Header Ads Widget

Responsive Advertisement

Mega merger Unilever - mccormick சந்தையில் அடி

சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஒரு செய்தி Unilever நிறுவனம் அதன் Food business-ஐ விற்க போகிறார்கள் என்பது தான். 

ஆனால் அதனை மறுத்து வந்தது Unilever தற்போது இந்த செய்தி உறுதியானது Unilever-ன் food business தனியாக பிரிக்கப்பட்டு அதை McCormick நிறுவனத்துடன் இணைக்க போவதாக அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து unilever பங்கின் விலை தற்போது 6% வரை அமெரிக்க சந்தையில் சரிந்துள்ளது. 

இந்த deal-ஐ பற்றி விரிவாக பார்ப்போம் இதனால் இந்திய சந்தையில் உள்ள hindustan unilever-ல் மாற்றம் ஏதேனும் நடக்குமா என்பதையும் காண்போம்.


Unilever - Mccormick 

Mccormick நிறுவனம் Unilever-ன் food business-ஐ $45billion dollar மதிப்பில் வாங்க உள்ளது இதில் $15.7 billion  ரொக்கமாகவும் மீதம் பங்குகளாகவும் இருக்க போகிறது.

இந்த mccormick அமெரிக்காவை சார்ந்த ஒரு மசாலா தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த deal மூலம் புகழ்பெற்ற brands ஆன hellmanns and knorr மற்றும் பல brands mccormick கீழ் செயல்படும்.

இந்த deal மூலம் $60b மதிப்புடைய நிறுவனமாக மாறப்போகிறது. இதனால் Unilever-க்கு பாதிப்பு ஏற்படுமா என்று பார்த்தால் என்னை பொறுத்தவரை நடக்காது மேலும் வணிகம் விரிவடைய வாய்ப்புள்ளதாக எண்ணுகிறேன். 

இந்த merger மூலம் உருவாக போகும் நிறுவனத்தில் 65% பங்குகள் Unilever இடமே இருக்க போகிறது. இந்த வணிகத்தை மேலும் உலகெங்கும் கொண்டு செல்லும் யுக்தியும் நிறுவனம் செய்ய தயாராக உள்ளது.

மேலும் இனி Unilever நிறுவனம் personal care பிரிவை மேற்கொண்டு சிறப்பாக கவனிக்கவும் முடிவு செய்துள்ளது.


HUL-க்கு பாதிப்பு 

இந்த merger-ஆல் HUL-க்கு எந்த பாதிப்பும் இல்லை ஏனெனில் இந்தியா உட்பட சில நாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளன. 

இந்தியாவில் உள்ள வணிகம் Unilever-க்கு பெரிதும் முக்கியம் அதனால் இப்போதைக்கு பெரிய மாற்றம் வருவதற்கு வாய்பில்லை. 

இந்த முக்கிய செய்தி காரணமாக அமெரிக்க சந்தையில் சரிந்துள்ளது மேலும் நமது சந்தையிலும் சரிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

அதனை மேற்கொண்டு கவனிக்க வேண்டும் FMCG பொறுத்தவரை தவிர்க்க முடியாத நிறுவனமாக செயல்படும் நிறுவனத்தை நிச்சயம் கவனிக்கப்பட கூடிய ஒன்றாக இருக்கும்.




Disclaimer: பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, எனவே முதலீடு செய்வதற்கு முன், சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். உங்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பிற்கும் Retailoptions பொறுப்பேற்காது.

Post a Comment

21 Comments

  1. Thanks for the article bro... HUL positive haa trade aaguthu market opening la. Will wait and see..

    ReplyDelete
  2. HUL may reach at 23 PE if the war continues

    ReplyDelete
  3. Thanks bro morning update 👍

    ReplyDelete
  4. Bhu today HUL ஏறி இருக்கே.. நாளை பார்க்கலாம்

    ReplyDelete
  5. Thanks brother for the quick note. One suggestion, can you add this Enter Comment option on top to access easily without scrolling down to write the comments

    ReplyDelete