உலக நாடுகளில் உள்ள பல முதலீட்டாளர்கள் இந்த நிறுவனம் மூடப்படும் என்றும் அடுத்த nokia என்றும் கூறி தவற விட்ட நிறுவனம் தற்போது வரலாற்றில் இல்லாத அளவுக்கு பங்கின் விலை உயர்ந்து உள்ளது.
அது வேறு எந்த பங்கும் இல்லை முதன்முதலில் cpu வை தயாரித்த intel நிறுவனம் தான். சமீபத்திய performance பற்றி தான் நாம் பார்க்க உள்ளோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு intel நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வந்தது அந்த முடிவுகள் வந்த உடன் நிறுவனத்தின் பங்கு விலை 23 சதவீதம் வரை உயர்ந்தது வெறும் intel நிறுவன பங்கு விலை மட்டும் உயரமால் போட்டி நிறுவனமான Amd-ம் 13 சதவீதம் உயர்ந்தது.
இந்த அளவு ஏற்றம் தரும் அளவிற்கு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்ததா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில் அதன் புள்ளி விவரம் பற்றி கீழே காண்போம்.
Intel நிறுவனம் இந்த காலாண்டில் $13.6 பில்லியன் டாலர்கள் வருமானத்தை ஈட்டி உள்ளது போன வருடத்துடன் ஒப்பிடும் போது வளர்ச்சி உள்ளது.
ஆனாலும் நிறுவனம் இந்த காலாண்டில் $3.7 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. இவ்வளவு நஷ்டம் ஏற்பட்டும் பங்கு விலை ஏற காரணம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மட்டுமே காலாண்டு முடிவு படி நிறுவன பங்கு விலை ஏற வில்லை என்று புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Intel மட்டுமில்லாமல் amd போன்ற பங்குகள் ஏறுவதற்கு முக்கிய காரணம் GPU-க்கு மாறாக cpu demand அதிகமாகும் என்ற நம்பிக்கை அதுமட்டுமில்லாமல் இந்த காலாண்டில் $5.1 பில்லியன் டாலர்கள் data center CPU மூலம் மற்றும் நிறுவனம் வருமானம் ஈட்டியுள்ளது இது சுமார் 22% வளர்ச்சி ஆகும்.
மேலும் cpu விலைகளை இரண்டு நிறுவனங்களும் கணிசமாக உயர்த்தியுள்ளது இதனால் வருங்காலத்தில் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்பு அதிகம் என்பது காரணம்.
Intel புது உச்சம்
2000 ஆம் ஆண்டு intel நிறுவன பங்கு $75 டாலரில் இருந்தது தான் நிறுவன பங்கின் உச்சபட்ச உயரம் ஆனால் தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு அந்த உச்சம் உடைக்கப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
இதை நாம் முன்கூட்டியே கணித்தோம் தொடர்ந்து இந்நிறுவனத்துடன் பயணம் செய்து வருகிறோம். வெறும் CPU வருவாய் வளர்ச்சியை தாண்டி எதிர்கால வளர்ச்சி நிறுவனத்தை உச்சத்திற்கு கொண்டு போய் உள்ளது.
சமீப காலத்தில் intel பல வெற்றிகளை அடைந்து வருகிறது ஆனால் அது லாபமாக மாற இன்னும் சில காலம் எடுக்கும் அதுவரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியம்.
சில வெற்றிகள்,
Google நிறுவனம் தொடர்ந்து அவர்களுடைய AI தேவைகளுக்கு Intel xeon CPU பயன்படுத்துவதை உறுதி செய்து உள்ளது.
Tesla elon musk உடன் ஒப்பந்தம் car, robots, rockets, AI chip களை Intel நிறுவனம் அதன் foundry இல் தயாரிக்க உள்ளது இன்னொரு வெற்றி.
Apple நிறுவனத்தின் CPUவை தயாரிக்கும் deal மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை தந்துள்ளது.
Nvidiaவின் gpu உடன் Intel CPU இடம் பெறும் என்ற அறிவிப்பு வருங்காலத்தில் நல்ல லாப வளர்ச்சியை அடைய வாய்ப்புள்ளது.
Foundry பிரிவிற்கு எதிர்பார்த்த புது வாடிக்கையாளர் இன்னும் வாராமல் இருந்தாலும் விரைவில் Tesla, apple, microsoft உடன் ஆன ஒப்பந்தம் விரைவில் வருமானத்தை ஏற்படுத்தும்.
இவை எல்லாம் தாண்டி cpu வணிகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் திட்டம் உள்ளது இதை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் உங்களிடம் இருக்கும் என்று நம்புகிறேன் எவ்வாறு intel amd இடம் தோல்வியை தழுவினார்கள் எதிர்கால திட்டம் எவ்வாறு நிறுவனத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

13 Comments
👍
ReplyDeleteNice bro
ReplyDeleteThank you so much bro...🫂
ReplyDeleteWhat is gpu brother
ReplyDeleteThanks for information brother
ReplyDelete👍
ReplyDelete❤️
ReplyDeleteThankyou for sharing the knowledge. Because of you i learnt lot of things about US market, particularly on volatility even though im not invested in US. Your conviction on Intel become jackpot for those who invested. Keep growing bro.
ReplyDeleteSuperb explain bro. May be ungaluku time iruntha daily um artical post pana try panunga.
ReplyDeleteThen Lodha and DLF pathi already oru artical post pannirukinga. Athoda continues um artical la share panunga. Lodha pathi artical quick aa post panunga bro. Ninga post pana nanga study panni opportunity ku ready aa irupom.
Nice bro..
ReplyDelete👍 Neenga focus pannum Smallcap, Midcap stocks pathi analysis panni article podunga thambi. It will be very useful to our friends circle.
ReplyDeleteVery good explanation bro thanks for the article and write more about US stocks it's intresting to learn new things and new ideas 👍🏻
ReplyDelete🎉🎉❤️
ReplyDeleteBro can you make a video on how to collect information like this.