Maruti Suzuki Q4 Results Profits down dividend announced
இந்திய ஆட்டோமொபைல் துறையின் no1 நிறுவனமான Maruti Suzukiயின் நான்காவது காலாண்டு முடிவுகள் வந்துள்ளது.
முதலில் காலாண்டு முடிவுகளை பார்த்த பின்னர் Auto sector பங்குகள் பற்றி சிறிது விவரிப்போம்.
நடந்து முடிந்த நான்காவது காலாண்டில் Maruti Suzuki நிறுவனம் தனது முடிவுகளை சற்று முன் வெளியிட்டுள்ளது. அதில் எதிர்பாராத விதமாக லாபம் சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Q4 Results
Net profit நிகரலாபம் 3659 கோடி ரூபாயாக உள்ளது இது போன வருடத்துடன் ஒப்பிடும் போது 6.5 சதவீதம் சரிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் போன காலண்டான Q3 உடன் ஒப்பிடும் போதும் லாபம் சரிவு Q3 இல் மட்டும் 3879 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.
ஆனால் நிறுவனத்தின் வருவாய் கணிசமாக வளர்ந்துள்ளது. இந்த காலாண்டில் 52462.5 கோடி ரூபாய் வருமானத்தை விற்பனை மூலம் கொண்டு வந்துள்ளது. இதே போன வருடம் உடன் ஒப்பிடும் போது 40920 கோடி ரூபாயாக உள்ளது சுமார் 28 சதவீதம் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஏன் லாபம் சரிவு
ஒரு கேள்வி வரலாம் GST குறைப்பின் காரணமாக வாகனங்கள் விற்பனை நன்றாக இருந்தது ஏற்றுமதியும் சிறப்பாக செய்து ஏற்றுமதியிலும் முதன்மையாக இருந்தும் இப்படி பட்ட சரிவு ஏன்?
அதற்கான பதில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான வரி தொடர்பான செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ளது, அது மட்டும் இல்லாமல் raw material செலவினங்கள் அதிகரிப்பு நிறுவனத்தின் லாபத்தை வெகுவாக குறைந்துள்ளது. இது தான் முக்கிய காரணம் லாபம் சரிய என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
முழு ஆண்டு Performance
அடுத்து நிறுவனத்தின் FY26 வளர்ச்சி எப்படி உள்ளது என்று பார்த்தால் பெரிய முன்னேற்றம் இல்லை FY26 இல் 14680 கோடி ரூபாய் லாபமும் FY25 இல் 14500 கோடி ரூபாய் லாபமும், FY24 இல் 13488 கோடி ரூபாய் லாபம் பதிவு செய்துள்ளது.
கடந்த 3 வருட லாப வளர்ச்சி போதிய அளவில் இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிந்து உள்ளோம்.
வீழச்சியும், எதிர்கால வாய்ப்பும்
கடந்த சில ஆண்டுகளாக auto பங்குகள் விலை விண்ணளவு உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி கொடுத்துள்ளது. ஆனால் தற்போது சில auto நிறுவனங்களின் பங்கு விலை சரிய ஆரம்பித்துள்ளது.
அதில் முன்னணி நிறுவனம் டாடா மோட்டார் பெரும் சரிவை சந்தித்தது அதை பற்றியும் விவாதித்துள்ளோம். அதன் பிறகு ஒரு சுமார் performance என்றால் Maruti Suzuki தான் பங்கு விலை கடந்த 3 ஆண்டுகளில் பங்கு விலை இரட்டிப்பானது 17000 ரூபாயை தொட்டது தற்போது சரிந்து 13000 அருகில் உள்ளது பெரும் நஷ்டம் இல்லை என்றாலும் லாபம் சரிந்துள்ளது.
அதே நேரத்தில் maruti Suzuki அவர்களின் திட்டதை மாற்றி லாபத்தை பெருக்கும் யுக்தியும் நன்றாக கை கொடுத்து வருகிறது இன்னும் வரும் ஆண்டுகளில் SUV ரக கார்கள் விற்பனையில் கணிசமாக வளரும் என்பதை தற்போதைய வளர்ச்சி மூலம் தெரியப்படுத்தியுள்ளது.
ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் நமக்கும் ஏதாவது வாய்ப்பை ஏற்படுத்தும் என்று எண்ணமும் எனக்கு மிகுதியாக உள்ளது. இது மட்டும் அல்லாமல் நமது நாட்டில் அதிகரிக்கும் போட்டி தன்மை காரணமாக உதாரணத்திற்கு JSW motors இன்னும் வாகனத்தை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும் சீன நிறுவனங்கள் உடனான கூட்டணி சந்தையில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் அதற்காக இடம் சந்தையில் தற்போது பிரகாசமாக உள்ளது எனவும் எண்ணுகிறேன் இவை அனைத்தும் நமக்கு வாய்ப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கிறேன்.
பொறுத்து இருந்து பார்போம் இத்துறையை பற்றி மேலும் Maruti Suzuki மட்டும் இல்லாமல் இன்னும் பல Auto பங்குகள் வாய்ப்பை ஏற்படுத்தலாம் அதற்கான சாத்திய கூறுகள் ஏறலாம் அதையெல்லாம் வரும் காலங்களில் விரிவாக பார்ப்போம்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

23 Comments
Nice bro
ReplyDeleteSuper bro. Further aa important company results elam inga artical aave share panunga bro.
ReplyDeleteHope we get opportunity in automobiles stocks..
ReplyDelete👍
ReplyDelete👍
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா🙏🏼
ReplyDeleteThank you 🙏
ReplyDeleteThanks for the information
ReplyDeleteOne suggestion can you write more articles about mid cap stocks because antha mari stock update find panrathu kastama iruku so can you analyse few mid and small cap stocks in articles
Nice bro
ReplyDeleteSeems competition is so high in augomobile but why can't we focus on companies who manufacture automobile components unga perspective konjam sollunga bro
ReplyDelete🎉🎉❤️
ReplyDeleteThank you 🙏
ReplyDeleteThank you bro
ReplyDeleteநன்றி நண்பரே 🙏
ReplyDeleteGood work bro
ReplyDeleteNext time Q3 Q4 and yearly comparison table or chart la explain panna understanding easy aa irukum bro
Adds varla bro website access ku nallaruku no issues
ReplyDelete👍
ReplyDeleteThanks for information brother
ReplyDeleteBro suzuki spare parts sales evlo atha konjam solluga
ReplyDelete❤️❤️❤️❤️❤️
ReplyDeleteவலாச்சி பெருகட்டும்
ReplyDeleteThanks bro 👍
ReplyDelete👌
ReplyDelete