீமியம் சிகரெட்டை மக்கள் குறைக்க வாய்ப்புள்ளது என்று எண்ணி குறைவான விலை உடைய அதாவது 6 ரூபாய் சிகரெட் விலை 10 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டதன் மூலம் 25 ரூபாயிலிருந்து தற்காலிகமாக மாற நினைப்போர் 10 ரூபாய் சிகரெட்க்கு மாறுவார்கள் விற்பனை அதிகரிக்கும் மார்ஜின் கூட சேர்ந்து உயரும் இதனால் அடுத்த காலாண்டில் நிலையான வருமானத்தை பெற வாய்ப்புள்ளது. தற்போது volume குறைந்தாலும் மார்ஜினில் பெரும் மாற்றம் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதனால் மேலும் சில காலத்தில் நிறுவனம் எங்கும் செல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது அதனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். 

அதே சமயம் இதற்கு மேல் அழுத்தம் வருமா என்பதை வரக்கூடிய காலாண்டு முடிவு தான் பதில் சொல்ல வேண்டும். இன்னும் சில நாட்களில் வந்து விடும் அச்சமயம் FMCG பிரிவின் திறன் பற்றியும் சிகரெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பற்றியும் விரிவாக நாம் காண்போம். 






Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

15 Comments

  1. ஐடிசி பங்கின்அடிப்படையானபிரச்சனைகளைபுரிந்துசெயல்பட மேற்கண்டவிளக்கம்உதவியாக இருக்கும்!

    ReplyDelete
  2. FMCG sector ல ITC கு பதிலா hul , DMART நல்ல OPTION

    ReplyDelete
  3. 🎉🎉 nice article
    Bro we are waiting for the asian paints article with their fully national and international business.
    What do you think about their recent polymer business merger with asian Paints can they produce raw material vam vae cheaper and can again get good cash flow and margin like before?
    What is your view.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Nice detailed analysis thank you brother 👍

    ReplyDelete
  6. கீழே வந்தால் ITC அக்குமுலேட் செய்ய தயாராக உள்ளேன்

    ReplyDelete
  7. Thanks for the article. Hope ITC will diversify more and more profitable segments in future.

    ReplyDelete
  8. அப்போ இன்னும் வாங்கலாம்

    ReplyDelete