நாம் பலமுறை Automobile துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களான நம் நாட்டை சேர்ந்த Tata motors பற்றியும் வெளிநாட்டு நிறுவனமான Stellantis பற்றியும் பலமுறை விவரமாக விவரித்துள்ளோம். இந்த பதிவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் களநிலவரங்களை பற்றி விரிவாகவும் இதன் மூலம் சரியான புரிதல் உங்களிடம் உருவாகும் என்ற நம்பிக்கையுடன் காண்போம்.
Tata motors and Stellantis:
ரெண்டு நிறுவனங்களும் கடந்த 2 ஆண்டுகளாக விற்பனையில் மிகவும் பின்தங்கி வருகின்றனர் இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இவர்களின் விற்பனை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக நான் பார்ப்பதை நிறுவன அடிப்படையில் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.
Stellantis-ன் சரிவுக்கு முக்கிய காரணம் அவர்கள் கார்களின் விலை தான் மிகவும் பிரீமியம் உயர்வாகவும், வசதிகள் குறைவாகவும் தந்தது.
இரண்டாவது, சந்தையில் ஊழல் போட்டி சூழ்நிலையை புறக்கணித்து புதிய மாடல்களை களம் இறக்காமல் பழைய மாடலை டீலர் தலையில் பெருமளவு கட்டி விற்பனை செய்ய முடியாமல் inventory பிரச்சினையில் சிக்கி கொண்டது.
Tata Motors-ன் (JLR) சரிவுக்கு முக்கிய காரணம் சீன சந்தையில் உள்ள போட்டி தன்மை சீன சந்தை நிறுவனத்திற்கு மிகவும் முக்கிய சந்தை. புதிய மாடல்களை இவர்களும் களம் இறக்க தவறி விட்டார்கள். சீனாவில் உள்ள போட்டி சூழலை சமாளிக்க நிறுவனம் மேற்கொண்டு புது மாடல்களை களம் இறக்குவது அவசியம். இதே பிரச்சனை தான் north america, மற்றும் ஐரோப்பா சந்தைகளிலும்.
இரண்டாவது, Jaguar கார்களின் விற்பனையை நிறுத்தி மின்சார வாகன திட்டம் மற்றும் புது டிசைனில் வந்த பிரச்சனைகள் நிறுவனத்தை மேலும் கடினமான இடத்துக்கு தள்ளியது.
Stellantis மற்றும் Tata motors நிறுவனங்களின் பிரச்சினைகளை நாம் பார்த்தோம். அடுத்து பொதுவான ஒரு பிரச்சனை இந்த மின்சார வாகன திட்டம் தான் பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன கனவை தள்ளி போட்டு விட்டார்கள் அதில் புதிதாக உலகில் மிகவும் விலையுயர்ந்த கார் நிறுவனமான Rolls Royce நிறுவனம் இணைந்துள்ளது.ஏனெனில் வாடிக்கையாளர்கள் பிரீமியம் பிரிவில் எலக்ட்ரிக் கார்களை வாங்க முன்வரவில்லை மாறாக V12 போன்ற ICE வாகனங்களையே விரும்புகின்றனர்.
இதனால் மின்சார வாகன திட்டம் படிப்படியாக கை விடப்படுகிறது. மேலும் ford, GM, lamborghini போன்ற நிறுவனங்களும் இதில் அடங்கும்.
Stellantis $20பில்லியன் மறுசீரமைப்பை நாம் பார்த்தோம் இதனால் பெரும் நஷ்டத்தை நிறுவனம் சென்ற காலாண்டில் பதிவு செய்தது.
ஆனால் Tata motors தற்போது சொகுசு வாகனங்களில் விலை உயர்ந்த கார்களில் எலக்ட்ரிக் தேர்வை கொண்டு வருவது சவாலாக அமையும் வருங்காலத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது எண்ணமாக உள்ளது.
Byd போன்ற சீனா நிறுவனங்கள் விற்பனை அமோகமாக உள்ளதே என நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது ஆனால் சீன நிறுவனங்களின் வெற்றியே விலை குறைவாக அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த வாகனங்களை விற்பனை செய்வதே அவர்களின் வெற்றிக்கு காரணமாக உள்ளது.
உதாரணத்திற்கு, Rolls Royce கார் விலையை விட மிகவும் குறைந்த விலையில் அதில் இருக்கும் டிசைன் மற்றும் அதை விட பல சிறப்பம்சங்களை தருவதால் luxury கார் நிறுவனமான tata motors உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dead Company என்றழைக்கப்படும் Stellantis நிறுவனத்தின் தற்போதைய திட்டம் விலையை குறைத்து புது மாடல்களை அறிமுக செய்வது தான் செய்து கொண்டும் வருகிறது. இதனால் பலன் ஏற்பட்டுள்ளதா என்று கேட்டால் நிச்சயம் ஏற்பட்டுள்ளது North America-வில் Inventory கணிசமாக குறைந்துள்ளது இதன் விளைவால் புது மாடல்களை களம் இறக்கி வருகிறது.
மேலும் ஒரு சிறந்த முன்னேற்றத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு தற்போது கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐரோப்பாவில் Stellantis-ன் விற்பனை நன்றாக உயர்ந்துள்ளது மேலும் Market share வளர்ந்துள்ளது. இந்த முன்னேற்றம் தொடருமா என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அதே நேரத்தில் Tata motors (JLR) இன் விற்பனை 11.2% குறைந்து 4332 Feb 26 vs 4881 Feb 25 ஆக உள்ளது. மேலும் பல சந்தைகளில் JLR விற்பனை கவலைக்கிடமாக உள்ளது அதை பற்றி அடுத்த பதிவில் மேலும் பார்ப்போம்.
இறுதியாக ரெண்டு நிறுவனங்களின் பங்கு விலையும் கணிசமாக குறைந்துள்ளது ஆனால் எதில் வருங்காலத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்பதை நாம் கவனித்து பின்பு சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக கல்வி ரீதியாக இந்த பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.



19 Comments
Sema bro i was waiting for this
ReplyDeleteSuper Nanba. Great research
ReplyDeleteWaiting ji
ReplyDeleteGreat explanation bro
ReplyDeleteVanakkam Nanba great
ReplyDeleteGood work bro. Hope Rendu company um sikiram normal aaganum
ReplyDeleteSuper article bro
ReplyDeleteNice Brother
ReplyDeleteGood job thambiiii
ReplyDeleteExcellent bro . U have taken much efforts
ReplyDelete🎉🎉
ReplyDeleteThank you bro 🎉
ReplyDeletePlease let us know the correct range to start accumlate tata motors passenger bro... waiting for that
ReplyDeleteBro neenga soldra details ellam romba knowledge full haa irruku bro thanks for your information
ReplyDeleteThis shows your hardwork in collecting all these information and putting it together for our understanding. Thank you so much. This article is really helpful to understand more about ongoing issues with automobile sector
ReplyDeleteExcellent bro . Keep going. We grow 🪴 together with you bro . Thanks a lot bro.
ReplyDeleteVery useful and expected article...thank you bro
ReplyDeleteVery useful information brother
ReplyDeleteThanks bro
ReplyDelete