ஒரு காலத்தில் CPU தயாரிப்பில் முன்னணியில் இருந்த Intel நிறுவனம் தற்போது அதன் சந்தை பங்கை இழந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம் இதன் காரணங்களை அவ்வபோது நாம் பேசி இருந்தாலும் விரிவாக பேச வேண்டிய நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது.
தவறான முடிவுகள்
Intel பல தவறான முடிவுகள் எடுத்துள்ளது Nvidia வை வாங்காமல் தவிர்த்தது. GPU சரியான காலத்தில் தயாரிக்காமல் தள்ளி போட்டது.
அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு புது மாற்றங்களை கொண்டு வராமல் இருந்தது.
நவீன உற்பத்தி தொழில் நுட்பத்திற்கு மாறாமல் இருந்தது குறிப்பாக போட்டியாளர் 5nm chip Arumugam செய்யும் போது இவர்கள் 10nm chip களை விற்று வந்தது என பல தவறுகள் செய்து உள்ளனர்.
ஆனால் இதை தாண்டி அவர்கள் செய்த முக்கிய தவறு தான் இவர்கள் Market Share ஐ AMD இடம் இழப்பதற்கு முக்கிய காரணமே இதன் நான் மட்டும் சொல்ல வில்லை AMD நிறுவனத்தின் மேலாளரே இதை சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதை பற்றி எல்லாம் விரிவாக நாம் வீடியோவாக பார்த்துள்ளோம். அதன் படி தான் இந்நிறுவனத்தில் கவனம் செலுத்தினேன் மாற்றம் வரும் என்று நம்பினேன் அந்த மாற்றம் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக நடக்க ஆரம்பித்துள்ளது.
முக்கிய தவறு
சரியாக 2002 இல் Intel அதனுடைய server CPU வில் SMT என்கிற Simultaneous Multithreading ஐ அறிமுகம் செய்தது. அதன் பிறகு அதன் desktop CPU-விழும் அதனை அறிமுகம் செய்து திறனை அதிகரித்து வேகம் சார்ந்த போட்டியில் AMD-யை விட முன்னணியில் தொடர்ந்து நீடித்து வந்தது.
ஆனால் தற்போது உள்ள CEO க்கு இருந்த முந்தைய CEO இந்த SMT என்கிற Simultaneous Multithreading-ஐ கை விட சில காரணங்களை முன்வைத்தது மட்டுமில்லாமல் முழுவதுமாக desktop மற்றும் server CPUகளில் நீக்கினார்.
இதன் விளைவு AMD இன் செயல் திறனை intel இன் புது architecture பூர்த்தி செய்ய முடியவில்லை. அதை அறிந்தும் அந்த பிரச்சினையை சரி செய்ய அந்த CEO முன் வராதது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் 2002 இல் அறிமுகப்படுத்திய ஒரு தொழிநுட்பத்தை AMD 2017 ஆம் ஆண்டு தான் அவர்கள் CPU வில் கொண்டு வந்தனர்.
SMT இன் தேவையை சரியாக AMD உணர்ந்த தருணத்தில் Intel ஏன் நீக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது ஆனால் அதற்கு இன்டெல் கூறிய காரணம் Power efficiency மற்றும் security-ஐ காரணமாக கூறினார்கள் இது ஏற்ற கொள்ள கூடிய காரணம் இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள். நான் யூகிப்பது என்ன என்றால் வேண்டுமென்றே திட்டமிட்டு செயல் திறனை குறைத்துள்ளனர் என்பது தான்.
எப்போது இதை செய்தார்களோ intel நிறுவனத்தின் Market share சரிய ஆரம்பித்து AMD வேகமான CPU வாக மாறியது மட்டுமில்லாமல் data center மற்றும் desktop இரு இடங்களிலும் மார்கெட் share உயர ஆரம்பித்தது. இதன் விளைவு பழைய CEO ஆன pat gelsinger பணியை விட்டு துரத்தி அடிக்கப்பட்டார்.
அவரின் அத்தகைய தவறான முடிவு இன்னும் நிறுவனத்தை பாதித்து வருகிறது. தற்போது சில வருடங்களுக்கு பிறகு புதிதாக வந்த CEO மீண்டும் இந்த Simultaneous Multithreading SMT ஐ அறிமுகப்படுத்த உள்ளார் என்பது Intel நிறுவனத்தை பொறுத்தவரை மிகவும் நல்ல செய்தி.
எதிர்கால வளர்ச்சி திட்டம்
ஒரு பக்கம் foundry பிரிவு வெளிப்புற வாடிக்கையாளர்கள் இல்லாமல் தற்போது இருந்தாலும் விரைவில் பல முன்னணி நிறுவனங்கள் custom Chip makers Intel foundry-யை உபயோகிக்க அதிக வாய்ப்புள்ளது tsmc-ஐ முந்த வாய்ப்பில்லை என்றாலும் கணிசமாக வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது.
அடுத்து core business ஆன Chip வணிகம் முன்னர் கூறியபடி intel அதன் பழைய தொழில்நுட்பமான SMT Simultaneous Multithreading மீண்டும் புது CEO தலைமையில் அறிமுகப்படுத்த உள்ளது.
அடுத்து வர உள்ள diamond rapids data center CPU தான் நிறுவனத்தின் கடைசி SMT அல்லாத CPU வாக அமைய உள்ளது. அதன் பின் வர இருக்கும் coral rapid SMT உடன் வர இருப்பது data center business இல் மீண்டும் speed ஐ உயர்த்தி Market share-ஐ கொண்டு வரும் என்று நம்பலாம் மேலும் advanced chip packaging மேலும் கூடுதலான ஒரு முன்னிலையை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன்.
சாதாரண ஒரு நபராக என்ன பிரச்சனை ஏன் Intel CPU performance சரியாக இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளதை அப்பெரும் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உணர்ந்து கொள்ளாமல் இருந்திருப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை மேலும் என் சந்தேகம் என்ன என்றால் பங்கின் விலையில் மாற்றங்களை உண்டாக்க கூட செய்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்னும் வெளிப்படையாக சொல்வது கடிது நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நடக்க இருக்கும் foundry மற்றும் CPU மாற்றங்களை முன்கூட்டியே கணித்துள்ளோம் அது சரியாக நடந்து வருகிறது. விரைவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதனால் இந்த நிறுவனத்துடன் பயணம் செய்வது மகிழ்ச்சியை தருகிறது.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.


21 Comments
Vanakkam bro
ReplyDeleteNice bro
ReplyDeleteMay be venumne panirukalam. Yaaro ithula benefit adaiyaranga. Super explanation bro. ❤️
ReplyDeleteEnaku ena varutham na oru nala indian company endha madhri global leader ra ila chip la.
ReplyDeleteNalla hard work panni irrukiga brother
ReplyDeletethank you. please share update about qualcomm.
ReplyDeleteGood article tq for the hard work you put into each article 🤝
ReplyDeleteIntel's foundry will make more revenue soon
ReplyDelete🎉🎉❤️
ReplyDeleteYour article is very informative.
Qualcomm article needed bro.
Thanks ❤️
🙏🏼🌹🌹
ReplyDeleteநன்றி நண்பரே 🙏
ReplyDelete👍
ReplyDeleteThanks for information brother
ReplyDeleteWhat is the best range for fresh entry at Intel bro?
ReplyDeleteAgree bro, Nice article, informative.. I focused when it came into range below 20$.. Now ennamaari oru growth paarunga.. really appreciate you..Keep it up and travel with us till last breath..Thanks a lot bro 💕
ReplyDeleteThank you
ReplyDelete❤️❤️❤️
ReplyDeleteதொடர்உழைப்பு சமரசமற்ற ஆய்வு சிறப்பு
ReplyDeleteUsed full
ReplyDelete❤️❤️
ReplyDelete❤️
ReplyDelete